பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, September 25, 2014

தமிழ்த் தலைவர்க்கு - பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1950-இல் எழுதியது !தமிழ்த்  தலைமை   தாங்குவரே,   தண்டமிழ்க்குத்   
தணிப்பறியாக்   கொடுமை    செய்தே
அமிழ்பகைவர்   தம்பாலே   தகுபொருளைத்
தண்டுகின்றார்,   அவர்க்குச்   சொல்வோம்!
தமிழ்க்குலத்தீர் !   தமிழ்குலைத்தீர் !   தமிழ்ப்பண்பு
தனை   விட்டீர்,   உங்கள்   வாழ்வும்
தமிழ்த்தாயின்   வாழ்வன்றோ ?   அந்நன்றி
தனக்கேனும்   தமிழ்காப்   பீரே !   

கனிச்சாறு -  1 - பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்

வெளியீடு

தென்மொழி   பதிப்பகம்

செந்தமிழ்   அடுக்ககம்

( சி.கே. அடுக்ககம் )

மேடவாக்கம் கூட்டுச்  சாலை

மேடவாக்கம்

சென்னை - 600 100.

94444 40449     

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment