பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, September 4, 2014

கனிச்சாறு : 2 : போர்ப்பாட்டு - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
முரசே முழங்குக ! முரசே முழங்குக !

முரசே முழங்குக, நீ !

அரசே செந்தமிழ் அரசே வாழ்கென,

முரசே முழங்குக நீ !சங்கே ஊதுக ! சங்கே ஊதுக !

சங்கே ஊதுக, நீ !

எங்கோ மூவர் ஏற்றிய தமிழெனச்

சங்கே ஊதுக, நீ !
பம்பை பம்புக ! பம்பை பம்புக !

பம்பை பம்புக, நீ !

எம்பைந் தமிழர சோச்சுக என்றே

பம்பைஒ பம்புக, நீ !கொம்பே அலறுக ! கொம்பே அலறுக !

கொம்பே அலறுக நீ !

எம்பே ரிசைத் தமிழ் எங்கணும் முழங்கிடக்

கொம்பே அலறுக, நீ !கரடிகை உறுமுக ! கரடிகை உறுமுக !

கரடிகை உறுமுக, நீ !

நெருடர் நுழைக்கும் வடமொழி விரட்டிடக்

கரடிகை உறுமுக, நீ !முழவே முரலுக ! முழவே முரலுக !

முழவே முரலுக, நீ !

கழலணி மறவர்கள் விறல்பெற நடந்திட

முழவே முரலுக, நீ !பறையே பிறங்குக ! பறையே பிறங்குக !

பறையே பிறங்குக, நீ !

பொறையே கொண்டவர் பொங்கிடில் தீதெனப்

பறையே பிறங்குக, நீ !உறும்பே கறங்குக ! உறும்பே கறங்குக !

உறும்பே கறங்குக, நீ !

உறும்பே ரிடும்பினும் உணர்வுளோம் யாமென

உறும்பே கறங்குக, நீ !  - 1952


கனிச்சாறு -இரண்டாம் தொகுதி

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்

தென்மொழி பதிப்பகம்

செந்தமிழ் அடுக்ககம்

(சி.கே.அடுக்ககம் )

மேடவாக்கம் கூட்டுச்சாலை

மேடவாக்கம்

சென்னை - 600 100
-------------------------
94444 40449

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment