பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, September 4, 2014

தென்மொழி : தென்மொழி : தமிழ் வாழ வேண்டுமா ? - பாவலரேறு பெருஞ்சித்திரனார் -1970தமிழ் நாட்டின் உரிமை மீட்போம் !

தமிழை மீட்க வேண்டும் - தமிழ்

இனத்தை மீட்க வேண்டும் !

கமழக் கமழத் தமிழன் நாட்டைக்

கடிதில் மீட்க வேண்டும் !அமிழப் போவதில்லை - வேறு

ஆசை நமக்கிங்கில்லை !

இமையும் பொறுப்பதில்லை - முன்

இழந்த உரிமை வேண்டும் !வடவன் மொழியும் வேண்டா - அவன்

வழியும் நமக்கு வேண்டா !

வடவர் ஆட்சி வேண்டா ! - நாம்

வாழ உரிமை வேண்டும் !பொறுத் திருந்து விட்டோம் - பூனை

போல் வாழ்ந்து விட்டோம் !

வெறுத்து விட்ட தாட்சி - தமிழ்

வீர வாழ்க்கை வேண்டும் !கோழை யாகப் போனோம் - ஊமைக்

குருட ராக வாழ்ந்தோம் !

ஏழ்மை தொலைய வில்லை - தமிழ்

நாட்டின் உரிமை மீட்போம் !    -1993

கனிச்சாறு  - மூன்றாம் தொகுதி

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாடல்கள்

தென்மொழி பதிப்பகம்

செந்தமிழ் அடுக்ககம்

( சி.கே. அடுக்ககம் )

மேடவாக்கம் கூட்டுச்சாலை

மேடவாக்கம்

சென்னை - 600 100
------------------------
94444 40449

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment