பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, August 31, 2014

24 கைவினைஞர்களுக்கு விருது: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்


தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 
கோயில் கட்டடக் கலையில் சிறந்து விளங்கும் காரைக்குடியைச் சேர்ந்த 90 வயது எஸ்.கே.ஆச்சாரிக்கு "வாழும் கைவினைப் பொக்கிஷம்' விருதை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் வழங்கினார். 
உடன், ஊரகத் தொழில்-தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ப.மோகன், 
கைத்தறித் துறை முதன்மை செயலர் ஹர்மந்தர் சிங், 
தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தின் 
மேலாண்மை இயக்குநர் ஷீலா ராணி சுங்கத்

கோயில் சிற்பங்களை வடிவமைத்தல், சித்திரைத் தையல் வேலை உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் 24 கைவினைஞர்களுக்கு தமிழக அரசின் விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டன. இதன் அடையாளமாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏழு கைவினைஞர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அண்மையில் விருது வழங்கினார்.
24 விருதுகள்: இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த ஆண்டு தமிழக அரசு உருவாக்கிய உயரிய விருதான "வாழும் கைவினைப் பொக்கிஷம்' விருதுக்கு 10 கைவினைஞர்களும்,
பூம்புகார் மாநில விருதுக்கு 14 கைவினைஞர்களும், தேர்வு செய்யப்பட்டனர். "வாழும் கைவினைப் பொக்கிஷம்' விருதுக்கு காரைக்குடியைச் சேர்ந்த கோயில் கட்டடக் கலை கைவினைஞர் எஸ்.கே.ஆச்சாரி (90 வயது) உள்பட 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதே போன்று பூம்புகார் மாநில விருதுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சித்திரைத் தையல் கைவினைஞர் மேரி சாந்தா உள்பட 14 தேர்வு செய்யப்பட்டனர். எஸ்.கே.ஆச்சாரி, மேரி சாந்தா உள்பட 7 பேருக்கு அடையாளமாக முதல்வர் ஜெயலலிதா விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
பொக்கிஷம் விருது: ஜப்பான் நாட்டில் வாழும் தேசிய பொக்கிஷங்கள் எனும் விருதை 7 விதமான கலைப்பொருள்கள் தயாரிக்கும் கைவினைஞர்களுக்கு ஜப்பான் அரசு வழங்கி வருகிறது.
இதே போன்று தமிழகத்திலும் கைத்திறன் தொழிலில் சிறந்து விளங்கி அதற்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் என்ற உயரிய விருது இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கடந்த மே 8-ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். கைவினைஞர்களைப் பொக்கிஷமாகக் கருதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருது நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பஞ்சலோகச் சிற்பங்கள், பித்தளை விளக்குகள், பித்தளை கலைப்பொருள்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் கலைத்தட்டுகள், மர சிற்பங்கள், கற்சிற்பங்கள், சுடுகளிமண், கலம்காரி, பத்திக், அப்ளிக் துணி ஓவியங்கள், காகிதக் கூழ் பொம்மைகள், பாய் நெசவு, மூங்கில் மற்றும் பனை ஓலை பொருள்கள், நெட்டி வேலை, நார் பொருள்கள், கோவில் நகைகள், சித்திரத் தையல் வேலை, இதர கைவினைப் பொருள்கள் ஆகிய 16 விதமான கைத்திறன் தொழில்களில் இருந்தும் கைதேர்ந்த 65 வயதுக்கும் மேற்பட்ட 10 கைவினைஞர்களை தேர்வுக்குழு மூலம் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது பெறும் கைவினைஞர்களுக்கு ரூ.1 லட்சம், தாமிரப் பத்திரம், ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகிறது.
பூம்புகார் விருது: கைவினைஞர்களுக்கு வழங்கப்படும் பூம்புகார் விருது, 2002-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் மாநில விருது என்ற அங்கீகாரத்துடன் வழங்கப்படுகிறது.
இந்த விருது ரூ. 50 ஆயிரம், 4 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், தாமிரப்பத்திரம், சான்றிதழ் ஆகியவைக் கொண்டதாகும்.
இதுவரை 237 பேருக்கு விருது: 2010-11-ஆம் ஆண்டு தொடங்கி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 237 விருது கைவினைஞர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கியுள்ளது.
நன்றி : தினமணி

எழுத்தாளர் சந்திப்பு படைப்பரங்கம்



ஸ்ரீவில்லிபுத்தூர், கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் 162ஆவது எழுத்தாளர் சந்திப்பு படைப்பரங்கம் கோதையூர் மணியன் தலைமையில் நடைபெற்றது.
கே.ஆர்.எம். ஜெயா, முத்துக்குமார் ஆகியோர் இசைப் பாடல் பாடினர். சந்திரசேகர் வரவேற்றார்.
எழுத்தாளர், ஓவியர் மற்றும் கவிஞருமான அல்லிநகரம் தாமோதரனைப் பாராட்டி எஸ்.எஸ். மணியம், மங்கையர்செல்வன், அன்னக்கொடி ஆகியோர் பேசினர்.
எழுத்தாளர் தாமோதரன் ஏற்புரையாற்றினார். படைப்பரங்கில் எஸ்.எஸ்.ஆர். லிங்கம், தமிழ்ப்பித்தன், சந்திரேசகர், முத்துக்குமார் ஆகியோர் படைப்புகளை வாசித்தனர்.
பின்னர் படைப்புகள் விமர்சனம் செய்யப்பட்டன.
நன்றி : தினமணி

அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு



இராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை வழங்கும் ராணி லேடி மெய்யம்மை ஆச்சி விருது, தெய்வத்திரு சிகப்பி ஆச்சி விருது ஆகியவற்றுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த விருதுகள் ஒவ்வொன்றுக்கும் தலா இரண்டு லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
இது குறித்து ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"இராணி மெய்யம்மை ஆச்சி' விருதுக்கு, பெண்களின் முன்னேற்றத்துக்கு தொண்டாற்றி வரும் பெண்கள் மற்றும் நிறுவனங்களும், "தெய்வத்திரு சிகப்பி ஆச்சி' விருதுக்கு ஆன்மிகத்துடன், ஒழுக்கம், பண்பாடு ஆகியவற்றை வலியுறுத்தி கல்வி அளிக்கும் நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன் நிறுவனப் பதிவுச் சான்றிதழின் நகல், 
2013-2014-ஆம் ஆண்டு தணிக்கைச் சான்றிதழின் நகல், 
நிறுவனம் செய்து வரும் பணிகள் ஆகியவற்றுடன்,
 செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் 
"செயலாளர், 
இராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை, 
இராணி சீதை மன்றம், 
603, அண்ணா சாலை, 
சென்னை - 600 006' 
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் 
என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமணி

Friday, August 29, 2014

குமுதம் : 03 - 09 - 2014 - ரஜினி முடிவு ? - இன்னும் எவ்வளவு காலம்தான் தமிழக அரசியல் திரைத்துறையில் மையம் கொள்ளும் ?



ரஜினி மங்களூரில் “மக்கள் முடிவு செய்ய வேண்டும்“ என்று சொல்லியிருப்பது அர்த்தமற்ற பேச்சு. 

இயலாத சூழ்நிலகளில் எல்லாம் அரசியல்தலைவர்கள் சொல்லும் “மக்கள் கவனித்துக் கொள்வார்கள்” என்பதைப் போன்றதே அது.. 

மக்கள் முடிவு செய்ய ரஜினி வாக்கெடுப்பு நடத்தப்போகிறாறா? 

அப்படி நடத்தினால், 

1) அரசியலில் ஈடுபடுவதா? வேண்டாமா? 

2) தனிக்கட்சி துவங்குவதா? வேண்டாமா?

3)  தனிக் கட்சி வேண்டாம் என்றால் எந்தக்கட்சியில் சேருவது ?   

4) தனித்துச் செயல்படுவதா?  கூட்டணி அமைத்துச் செயல்படுவதா? 

5) கூட்டணி யாருடன் ? 

இந்த வினாக்களை எல்லாம் கேட்கப் போகிறாறா, ரஜினி ? 

மங்களூர்ப் பேச்சு உண்மை என்றால் வாக்கெடுப்பு நடத்துவதுதானே நியாயம் ? 

இன்னும் எவ்வளவு காலம்தான் தமிழக அரசியல் திரைத்துறையில் மையம் கொள்ளும் ?

வாக்கெடுப்பில் பொதுமக்கள் பங்களிப்பை எப்படிப் பெறப்போகிறார் ரஜினி ? 

 மங்களூர்ப் பேச்சு “லிங்கா”-விற்காக அல்ல என்பது உண்மையானால் , ரஜினி பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யட்டும். 

வாக்கெடுப்பை எப்படி நடத்துவது என்கிறீர்களா? 

ரசிகர் மன்றங்கள் மூலம் நடத்துவது பொருட்செலவு / கால விரயம். 

நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தினாலே போதும்.

வீட்டிலிருந்தபடியே கணினிமூலம் தீர்மானித்துக் கொள்ளலாம். 

ஆனால், ஒரு வார்த்தை. தமிழகத்தில் வாக்களிக்கும் தகுதிபெற்றோர் எண்ணிக்கையில் குறைந்தது 55% வாக்குகளுக்குமேல் பெற்றாக வேண்டும். 

 “மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்பது பாமரத்தனமான பேச்சு. பேசியவர் ரஜினி என்பதால் ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன என்பதே உண்மை. 

குமுதமும் விட்டு வைக்கவில்லை. பயன்படுத்திக்கொண்டது.

 வருவாய் ஈட்டும் தொழில்களில் சினிமாவும் ஒரு பிரிவு. அதில் ரஜினிக்குத் தனியிடம் உண்டு. அவ்வளவுதான். 

சென்ற தேர்தலில் விஜகாந்த் கூட்டணியால்தான் அ.தி.மு.க. அரியணை ஏறியது.

ரஜினியுடன் கைகோர்த்தால் பா.ஜ.க கோட்டையைப் பிடிக்கிறதோ இல்லையோ பாராளுமன்றத் தேர்தலுக்கு நிச்சயமாக உதவும் என்பதுதானே பா.ஜ.க.வின் எதிர்பார்ப்பு.

கணிசமான வாக்குகளைப் பெற்றும்  தோல்வியைத் தழுவியது தி.முக.

. தோல்வி புகட்டிய பாடத்தால் “விகிதாச்சராப் பிரதிநிதித்துவத் தேர்தலை முறை “ பற்றிப் பேச ஆரம்பித்தார், கலைஞர்.

அதுவும் சரிதான். தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவந்தால் காட்சிகள் மாறும் அரசியல் கோமாளித்தனங்கள் குறையும். 

”எதிருக்கு எதிரி நண்பன்” என்ற உலக மகா தத்துவத்தில்,,

”அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்ற கோட்பாட்டில்,

கூட்டணிகள் அமைத்து 25% முதல் 35% வரை கூட வாக்குகள் பெறாதோர் ஆட்சியமைக்கும் அவலத்தை மாற்றி அமைக்க வேண்டாமா?

தன்வழி தனிவழி என்று பேசும் ரஜினி 

தேர்தல்  முறையில் மாற்றங்களைக் கொண்டு வந்தால்,

கொண்டுவர  வர முயற்சித்தால் 

வரலாற்றில் தனி இடம் பெறுவார் என்பது திண்ணம்..

எத்தனை ஆண்டுக்காலம்தான் தொடர்ந்து “மக்கள்” ஏமாறுவது ? “மக்களை” ஏமாற்றுவது ? 

மூதறிஞர் இராஜாஜிக்கு காங்கிரஸ்மீது ஏற்பட்ட  கோபமும் வெறுப்பும் ,

தி.முக. ஆட்சியில் அமரக் காரணம்,ஆனது. 

அந்தத் தவற்றினை  பா.ஜ.க செய்திட வேண்டாம்.

ரஜினியை அரசியலுக்கு இழுக்கவும் வேண்டாம். 

சினிமாமோக அரசியலும் வேண்டாம்.

இதுவே நாட்டிற்கும் நல்லது. வீட்டிற்கும் நல்லது

என்று தணியும் இந்த சினிமா மோகம்?.  

சங்கர இராமசாமி 

Thursday, August 28, 2014

மதுரையில் வலைப்பதிவர் திருவிழா : 26.10.2014 - ஞாயிற்றுக்கிழமை

part 1 photo PARTIMAGE.jpgpart 2 photo PARTIMAGE2.jpgpart 3 photo PARTIMAGE3.jpgpart 4 photo PARTIMAGE4.jpgpart 5 photo PARTIMAGE5.jpgpart6 photo PARTIMAGE56.jpgpart 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpgpart 9 photo PARTIMAGE9.jpgpart 10 photo PARTIMAGE10.jpgpart 11 photo PARTIMAGE11.jpgpart 12 photo PARTIMAGE12.jpgpart 13 photo PARTIMAGE13.jpgpart 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg photo PARTIMAGE16.jpg
தமிழ்ப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26-ம் நாள் அன்றும், 2013 செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அன்றும் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அதே போல்.....

மூன்றாம் ஆண்டு பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்து விட்டன...

நாள் : அக்டோபர் 26-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம் : மாரியம்மன் தெப்பக்குளம் மேலவீதியிலுள்ள கீதா நடனகோபால நாயகி மந்திர், மதுரை.

வாருங்கள் வலைப்பதிவர்களே... வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில் பங்கேற்கும் பதிவர்கள் அனைவரும் கீழுள்ள படிவத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பினால் போதும்...

படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் 15.10.2014 ஏதேனும் சந்தேகங்கள், விவரங்கள் தேவைப்பட்டால் :- திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com தமிழ்வாசி பிரகாஷ் -9080780981 - thaiprakash1@gmail.com

நூல் வெளியீடு : பதிவர்கள் தங்களின் நூல்களை இந்த மாபெரும் நிகழ்ச்சியில் வெளியிடலாம். அவ்வாறு நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 10.10.2014 க்குள் விவரங்களை கீழ்கண்ட நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள். சீனா ஐயா (வலைச்சரம்) cheenakay@gmail.com திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com

அன்பளிப்பு : இந்தச் சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பதிவர்கள், திண்டுக்கல் தனபாலன் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் அலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும். பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்துத் தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.


மேலும் தகவல்கள் / விபரங்கள் அடுத்தப் பதிவில் வெளியாகும். பதிவர்கள் இந்த விபரங்கள் குறித்து தங்களது வலைப்பதிவில் எழுதி அனைத்து பதிவர்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. சந்திப்போம்.
வலைப்பதிவர் விழா நிர்வாகக் குழு - மதுரை
http://www.tamilvaasi.com/2014/08/261014.html

நான் ஒரு தமிழ் மாணாக்கன் - ஜி.யூ.போப்

ஜி.யூ.போப் (1820 – 1907) இங்கிலாந்தில் பிறந்து கிறித்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து தமிழுக்காக சேவை செய்தவர்.
தமிழ் மீது பெரும் பற்று கொண்ட அவர் திருக்குறள், நாலடியார், புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு, மணிமேகலை, சிவஞான போதம் ஆகிய நூல்களை ஆங்கில மொழியாக்கம் செய்தார். செப்டம்பர் 1, 1886 அன்று திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். 1893 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். 1900 ஆண்டு திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ELEMENTARY TAMIL GRAMMAR என்னும் தலைப்பில் மூன்று பாகங்களாகத் தமிழ் இலக்கணத்தை மொழி பெயர்த்து எழுதினார். யான் முதன் முதலில் பயின்ற இலக்கணம் டாக்டருடையதே என்று திரு,வி.க புகழ்ந்து கூறினார்.


ஜி.யூ.போப் அவர்கள் தனது கல்லறைக்கென்று ஆகும் செலவில் ஒரு சிறு பகுதியாவது தமிழ் மக்களுடையதாக இருக்க வேண்டும். எனது கல்லறையின் மேல் ‘இவன் ஒரு தமிழ் மாணாக்கன்’ எனப் பொறித்து வைக்கவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார்.


தமிழ் மண்ணின் மைந்தர் - கரந்தை ஜெயக்குமார்

banner-kodaikanal-history

ஆண்டு 1891. கொடைக்கானல் குன்று. அவர் ஒரு ஆங்கிலேயர். வயதோ 77. நடைப் பயிற்சி முடிந்து, தற்காலிகமாகத் தங்கியிருந்த வீட்டிற்குத் திரும்பியபோது, அவரின் உடல் நடுங்கத் தொடங்கியது. மருத்துவர் வரவழைக்கப் பட்டார். மருத்துவம் பார்த்தும் பலன்தானில்லை.
     கருணைக் கடலாம் கர்த்தரை மனதில் நினைத்து, மறை  மொழிகளால் மனதாரத் தொழுது,புண்ணியா, உன்னிடமே போதுகின்றேன் என்றார். அடுத்த நொடி, அவரது மண்ணுலக வாழ்வு நிறைவு பெற்றது.
     அந்நாள் 28.8.1891
     அவரது மனைவிக்கும், மகனுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. கொடைக் கானல் குன்றிலிருந்து, பெரியவரின் உடலினை எப்படி அடிவாரத்திற்குக் கொண்டு செல்வது என்று அறியாது திகைத்தனர்.
     நண்பர்களே, இன்றைக்கு 120 ஆண்டுகளுக்கு முன்னர், கொடைக்கானல் குன்றுக்கு, இன்றுள்ளது போன்ற சாலை வசதிகள் ஏதும் கிடையாது.
     அம்மை நாயக்கனூர் என்னும் ஊரிலிருந்து, கடும் பாறையின் வழியே பயணித்தாக வேண்டும். செங்குத்தாக சிவந்த பாறைகளுக்கு இடையே, நெளிந்து நெளிந்து செல்லும் பாதையில், தட்டுத் தடுமாறி நடந்தே ஏறித்தான் கொடைக் கானலை அடைய முடியும்.
      நடப்பதற்கே கடினமான பாறை வழியாக, மறைந்த பெரியவரைப் பேழையில் வைத்து, பத்திரமாய் மலையின் அடிவாரத்திற்குக் கொண்டு வந்தாக வேண்டும். இப்பணி எப்படி சாத்தியமாகும் என்று எண்ணி எண்ணி கலங்கித்தான் போனார்கள்.
     மறைந்த அப்பெரியவரின் பெருமை அறிந்த மலை வாழ் மக்கள் பலர் ஒன்று திரண்டு வந்தனர்,தாயே, அருந்தவ முனிவராம், இப்பெரியவரை சுமந்து செல்லும் பெருமையை, ஏழைகளாகிய எங்களுக்கு அருள வேண்டும் என்று கூறி, குழந்தையைப் போல், பேழையைத் தோளில் சுமந்து, நடக்கத் தொடங்கினர். மலையில் இருந்து இறங்கத் தொடங்கினர்.
     அலுங்காமல், குலுங்காமல் பேழையைச் சுமந்து, மலை அடிவாரத்தை வந்தடைந்தனர். பின்னர் ஒரு மாட்டு வண்டியில், பேழையை ஏற்றி, தொடர் வண்டி நிலையத்தை அடைந்தனர்.
     தொடர் வண்டியில் நெல்லை மாநகர் வரை பேழை பயணித்தது. பின்னர் பாளையங்கோட்டை தேவாலயத்தில் பேழை சிறிது ஓய்வெடுத்தது. அன்றிரவு முழுவதும், பாளையங் கோட்டை மக்கள், தொடர்ந்து வந்து, பேழையில் உறங்கும், பெரியவரை வணங்கிய வண்ணம் இருந்தனர்.
     சாலையின் இருமருங்கிலும், ஆங்காங்கு, ஆயிரக் கணக்கானப் பொது மக்கள் நின்று வணங்க, அடுத்த நாள், அப்பேழை, இடையான்குடி நோக்கித் தன் இறுதிப் பயணத்தைத் தொடங்கியது.
     ஒன்றல்ல, இரண்டல்ல முப்பத்து மூன்று ஆண்டுகள், தான் பார்த்துப் பார்த்து, இழைத்து இழைத்து உருவாக்கிய, இடையான்குடி தேவாலயத்திலேயே, அப்பெரியவரின் உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது.
downloadநண்பர்களே, இப்பெரியவர் யார் தெரிகிறதா?
இவர்தான், தமிழ் மொழியின் பெருமையினை,
இவ்வுலகிற்கு அறிவித்த அருமைமிகு ஆங்கிலேயர்
அறிஞர் ராபர்ட் கால்டுவெல்.
     அயர்லாந்து தேசத்தில் பிறந்த கால்டுவெல், கடல் வழியாக சென்னையில் கால் பதித்த நாள் 8.1.1838. அப்பொழுது அவரின் வயது வெறும் 24. மூன்றாண்டுகள் சென்னையிலேயே தங்கி, அருந்தமிழின் சுவை அறிந்த அறிஞர்களிடம், தமிழமுதை அள்ளி அள்ளிப் பருகினார்.
     ஒரு நாள், தனக்கு வேண்டிய உடைகளை, தேவையானப் பொருட்களை எல்லாம், மூட்டையாய் கட்டி, கூலியாட்களின் தலையில் ஏற்றிவிட்டு, நடக்கத் தொடங்கினார்.
     நடந்தார், நடந்தார், நடந்து கொண்டே இருந்தார். காலையில் நடந்தார். மாலையில் நடந்தார். வெப்பம் மிகுந்த பிற்பகலில், மரங்கள் அடந்த தோட்டங்களில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு நடந்தார். தமிழகத்தையும், தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளையும், பழக்க வழக்கங்களையும், அணு அணுவாய் அறிந்து கொண்டு, புரிந்து கொண்டு நடந்தார்.
     தில்லை சிற்றம்பலத்தின் பழமையினையும் பெருமையினையும் கண்டு மகிழ்ந்து, மாயூரம் வந்தார். தரங்கம்பாடியில் சில காலம் தங்கினார். பின் நடந்து கும்பகோணம் வழியாகத் தஞ்சையை வந்தடைந்தார்.
     தஞ்சையில் வாழ்ந்த வேதநாயகரைக் கண்டு அளவாவினார். திருச்சி வழியாக நீலகிரி மலைக்குச் சென்றார். நீலகிரியில் சில நாள் ஓய்வு. பின் நீலகிரியில் இருந்து புறப்பட்டு, கோவை வழியாக மதுரை மாநகரை வந்தடைந்தார். மதுரையிலிருந்து, திருமங்கலம் வழியாக, திருநெல்வேலி சென்று, பாளையங்கோட்டையில் ஓய்வெடுத்து, இடையான் குடியைச் சென்றடைந்தார்.
     இடையான் குடியே இவரது இருப்பிடமாய் மாறிப் போனது. ஊற்று நீரைத் தவிர, வேற்று நீரைக் கண்டறியாத, இடையான் குடியில், ஊர் தோறும் பரந்து, படர்ந்து கிடந்த, கள்ளிச் செடிகளையும, முள்ளிச் செடிகளையும் அகற்றி, தெருக்களைத் திருத்தி அமைத்தார். ஒவ்வொரு தெருவிற்கும், ஒரு கிணறு தோண்டினார். சாலையின் இருமருங்கிலும், நிழல்தரும் மரங்களை நட்டார்.
     எண்ணும் எழுத்தும் அறியாதிருந்த அவ்வூர் சிறுவர், சிறுமியருக்கு எழுத்தறிவு புகட்டினார். பெண் மக்கள் கல்வி கற்றல் பெருந்தவறு, என்று எண்ணியிருந்த, அவ்வூர் முதியோர்களை அன்புடன் அழைத்துக் கனிவுடன் பேசி, கல்வியின் இன்றியமையாமையை விளக்கி, பெண் கல்விக்கும் வித்திட்டப் பெருமைமிகு பெருந்தகை இவர்.
     தமிழ் மொழியில் உள்ள நூல்களை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார்.
     பழந் தமிழ்ச் சொற்களைப் பழங் கன்னடச் சொற்களோடும், ஆதி ஆந்திரச் சொற்களோடும் ஒத்து நோக்கிய போதுதான், இவருக்குப் புரிந்தது, நூற்றுக் கணக்கான, சொற்களின் தாதுக்கள், மும்மொழிகளிலும் ஒன்று பட்டிருப்பது தெரிந்தது.
     மேலை நாட்டு மொழி நூல்களில் கண்ட, தெளிவான ஆராய்ச்சி முற்களைப் பின்பற்றி, தென்னிந்திய மொழிகளை துருவித் துருவி ஆராயத் தொடங்கினார்.
41HgnD+PTHLநண்பர்களே, ஒன்றல்ல இரண்டல்ல, பதினைந்து ஆண்டுகள் அயராது, இடைவிடாது ஆராய்ந்தார்.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் ஓர் ஒப்பற்ற ஆய்வு நூலை இயற்றி, தமிழ் மொழி வரலாற்றில், மாபெரும் திருப்பு முனையை ஏற்படுத்தினார்.
     சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கும் தாய், அதுவே உயர்ந்த மொழி என்று, அந்நாள் வரை, நிலை நாட்டப் பட்டிருந்த, எண்ணத்தை உடைத்து, தூள் தூளாக்கி, தமிழே தென்னிந்திய மொழிகளின் தாய். அழகும், வளமும் நிறைந்து,  தனித்தியங்கும் வல்லமை பெற்ற செம்மொழி தமிழ் என்பதை, தக்க சான்றுகளுடன் ஆணித்தரமாக நிலை நாட்டினார்.
     திராவிடக் குடும்பத்தில் தொன்மையும், செம்மையும் வாய்ந்து விளங்கும் மொழி தமிழ் மொழியே என்பதையும் நிரூபித்தார்.
     நண்பர்களே, கால்டுவெல், வியந்து வியந்து, வியப்பின் உச்சிக்கே சென்று, பாராட்டிய செய்தி ஒன்றுண்டு தெரியுமா?
     உலகில் வேறு எந்த மொழி நூல்களிலும் காணப்படாத வகையில், பெயர்களை உயர்திணை என்றும், அஃறிணை என்றும், திராவிட இலக்கண நூலோர் வகுத்திருந்த செவ்வியல் முறை கண்டு மயங்கித்தான் போனார்.
     நான் அயர்லாந்து தேசத்தில் பிறந்தேன். ஸ்காட்லாண்டு தேசத்தில் வளர்ந்தேன். ஆங்கில நூல்களில் ஆழ்ந்தேன். ஆயினும் என் வாழ் நாளில், ஐம்பதாண்டுகட்கு மேலாகப் பாரதப் பெரு நாடும், அந்நாட்டு மக்களுமே, என் கருத்தை முற்றுங் கவர்ந்து கொண்டமையால், யான் இந்தியர்களுள் ஒருவனாயினேன்
என்று நெகிழ்ந்து கூறி, மகிழ்ந்த
அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின்
நினைவு நாள் இன்று
28.8.2014
தமிழின் பெருமையை, தமிழ் இலக்கியங்களின் வளமையை,
தமிழனுக்கும், உலகிற்கும் உணர்த்திய
அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்கள்
பிறந்த
200 வது ஆண்டு இவ்வாண்டு.
அறிஞர் கால்டுவெல் அவர்களின் நினைவினைப் போற்றுவோம்.
நன்றி : tamilspeak.com

Wednesday, August 27, 2014

தினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்





ஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடைத்தார்.  அவர்தான் வெளிக்கரு என்ற நூலின் ஆசிரியர், தென்னன் மெய்ம்மன். மகாபலிபுரம் சிற்பக்கல்லூரியில் பயின்று தங்கப்பதக்கம் பெற்றுத் தேர்ச்சி பெற்றவர்.. ஸ்தபதி என்ற சொல்லுக்கு பெருந்தச்சன் என்பதே சரியான தமிழ்ச் சொல் என்று எடுத்துரைப்பவர். 

ஆண்டுக்கு நாட்கள் 360. மாதந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் அமாவாசையும், வெள்ளிக்கிழமைகளில் பெளர்ணமியும் வரும் திராவிட ஆண்டுப்பிறப்பு, ஆரியர் ஆண்டுப்பிறப்பு, திருவள்ளுவர் ஆண்டுப்பிறப்பு என்றிருப்பதுபோல் தமிழனின் மெய்யான புத்தாண்டு தினம் ஆண்டுதோறும் தைமாதம் 1 தேதிதான் வரும். அஃது ஜனவரி 4 அல்லது 5 தேதியாகவே  இருக்கக்கூடும். நீங்கள் தமிழரென்றால் இந்த நாட்காட்டியைப் பின்பற்றுங்கள்; இல்லையென்றால் புறக்கணியுங்கள் என முழக்கமிட்டு வருபவர்,  தென்னன்  மெய்ம்மன். 

சென்ற ஆண்டு தமிழர்தம் நாட்காட்டி புலவர் இளங்குமரனார் தலைமையில் வெளியிடப்பட்டுவிட்டது. ஓரிரு தினங்களுக்குமுன் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் . மூதறிஞர்  செல்லப்பனாரின் நேரடி வாரிசுகள் 500-க்கும் மேற்பட்ட தமிழ் நாட்காட்டிளை வெளியிட்டு இலவசமாக வழங்கினர். ஆர்வலர் அணுக வேண்டிய மின்னஞ்சல் முகவரி : thennanmeimman@gmail.com

பூகம்பம் / நில நடுக்கம் / சூறாவளி /சுனாமிகள் ஏற்பட்டால் கூட, கோவிலுக்கு எத்தகைய ஆபத்தும் ஏற்பட்டாவண்ணம்  எழுப்பபட்டுள்ளது தஞ்சைப் பெர்யகோவில். அத்தகைய சிறந்த தொழில்நுட்பத்துடன் அமைக்கப் பெற்றது. பெரும்பாறையை அரைவட்டவடிவில் குடைந்து,அதில் மணலைக்கொட்டிப் பரப்பியபின், மணல்பரப்பின் மீது எழுப்பப்பட்ட கோவில் அது. அதனால்தான் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தபின்னும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது.

இந்த இடத்தில் ஒரு உண்மையைத் தெரிவிக்கவேண்டும். கோவையில் செம்மொழி மாநாட்டினை நடத்திய கையோடு, தொடர்ந்து இராஜராஜனது ஆயிரமாவது ஆண்டு விழா தஞ்சையில் நிகழ்த்தப்பெற்றது நாடறிந்ததொரு செயல். அதே நேரத்தில் பெரியகோவிலின் உட்பிரகாரத்தில், தற்போது அமைக்கப்பட்டிருக்கும் வராஹி அம்மன் கோவிலுக்கருகில் ( நடுவரசின் தொல்பொருள் துறையின் நிர்வாகத்தில் எப்படி இதற்கு அனுமதி வழங்கப்பட்டது என்பது யாருக்கும் புரியாத புதிர் ) 9 அங்குல விட்டமுள்ள ஆழ்துளைக் குழாய்க்கிணறு தோண்டும் நாசவேலையும் நடந்தது. தோண்டும்பொழுது தண்ணீருக்குப் பதில் மணல்தான் வந்தது. தோண்டும் முயற்சிகளும் பொதுமக்களுக்குத் தெரியாது. அந்த ஆழ்குழாய்க் கிணறு இயக்கப்பட்டிருந்தால் பெருங்கேடு கோவிலுக்கு நேர்ந்திருக்கும். இதன் விபரீதத்தை உணர்ந்த நல்லோர் முயற்சியில்  மதுரை உயர்நீதிமன்றக்கிளை மூலம் தடை உத்தரவு வாங்கி குழாய்க்கிணறு தோண்டும் முயற்சி முறியடிக்கப்பட்ட உண்மை பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அவர்களது விளக்கத்தாலேயே அறிந்துகொள்ள முடிந்தது. இதன் தொடர்ச்சியாக அந்தக் குழாய்க் கிணறு மூடப்பட்டிருக்க வேண்டும் அந்தச் செயல் நடக்கவில்லை. புதைக்கப்பட்ட குழாய் அப்படியேதான் உள்ளது. இரும்புத்தகடு  கொண்டு  நான்கு போல்ட்  ஆணிகள் மட்டும்  முறுக்கப்பட்டுள்ளன. .சமூக விரோதிகளால்  தவறாகப் பயன்படுத்தப்பட்டால் விளைவு என்ன ஆகும் என்பதும் கேள்விக்கும் ஆய்வுக்கும் உரியதொன்றாகும். இத்தகவல் நேரில் பார்த்தும் கேட்டும் அறிந்தது.


 (ஆழ்குழாய்க் கிணறு  தோண்டும்போது எடுக்கப்பட்ட மணற் படுகை

இன்னும் குழாய்  மூடப்படவில்லை;  ஆபத்து அகலவில்லை )



25 -க்கும் மேற்பட்ட அமைப்புக்களின்  கூட்டுப்பொறுப்பில் உள்ள தஞ்சைப் பெரிய கோவில் பாதுகாக்கப்பட வேண்டுமானால், அந்த குழாய்க் கிணறு முற்றிலுமாக மணல் கொண்டு நிரப்பப்படவும் வேண்டும். பூமிக்குள் புதையுண்டு கிடக்கும் குழாயும் அகற்றப்பட்டாகவேண்டும். மாநில மத்திய அரசுகள் ஆவன செய்யுமா? 

செம்மொழி மாநாடு, இராஜராஜன் ஆயிரமாவது ஆண்டுவிழா ஆகியவற்றின் சூத்திரதாரி அப்போதைய முதல்வர் டாக்டர் கலைஞர் என்பது ஊரறிந்த உண்மை. அப்போதைய தமிழகமுதல்வரின் விபரீத முயற்சியை நீதிமன்றத்தின் மூலமாகவே முறியடித்த தஞ்சைப் பெரியகோவில் மீட்புக் குழுவினரை  எவ்வளவு பாராட்டினாலும் தகும். ,

இனிமேல் தினத்தந்தி ஆசிரியர் அமுதன் எழுதி வெளிவந்துள்ள  ”ஆயிரம் ஆண்டு அதிசயம்“ நூலுக்குச் செல்வோம். 

இந்நூல் தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ள ஓர் பொக்கிஷம்.  பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் பரப்பிடும் தினத்தந்தியின் தமிழ்த்தொண்டிற்கேற்ப,, அதன் வெளியீடாக வந்துள்ள இந்நூல் பாமரருக்கு எளிதில் விளங்கத்தக்க தமிழிலக்கியப் பரிசு என்றே கொள்ளவேண்டும். படிக்க ஆரம்பித்தால் படித்து முடித்த பின்னர்தான் நூலைக் கீழே வைக்க முடியும். ஒரு ஆய்வு நூலிற்குரிய அத்தனை இலக்கணங்களையும் கொண்டிலங்கும் இந்த நூல் தினத்தந்தி ஞாயிறு மலரில் தொடராக வந்தபோதே பலரது பாராட்டையும் பெற்றது. புத்தகமானபின் கேட்கவா வேண்டும்.? 

தினத்தந்தியில் ஆசிரியராக 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்துவரும் அனுபவம் நூலாசிரியர் அமுதன் அவர்களுக்குப் பெரிதும் உதவியுள்ளது. தஞ்சைப் பெரிய கோவிலுக்கும், இராஜராஜன் வாழ்ந்த பகுதிகளுக்கும் நேரில் சென்று களப்பணி ஆற்றியதாலேயே அவருக்கு இது சாத்தியமாகி உள்ள்து. பல்வேறு தொல்பொருள் ஆய்வாளர்களைச் சந்தித்து தகவல்களைச் சேகரிதுள்ளார். பல்வேறு ஆதாரங்களையும் திரட்டி வைத்துக்கொண்டே களத்திலிறங்கி வெற்றிபெற்றுள்ளார். 

ஏனெனில், இக்கோவிலில் ஒன்றரை லட்சம் தமிழ்க் கல்வெட்டுக்கள் உள்ளன. மேலும், இவற்றைப் படித்துத் தெரிந்து கொள்ள தமிழார்வமும் முயற்சியும் இருந்தால் மட்டும் போதுமானது. கல்வெட்டு எழுத்துக்கள் இன்றையத் தமிழ் எழுத்துக்களுடன் பெரும்பாலும் ஒத்துப்போகின்றன. இந்த உண்மையும் நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.  உட்பிரகாரத்தில் உள்ள பிள்ளையாருக்கு வாழைப்பழம் பெற்றிட, பழவியாபாரிகளுக்கு கொடுக்கப்பட்ட சல்லிக்காசுகள் விபரங்களும், அதற்கீடாக அவர்கள் தினந்தோறும் தரவேண்டிய வாழைப்பழங்களின் எண்ணிக்கையும் கல்வெட்டில் உள்ளன. அனைவரது வணிகர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. ,ஆனால், அந்த எழுத்துக்கள் முறையான பராமரிப்பின்றி அழிந்துகொண்டிருக்கின்றன என்பது வருத்தம்தரும் செய்தியாகும்.

திருக்கோவில்கட்டும் பணியில் ஈடுபட்டவர்கள் பெயர்கள் அனைத்தும் கல்வெட்டில் உள்ளன. அந்தக்காலத்தில் ஓரிரு நடன மங்கையரே கோவில்தோறும் இருப்பர். ஆனால் தஞ்சைப் பெரியகோவிலில் 400  பெண்கள் நாட்டியமாடும் பணியில் இருந்த உண்மை வியப்பைத் தருகின்றது. அதுவும் ஏழாண்டுப் பயிற்சிக்குப் பின்னரே அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். நடனப் பெண்களுக்கு 5 வயதிலேயே பயிற்சி தொடங்கி விடுகின்றது.  இவர்களொடு 132 இசைக்கலைஞர்களும் உடன்பணியாறினர் என்பதும் தெரியவருகின்றது.அவர்களூக்குத் தனித்தனியான வீடுகளும், இதரவசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள சிறப்பினையும் நூல் எடுத்துக்கூறுகின்றது. 

இந்நூலின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் உண்மைகளை ஆதாரபூர்வமாகத் தருகின்றது. கோவில் குறித்து நிலவும் தவறான கருத்துக்களையும் எடுத்துக்கூறி அவற்றைத் தவறு என்றும் சுட்டிக்காட்டி விளக்குகின்றது. 

ஆந்திர மாநிலம், இராஜமுந்திரி என்கிற இராஜமகேந்திரபுரத்தில், கோதாவரி நதி தீரத்தில், தவளேஸ்வரம் என்னுமிடத்தில் அணைகட்ட முற்பட்டார் ஆங்கிலக் கவர்னர், வில்லியம் ஆர்தர் காட்டன். அவர்  காவிரியில் கரிகால் சோழரால் கட்டப்பட்ட கல்லணையின் அஸ்திவாரத்தைத் தோண்டிப்பார்த்துத் நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டார் என்பது வரலாற்றுச் செய்தி. 

நீரோட்டமுள்ள ஆற்றில் நின்று குளிக்கும்பொழுது நீருக்குள் உள்ள பாதங்கள் ஒரு சற்றுநேரத்திற்குப்பின் மணலுள் புதைந்து நிலையாக நின்றுகொள்ளும்., இந்த நுணுக்கத்தின்படியே கல்லணை கட்டப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியே ஆந்திரத்தின் அணையும் ஆகும். இந்த உண்மையை,  சென்னை பாவாணர் நூலக வளாகத்தில் நிகழ்ந்த, நீர் மேலாண்மை வல்லுநர், பழ. கோமதிநாயகம் நினைவுக்கூட்டத்தில் வை.கோ.அவர்கள் எடுத்துரைத்தார். அத்தகவலையும் இந்நூல் உறுதி செய்கின்றது. 

தமிழிசைப் பாடல்கள் சிலவற்றைத் திருக்கோவில் தரிசனத்தின்போது கேட்டு மயங்கிய இராஜராஜனின் தமிழ்ப்பற்றின் தொடர்ச்சி பாடல்களைப்பற்றிய வினாக்களை எழுப்புகின்றன. தேவாரப் பாடல்கள் என்று கேட்டறிந்த மன்னனின் தேடல் வேட்டை தொடர்கின்றது. திருநாரையூரில் வசித்த சைவத் துறவி நம்பியாண்டார் நம்பியின் சந்திப்பு நிகழ்கிறது. அவர் பொல்லாப் பிள்ளையாரை வழிபடும் தீவிர பக்தர். அவரது அருட்திறத்தால் தேவார ஏடுகள் தில்லையம்பலத்தில் இருப்பது தெரியவர அவற்ற்றுள் கரையான்களால் அழிக்கப்படாத ஓலச்சுவடிகளை மீட்டெடுக்கும் மன்னரின் முயற்சிகளைச் சுவைபட எழுதியுள்ளார், கிடைக்கபெற்ற பாடல்களை வகைப்படுத்திய முறைமைமையும் விளக்கப்பட்டுள்ளது. அப்பாடல்களை அவற்றிற்கே உரிய இராகங்களில் பாடச்செய்ய மேற்கொண்ட முயற்சிகளும், அவை வாழையடி வாழையாக சமூகத்தில் அழியாமல் தொடர்ந்திட மன்னன் வகுத்தளித்த செயல்திட்டமும் வியப்பை ஏற்படுத்துகிறது.  சைவநெறி நின்றொழுகும் சிவபக்தர்களின் நம்பிக்கைக் கருத்துக்களுக்கு வலுவூட்டும் வண்ணம் இப்பகுதி அமைந்துள்ளது.

 ”சாவா -மூவா -பேராடு”  என்றதொரு திட்டம் நடைமுறைப்பட்டது, இராஜராஜன் காலத்தில். இதற்கு மரித்தலும் மூப்புமில்லாத ஆடுகள் என்பது பொருள். 

செல்வச் செழிப்புள்ள ஒரு பெண், பெரியகோவிலில் ஆண்டு முழுவதும் நெய்விளக்கு ஏற்றிடச்செய்ய விரும்பி அளித்த நன்கொடையால் உருவானதே இந்தத் திட்டம். வாழ வழியற்ற ஏழையிடம் நாளொன்றுக்கு ஆழாக்கு நெய் கோவிலுக்குத் தரவேண்டும். உன் வாழ்க்கைக்கும் வழிபார்த்துக் கொள்ள வேண்டும். என்ன எதிர்பார்க்கிறாய்? என்று வினவுகின்றனர். 96 பெண் ஆடுகளும், கிடாய் மற்றும் குட்டி ஆடுகளும் இருந்தால் நானும் வாழ்வேன். கோவிலுக்கு நாள்தோறும் ஆழாக்கு நெய்யும் தரமுடியும் என்ற பதிலும் கிடைக்கிறது. அந்த ஏழையின் விருப்பம்  நிபந்தனையுடன் நிறைவேற்றப்படுகின்றது என்ன நிபந்தனை ? உனது கணக்கில் இந்த ஆடுகள் பற்றிய விவரம் நிலுவையில் இருக்கும். எத்தனை ஆண்டுகளுக்குப்பின் கேட்டாலும்,  இப்போது கொடுக்கப்படும் ஆடுகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் வயது என்ன இருக்கிறதோ அதே போன்ற ஆடுகளைக் கோவிலுக்குத் திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்பதேயாகும். காலப்போக்கில் ஆடுகள் பல்கிப் பெருகுகின்றன. நாள்தோறும் ஆழாக்கு நெய்யும் கிடைத்து விடுகின்றது. கோவிலில் விளக்கும் எரிகின்றது. உரிய நிலையான முன்னேறத்தை அடந்து விடுகின்றான் அந்த ஏழை. அப்போது தனக்கு வழங்கப்பட்ட அதே அளவிலான, அதே வயதுடைய ஆடுகளையும் கோவிலுக்குத் திருப்பியளித்தும் விடுகின்றான். அதாவது, ஏழைக்கு வழங்கப்பட்ட ஆடுகள் அதே எண்னிக்கையில் மரணம் அடையாமலும், , மூப்பு அடையாமலும், மீண்டும் கோவிலுக்குக் கிடைத்துவிட்டன. இதே போன்று பசுக்களும் வழங்கப்பட்டன என்ற தகவலையும் தருகின்றார், நூலாசிரியர்.

அந்தக்காலதில் கோவில்கள் வங்கிகளைப்போன்று செயல்பட்டு வந்தன என்பர் அறிஞர் பெருமக்கள்.  ஆம்.  வசதிகளற்ற வறுமையிலுள்ளோருக்கு கோவில்கள் உதவி செய்தன. வசதிவந்தபின் உதவியைப் பெற்றோர் நன்றி உணர்வுடனும் ஏமாற்றாமலும் பன்மடங்கில் திருப்பியும் கோவில்களுக்குத் திருப்பிச் செலுத்தினர். கோவில் சொத்துக்கள் பன்மடங்காயின. இவ்வுண்மையையும் இந்நூல் உறுதிப்படுத்துகின்றது.. 

அபூர்வமான செப்புச் சிலைகளும் சோழர்கள் காலத்தில் செய்யப்பட்டன. அவற்றில் பல சிலை வேட்டைக்காரர்களிடம் சிக்கிவிட்டன. கடந்த நூற்றாண்டின் முற்பகுதிவரை தஞ்சைக்கோவிலில் பத்திரமாக இருந்த இரு சிலைகள் திடீரென்று மாயமாகிவிட்டன.  சில ஆண்டுகளுக்குப்பின் மாயமான அந்த இரு சிலைகளும் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கவுதம் சாராபாய் கலைக்கூடத்தில் இருப்பது தெரிய வந்தது. மீட்க மேற்கொண்ட முயற்சிகள் இன்றளவும் வெற்றிபெறவில்லை., இருப்பினும் விரைவில் நல்லது நடக்கும் என்ற தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார், நூலாசிரியர், அமுதன்.

138 தலைப்புக்களில் பல்வேறு அரிய தகவல்களுடன் வெளிவந்துள்ள இந்நூல் அளவிறந்த அபூர்வத் தகவல்களை ஆதாரங்களுடன் எடுத்துரைக்கும் ஓர் ஆவணமாகும். அனைத்தையும் ஒருங்கே எடுத்துரைத்தல் இயலாது. எனவே, சிற்சில தகவல்கள் மட்டும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

”நனி சிறந்த  தமிழ் நாளேடு தினத்தந்தி. அதன் ஆசிரியர் திருமிகு. அமுதன். அவரால் படைக்கப்பட்ட ஆயிரம் ஆண்டு அதிசயம் தமிழ்மக்களுக்குக் கிடைத்த பரிசு.” என்று  முனைவர். தஞ்சாவூர் குடவாயில் சுப்பிரமணியன், அணிந்துரையில் முன்மொழிகின்றார். “ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர்போல் கற்றுக் கற்பித்திருக்கிருக்கிறீர்கள். அரிய தொடர், பெரியபணி. தமிழ்ச்சமுதாயத்துக்கு தினத்தந்தியின் குறிப்பிடத்தக்க தொண்டுகளில் ஒன்று என்று தங்கள் ஆயிரம் ஆண்டு அதிசியத்தைச் சொல்வேன்” என்று வழிமொழிகின்றார், கவிஞர் வைரமுத்து.  

நூலின் அருமை குறித்து இதைவிடச் சிறப்பாக எப்படிச் சொல்லிவிட முடியும் ? 

தமிழினத்தின் பண்பாட்டு அடையாளங்களைச் சுட்டிக்காட்டும் பணியினை தினத்தந்தி வெளியீடுகள் சிறப்பாகச் செய்து வருகின்றன.  அவை தினத்தந்தி நாளிதழ் போன்றே பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் எளியநடையிலும் உள்ளன. ஆங்காங்கே அதிசயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பார், தமிழ்மக்கள் நெஞ்சில் வாழும் படைப்பாளி வல்லிக்கண்ணன். அத்தகைய அதிசயங்களாகத்தான் இந்நூல்களையும் எடுத்துக்கொளள வேண்டும்.

வரலாற்றுச் சுவடுகள், 

இலங்கைத் தமிழர் வரலாறு, 

ஆயிரம் ஆண்டு அதிசயம் 

என்ற மூன்று வெளியீடுகளும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் மற்றும் தமிழறிந்தோர் வீடுகள்தோறும் தவறாமல் இருக்கவேண்டிய  ”தமிழ் வேதங்கள்” என்றால் அது மிகையன்று. 

கிடைக்குமிடம் :

தந்தி பதிப்பகம், 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி -சென்னை-7

முதற் பதிப்பு : மார்ச் 2014

இரண்டாம் பதிப்பு : ஜூலை 2014

விலை ரூ. 150/-

பக்கங்கள் 236  ( XII + 224 )

www..dailythanthi.com

mgrthanthipub@dt.co.in

தொலைபேசி எண் : 044 -2661 8661 

-சங்கர இராமசாமி-

தினத்தந்தியின் வரலாற்றுச் சுவடுகள் - அறிமுகப்படுத்துபவர் : உண்மைத் தமிழன்

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


தினத்தந்தியின் வரலாற்றுச் சுவடுகள் பக்கத்தை அவ்வளவு சீக்கிரம் நம்மால் மறந்திருக்க முடியாது.. கடந்த 2003-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கிய இந்த வரலாற்றுச் சுவடுகள் பகுதி கிட்டத்தட்ட 6 வருட காலம் தொடர்ந்து நடந்தது தமிழ்ப் பத்திரிகையுலகில் ஒரு மாபெரும் சாதனைதான்..!

தனது நூலகத்திலும், அந்தக் காலத்திய தினத்தந்தி இதழ்களில் இருந்தும் பல அரியச் செய்திகளைத் தொகுத்து வழங்கியவிதம் வாசகர்களைக் கவர்ந்திருந்தது.


Ads by SmartSaver%2B%2015Ad Options
அந்த வரலாற்றுச் சுவடுகள் புத்தகத்தின் வெளியீட்டு விழா கடந்த செவ்வாய்கிழமையன்று மாலை சென்னைப் பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடந்தது. விழாக்களுக்கு சென்று மிகுந்த நாட்களாகிவிட்டது என்பதினாலும் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க நான் ஆர்வமாக இருந்ததினாலும் விழாவுக்குச் சென்றிருந்தேன்.

அழைப்பிதழுடன் வந்தவர்களையெல்லாம் அரங்கத்தின் கீழ்த் தளத்திலும், இல்லாமல் வந்திருந்த பொதுமக்களை மேல்தளத்திலுமாக தள்ளிவிட்டார்கள் காவலர்கள். சின்ன ஐயா சிவந்தி ஆதித்தனாரின் ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும், நாடார் அமைப்புகளின் உறுப்பினர்களுமாக திரண்டு வந்திருந்ததால் நிற்கவே இடமில்லாத அளவுக்கு கூட்டம் கும்மிவி்டடது.

சமீப காலமாக கருணாநிதி சென்னையில் கலந்து கொள்ளும் விழாக்களில் எல்லாம் கூட்டம் கூடாமல் கூட்டத்தைத் திரட்ட கட்சிக்காரர்களை விரட்டும் வேலைகளெல்லாம் நடந்தது. ஆனால் இன்றைக்கு இது அப்படியே உடான்ஸாக இருக்க கருணாநிதி நிச்சயம் மகிழ்ந்திருப்பார்..

இடமில்லாமல் தவித்தவர்களுக்காக அரங்கத்தின் வெளிப்புறத்தில் பெரிய ஸ்கிரீனைக் கட்டி நேரடி ஒளிபரப்பு செய்ததும் பாராட்டத்தக்கது..

முதல் இரண்டு வரிசைகளை அமைச்சர்களுக்கும், முக்கிய வி.வி.ஐ.பி.களுக்காகவும் புக் செய்து வைத்திருந்தாலும் அங்கேயும் போய் மன்றத்துக்காரர்கள் உட்கார்ந்து கொண்டு அழிச்சாட்டியம் செய்ய.. அவர்களுடன் மன்றாடி எழுப்பி பின்பக்கம் தள்ளிக் கொண்டு வந்தார்கள் விழா ஏற்பாட்டாளர்கள்.

அப்படியும் பாதுகாப்புக்காக சில போலீஸ்காரர்களையும், நிர்வாகிகளையும் முன் வரிசையில் உட்கார வைத்து அதன் பின் வருகின்ற வி.ஐ.பி.களுக்காக அவர்கள் எழுந்து கொண்டு சீட் பிடித்துக் கொடுத்த காமெடியும் நடந்தது..!

Ads by SmartSaver%2B%2015Ad Options

சீர்காழி சிவ.சிதம்பரத்தின் கச்சேரி எப்போதும் வழக்கம்போல களை கட்டியிருந்தது. என்ன குரலய்யா.. இந்த வம்சத்திற்கு. கேட்டவுடனேயே பளிச்சென்று சொல்லிவிடலாம் போல தனித்தன்மையுடன் இசையுலகில் நீடித்த புகழுடன் இருக்கிறது சீர்காழி குடும்பம்..! வாழ்க அவர்தம் இசைத் தொண்டு..!

முதல்வர் வருகிறார் என்பதால் அமைச்சர் பெருமக்கள் ஆவலுடன் ஓடோடி வந்திருந்தார்கள். இவர்களுடன் திரை நட்சத்திரங்கள் வந்தபோது கை தட்டல் ஓங்கி, ஓங்கி ஒலிக்க.. அவ்வப்போது அமைச்சர்களே திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள்.

கவிஞர் வைரமுத்து. நடிகர்கள் விஜய், சத்யராஜ், பாக்யராஜ், வடிவேல், விவேக், பிரசன்னா, டைரக்டர்கள் தங்கர்பச்சான், ராஜகுமாரன், நடிகைகள் குஷ்பு, தேவயானி என்று சிலர் மட்டுமே வந்திருந்தார்கள்..! 

இதில்  குஷ்பூ, விவேக், வடிவேல் மூவருக்கும் கிடைத்த வரவேற்பில் பாதியளவுகூட கலைஞர் வருகையின்போது கிடைக்கவில்லை என்பது கொஞ்சம் சோகமானதுதான்..! அதேபோல் கலைஞரின் பேச்சு துவங்கிய உடனேயே கூட்டம் கலையத் தொடங்கியதும் நடந்தது..!

வந்திருந்த அக்கம்பக்கத்துல இளைஞர்கள் கலைஞர் பேசிக் கொண்டிருக்கும்போது தாழ்வாரத்தில் மிகச் சப்தமாக கூச்சலையும், தியேட்டர் வசனங்களையும் பேசிக் கொண்டே போக.. சிறிது சலசலப்பு இருந்தது. ஆனால் காவலர்களோ லேசுபாசாக அவர்களை மிரட்டி வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.. ம்ஹூம்.. கேட்டால்தானே..! அனைவருமே பேட்ஜுடன் இருந்ததால் மீண்டும், மீண்டும் மாடிக்கு ஓடுவதும், கீழே இறங்கி ஓடுவதுமாக கபடி விளையாட.. நெல்லைத் தமிழ் பேசியபடியே வந்த ஒரு பெரிசு நெல்லைத் தமிழில் ஒரு போடு போட்டு விரட்டியதைப் பார்த்து காவல்துறையினரே சிரித்துவிட்டார்கள்.. 

போகும்போது அந்த நெல்லை பெரிசு “நம்ம மக்காளுகதான்.. பெரிய வாலுக. அவ்ளோதான்..” என்று சிரித்தபடியே சொல்லிவிட்டுச் சென்றார்..!

இப்போதெல்லாம் கலைஞரின் உடல்நிலை காரணமாக நிகழ்ச்சியை எவ்வளவு சுருக்கமாக நடத்த முடியுமோ அந்த அளவுக்கு நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களாம். இந்தக் கட்டுப்பாடு சினிமா நிகழ்ச்சிகளுக்குமா என்று தெரியவில்லை. அங்கேதான் அவர் 6 மணி நேரம் என்றாலும் ஆடாமல், அசையாமல் அமர்ந்திருக்கிறார்.

இந்த விழாவில் மேடையில் 5 கச்சிதமாக பேர் மட்டுமே பேசி முடித்துவிட்டு மிக விரைவில் 8.30 மணிக்கெல்லாம் விழாவை நிறைவு செய்துவிட்டார்கள்.

இதில் பாராட்ட வேண்டிய விஷயம்.. தினத்தந்தி இந்த நிகழ்ச்சியை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்காதது ஒன்றுதான். அனைத்து பத்திரிகையாளர்கள், வீடியோ இணையத்தளங்களையும் அழைத்திருந்ததால் வீடியோகிராபர்கள் கூட்டம் நிறைய..!

தினத்தந்தியின் தொலைக்காட்சியில் மட்டும் இது ஒளிபரப்பாகும் என்று நினைக்கிறேன். ஹலோ எஃப்.எம்.மில் நேரடி ஒளிபரப்பு என்றார்கள். நான் கேட்கவில்லை..!

ஆனாலும் தினத்தந்திக்கு இதே போல் இன்னாரு விழா நடத்தும் சாத்தியம் இருக்கிறது. வரலாற்றுச் சுவடுகள் வரிசையில் சினிமா பகுதியை மட்டும் தனி புத்தகமாகத் தொகுத்திருக்கிறார்களாம். அன்றைக்கு முழுக்க, முழுக்க சினிமாக்காரர்களை வைத்தே நிகழ்ச்சியை நடத்த முடிவெடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது..! அதுல காசு அள்ளிரலாம்..!


Ads by SmartSaver%2B%2015Ad Options
வாசலிலேயே புத்தக விற்பனையும் ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது.. 864 பக்கங்கள் கொண்ட அழகான வடிவமைப்பில் உட்பக்கங்கள் அனைத்தும் நல்ல தரமான ஆர்ட் பேப்பரில், கலர் புகைப்படங்களுடன் புத்தகம் மிக அழகாக உள்ளது. 375 ரூபாய் என்பது நிச்சயம் கட்டுப்படியாகும் என்று நான் நினைத்தேன். ஆனால் நம்ம கருணாநிதிக்கு இதுவும் பொறுக்கவில்லை. என்ன செய்தார் என்பதை அவருடைய பேச்சைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். 

முதலில் திரு.சிவந்தி ஆதித்தன் வரவேற்புறையாற்றினார். அதன் பின்னர் திரு.அவ்வை நடராசன், திரு.வா.செ.குழந்தைசாமி, மானமிகு வீரமணி போன்றவர்கள் வாழ்த்திப் பேசிய பின்பு கலைஞர் பேசினார். 

தினமலர் பத்திரிகைக்கு சுப.அறவாணன் நிரந்தரமான பேச்சாளர் என்பதைப் போல தினத்தந்திக்கு வா.செ.குழந்தைசாமி.. அவருடைய பேச்சில் நிறைய பொது அறிவு விஷயங்கள் வெளிப்பட்டன.. 

டல்லாஸ் நகரில் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட போது அவர் அதே ஊரில் உள்ள பல்கலைக்கழகத்தில்தான் இருந்தாராம். கென்னடியின் மறைவையொட்டி விடுமுறை வேண்டாம் என்று சொல்லி அந்தப் பல்கலைக்கழக ஊழியர்கள் அடுத்தடுத்த நாட்களில் வேலையும் செய்தார்களாம். இதனை நம்ம ஊருடன் ஒப்பிட்டுப் பேசியது சுவையானதாக இருந்தது..

வீரமணி பேசும்போது தினத்தந்தியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தலையங்கம் பகுதியை புகழ்ந்து தள்ளினார். அன்றைய தலையங்கத்தில் வந்திருக்கும் செய்தியை அப்படியே படித்தும் காட்டி காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக இடித்தும் காட்டினார். அவர் இடிப்பதை உணர்ந்து கட்சிக்காரர்கள் பலத்த கரவொலி எழுப்ப காங்கிரஸ் பேரியக்கத்தின் உண்மைத் தொண்டர்களான திருநாவுக்கரசரும், கோபண்ணாவும் அமைதியே திருவுருவாக கேட்டுக் கொண்டிருந்தது கண்கொள்ளாக் காட்சி. 

தினத்தந்தி திட்டமிட்டுத்தான் அன்றைய தினத்தின் தலையங்கத்தை அப்படி எழுதியிருக்கிறது என்பது அத்தனை பத்திரிகையாளர்களாலும் யூகிக்க முடிந்த ஒன்றுதான். காங்கிரஸ் தி.மு.க.வைவிட்டு விலகினால் இதனால் பாதிப்பு அவர்களுக்குத்தான். நாட்டுக்கும் கெடுதல்.. இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்பதை மறைமுகமாக சொல்லியிருந்தது அந்தத் தலையங்கம்..!

கலைஞரும் தன் பேச்சில் இதனைக் குறிப்பிட்டார். மேலும் சிற்சில இடங்களில் சொற்விளையாட்டே நடத்தினார். இந்த விஷயத்தில் தமிழ் என்னமாய் இந்த மனிதரின் நாவில் விளையாடுகிறது..? கூடவே அவர் இந்தப் புத்தகத்தி்ன் விலையைப் பற்றிச் சொன்னதுதான் எனக்குக் கடுப்பைக் கிளப்பிவிட்டது. அது இந்தப் பதிவின் இறுதியில்..

கூட்டத்தில் பேசியவர்களின் பேச்சுக்களை சிறிதளவு போடலாம் என்று நினைத்து வேகம், வேகமாக குறிப்பெடுத்திருந்தேன் முட்டாள்தனமாக..! வீட்டுக்கு வந்து யோசித்த பின்புதான் நாளைக்கு தினத்தந்தியிலேயே விளக்கமாக வருமே என்ற அறிவே வந்தது. நமக்குத்தான் எப்பவுமே அறிவு கொஞ்சம் லேட்டாத்தானே வேலை செய்யும்.. 

அதனால் மறுநாள் தினத்தந்தியில் வந்திருந்த பேச்சுக்களை அப்படியே இங்கே காப்பி பேஸ்ட் செய்கிறேன். படிக்க நேரமிருப்பவர்கள் படியுங்கள்.. மிகச் சுவையாகத்தான் பேசியிருக்கிறார்கள்.. 

விழாவில், `தினத்தந்தி' அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் வரவேற்று பேசியது :-

இரண்டாம் உலகப் போரும், இந்திய சுதந்திரப் போராட்டமும் உச்சக் கட்டத்தில் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில்-அதாவது 1942-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் - `தினத்தந்தி' தொடங்கப்பட்டது. அது முதல் இன்றுவரை, வரலாற்று முக்கியம் வாய்ந்த அனைத்துச் செய்திகளையும் `தினத்தந்தி' பதிவு செய்துள்ளது.

கடந்த காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளில் ஒரு சிலவற்றை மட்டும் நூல்களிலும், பாடப்புத்தகங்களிலும் சுருக்கமாக அறிய முடிகிறதே தவிர, பெரும்பாலான வரலாற்று நிகழ்ச்சிகளை பொது மக்கள் விரிவாக அறிந்து கொள்ள வாய்ப்பே இல்லை.

இக்குறையைப் போக்க, `தினத்தந்தி' தொடங்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை நடந்துள்ள முக்கிய நிகழச்சிகளைத் தொகுத்து வழங்கத் தீர்மானித்து, "வரலாற்றுச் சுவடுகள்" என்ற தலைப்பில் `தினத்தந்தி`யில் நெடுந்தொடராக வெளியிட்டோம். இந்தத் தொடர் வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

"வரலாற்றுச் சுவடுகள்'' தொடரைப் புத்தகமாக வெளியிட்டால் அனைவரும் படிக்கவும், பாதுகாக்கவும் வசதியாக இருக்கும் என்று வாசகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அவர்களின் விருப்பத்திற்கிணங்க, புத்தகமாக வெளியிடுகிறோம்.

இந்த நூலுக்கு, முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் அணிந்துரை வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்று கருதினோம். எங்கள் வேண்டுகோளை அன்புடன் ஏற்றுக் கொண்ட முதல்வர், ஏராளமான பணிகளுக்கு இடையே, நூல் முழுவதையும் படித்துப் பார்த்து புகழாரம் சூட்டியுள்ளார். அவர் அளித்துள்ள அணிந்துரை, இந்த நூலுக்கு மணிமகுடமாகத் திகழ்கிறது.

"இது ஓர் அரிய ஆவணம். அரிய கருவூலம்'' என்று பாராட்டியுள்ள முதல்-அமைச்சர் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.

இந்த நூலின் முதல் பிரதியைப் பெறுவதற்கு வருகை தந்திருக்கும் டாக்டர் வா.செ.குழந்தைசாமி மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராகப் பணியாற்றியவர். ஏழு பல்கலைக்கழகங்களில் `டாக்டர்' பட்டம் பெற்றவர். என் தந்தையார் பெயரால் `தினத்தந்தி' வழங்கி வரும் `மூத்த தமிழறிஞர்' விருதை இந்த ஆண்டு பெற்றவர். அவர் இந்த நூலின் முதல் பிரதியைப் பெறுவது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

வாழ்த்துரை வழங்க வருகை தந்துள்ள முனைவர் அவ்வை நடராசன், தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றி ஆராய்ச்சிகள் செய்து, பல அரிய நூல்களை எழுதி புகழ் பெற்றவர். தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்து, தமிழுக்கு அருந்தொண்டாற்றியவர். வாழ்த்துரை வழங்க அவர் இங்கு வந்திருப்பது குறித்துப் பெருமை அடைகிறோம்.

திராவிடர் கழகத்தின் தலைவராகவும், பெரியாரால் தொடங்கப்பட்ட `விடுதலை'  நாளிதழின் ஆசிரியராகவும் விளங்கும் கி.வீரமணி, `தினத்தந்தி'யுடன் நீண்ட காலத் தொடர்புடையவர். அவர் இந்த நூலை பாராட்டுவது, தந்தை பெரியார் அவர்களே இங்கு வந்து பாராட்டுவது போன்றது என்று எண்ணி மகிழ்கிறேன்.

தமிழ்ச் சமுதாயத்துக்குத் தொண்டாற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ள `தினத்தந்தி', தமிழ்ப் பெருமக்களுக்கு இந்த நூலை வழங்குவதில் பெருமை அடைகிறது. தமிழ் மக்களின் பேராதரவால், இந்த நூல் காலத்தை வென்று வாழும் என்ற நம்பிக்கையுடன், இந்த இனிய விழாவுக்கு வருகை தந்துள்ள அனைவரையும் மீண்டும் வரவேற்கிறேன்.

இவ்வாறு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் பேசினார்.

"வரலாற்றுச் சுவடுகள்'' புத்தகத்தில் அடங்கியுள்ள வரலாற்றுத் தொகுப்பினை விளக்கி, `தினத்தந்தி' பொது மேலாளர் டி.ஆர்.பீம்சிங் பேசினார் :-

தலைசிறந்த பத்திரிகையாளர், தமிழ் பத்திரிகையின் முன்னோடி என்றெல்லாம் நாடு போற்றும் தமிழர் தந்தை ஆதித்தனார் பேச்சு வழக்கு தமிழை கொச்சை நீக்கி எழுத வேண்டும் என்கிற புதிய சூத்திரத்தை உருவாக்கி வாசகர்கள் எளிதாக படித்து தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எளிய தமிழை பயன்படுத்தினார். அண்மைக் காலங்களில், தமிழ் பத்திரிகைகள் எல்லாம், `தினத்தந்தி'யை பின்பற்றி எளிய தமிழில் எழுதி வருவதே தினத்தந்திக்கு மாபெரும் வெற்றியாகும்.

`தினத்தந்தி' பத்திரிகையில் உலகப் போர் விபரங்களை தமிழர் தந்தை ஆதித்தனார் எழுதினார். இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தாலும், தமிழ்ச் சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முதல் உலகப் போர் பற்றியும் எழுதினார். 1942-ம் ஆண்டில் இந்தியாவை இங்கிலாந்து ஆண்டு கொண்டிருந்தது. இந்தியா வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்று அப்போது சுதந்திர போராட்டமும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

1947 ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா விடுதலை அடைந்தபோது இந்தியப் பிரதமராக பதவியேற்ற பண்டித நேருவின் உரையை, ஆதித்தனார் மொழி பெயர்த்து செய்தியாக வெளியிட்டார். "இன்று நள்ளிரவு 12 மணிக்கு இந்தியா சுதந்திரம் அடைகிறது. உலகமே உறங்கும் இந்த வேளையில் இந்தியா உயிர்த்தெழுந்து சுதந்திர நாடாக நிற்கப் போகிறது'' என்கிற செய்திதான் அது.

1947-க்குப் பின்னர், இந்தியாவில் ஜனநாயக முறை வந்தது. அதன் பின்னர் நடந்த செய்திகள், உடனுக்குடன் `தினத்தந்தி'யில் பிரசுரம் ஆனது. இவையெல்லாம் அந்தந்த காலத்தில் செய்திகள், ஆனால் இப்போது அவை வரலாறு. ஹிட்லர் மரணம் அடைந்தது - 2-ம் உலகப்போர் முடிவுக்கு வந்தது அப்போதைய செய்தி. ஆனால் இன்று வரலாறு. 1969-ல் சந்திரனில் மனிதன் காலடி வைத்தது அப்போதைய செய்தி. ஆனால் இன்று வரலாறு.

தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலம் முக்கிய பங்கு வகித்த பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுக்கு "பெரியார்'' என்ற பட்டம் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் கொடுக்கப்பட்டதும், பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதல்வர் ஆனதும், பேரறிஞர் அண்ணா தமிழக முதல்வரானதும், அன்று செய்தி. ஆனால் இன்று வரலாறு.

டால்மியாபுரம் ரெயில் நிலையத்தில் கல்லக்குடி என்று பெயர் மாற்றம் செய்ய தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து கலைஞர் மறியல் செய்ததும், ரெயில் வருவது தெரிந்து பயந்து எழுந்து ஓடி விடுவார்கள் என்று காவல்துறை எதிர்பார்த்து ஏமாந்ததும், நிற்காமல் வந்த ரெயில் சில அடிகள் தூரத்தில் `கீரீச்' என்ற ஓசையுடன் நிறுத்தப்பட்டதும், அப்போதும் உறுதியோடும் துணிச்சலோடும் படுத்திருந்த கலைஞரை காவல்துறை கைது செய்ததும் 57 ஆண்டுகளுக்கு முன்னால் செய்தி, ஆனால் இன்று வரலாறு. (ங்கொய்யால.. ஜால்ராவுக்கு ஒரு அளவு இல்லியா..?)

கடந்த 70 ஆண்டுகளாக வெளிவந்த முக்கிய வரலாற்று செய்திகளை தொகுத்து சமீப காலங்களில் வரலாற்று சுவடுகள் என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியிட்டோம். இதற்கு ஆயிரக்கணக்கான வாசகர்களிடமிருந்து பாராட்டுகள் வந்தன. ஆனந்தவிகடன் ``வாரப் பத்திரிகைகள் தவறவிட்ட பகுதி அது. தினத்தந்தி அதை பயன்படுத்திக் கொண்டது'' என்று எழுதியது. 

தினத்தந்தி இயக்குனர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், "இந்த தொடர் கட்டுரைகளை புத்தகமாக வெளியிட்டால், இளைய தலைமுறைக்கு பயன் உள்ளதாக இருக்கும். மேலும் அனைவருக்குமே, 1942-ல் இருந்து இன்றுவரை தினத்தந்தியை ஒரு சேரப் படிக்கும் உணர்வும் உண்டாகும் என்று கருதினார். அந்த முயற்சியின் பலன்தான் இந்த ``வரலாற்று சுவடுகள்'' என்கிற தினத்தந்தி வெளியீடு.

இவ்வாறு டி.ஆர்.பீம்சிங் கூறினார்.

முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் பேச்சு :

"சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் இந்த அளவுக்கு திரளான கூட்டத்தை பட்டம் பெறுகிற நாளிலேகூட நான் பார்த்ததில்லை. எதிரே மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கலை உலகத்தினர், இலக்கிய சுடர்கள், இளைஞர்கள் என்று எழுச்சியான கூட்டம் உள்ளது.

எழுச்சியான கூட்டம் என்றாலே அது `தினத்தந்தி'யின் கூட்டமாகத்தான் இருக்கும். தினத்தந்திக்கு எப்போதுமே பெருந்திரளான கூட்டம் உண்டு என்பதை இந்த கூட்டம் காட்டுகிறது.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் `தினத்தந்தி'யை தொடங்கிய நாள் முதல் கொண்டு இன்றுவரை எளிய தமிழில் வெளிவந்து கொண்டு இருக்கிறது என்று இங்கே குறிப்பிட்டார்கள். அது எளிமையான தமிழ் மட்டுமல்ல. அது பழகு தமிழ்நடையில் இருக்கிறது.

`தினத்தந்தி' எளிமையான தமிழில் வலிமையான கருத்துக்களை எடுத்துச்சொல்லி வருகிறது. பாமரர்களும் படித்து மகிழத்தக்க பழகு தமிழில் `தினத்தந்தி'யை நடத்தி வெற்றி வாகை சூடியவர் சி.பா.ஆதித்தனார். அவரது வழியில் அவருடைய மகன் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கடமை உணர்ச்சியோடு தினத்தந்தியை நடத்தி வருகிறார்.

`தினந்தந்தி'யை அந்த நாள் முதல் இந்த நாள்வரை வரி விடாமல் படித்தவர் முதல்-அமைச்சர் கருணாநிதி. அவர் இந்த நூலை வெளியிடுவது மகிழ்ச்சியாகும். 

"வரலாற்றுச் சுவடுகள்'' புத்தகம், இந்திய விடுதலைப் போர், உலகப் போர், இந்திய அரசியல், தமிழக அரசியல், தமிழக நிகழ்வுகள் உள்பட 308 கட்டுரைகள், 800 பக்கங்கள் கொண்டு விளங்குகிறது. அதுமட்டுமல்ல அழகிய தாளில் அச்சிடப்பட்டுள்ளது. கவர்ச்சியான படங்களை கொண்டுள்ளது. வரைந்த படங்களும் இடம் பெற்றுள்ளன. அந்த படங்கள் பாடங்களாக நாம் அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது. `தினத்தந்தி'யின் வரலாற்றுச் சுவடுகள் புத்தகம் ஒவ்வொருவர் இல்லந்தோறும் இருக்க வேண்டியது ஆகும்.

`தோள் கண்டார் தோளே கண்டார்' என்று சொல்வது உண்டு இந்த நூலை கண்டார் நூலையே கண்டார். தாள் கண்டார் தாளே கண்டார் என்பதுபோல வரலாற்றுச் சுவடுகளில் உள்ள படங்களை கண்டார் படங்களையே கண்டார் என்று சொல்லும் வகையில் உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்த நண்பர் சி.பா.ஆதித்தனார் இங்கிலாந்தில் டெய்லி டெலிகிராப் என்ற பத்திரிகை எப்படி வருகிறது என்பதை பார்த்துதான் `தினத்தந்தி'யை தொடங்கினார். கலகம் ஊட்டும் கார்ட்டூன் படங்களை `தினந்தந்தி' தராமல் கருத்துள்ள கார்ட்டூன் படங்களை தருகிறது.

சோழ மன்னன் ராஜராஜன், தஞ்சை பெரிய கோவிலை கட்ட 17 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. 17 ஆண்டா என்று வியந்தது உலகு. ஆனால் 24 வருடங்கள் முயன்று தென்குமரியில் வானுயர்ந்த திருவள்ளுவர் சிலையை முதல்-அமைச்சர் கருணாநிதி நிறுவினார். சிலை அமைக்கப்பட்ட முழு வரலாற்றை `தினத்தந்தி' சிறப்பாக தொகுத்து தந்துள்ளது. அந்த திருவள்ளுவர் சிலையால் கலங்கரை விளக்கத்திற்கு கேடு வரும் என்ற நிலை வந்தது. ஆனால் அந்த நிலை முதல்-அமைச்சர் கருணாநிதியால் மாற்றப்பட்டுள்ளது.

`தினத்தந்தி'யின் "வரலாற்றுச் சுவடுகள்'' என்ற ஏடு தமிழகத்திற்கு ஒரு வரலாற்று ஏடு, கால ஏ டு, பொன் ஏடு, வைர ஏடு. `தினத்தந்தி'க்கே உரிய வைர வரிகளால் "வரலாற்று சுவடுகள்'' என்ற நூல் வனப்பாக இழைக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக டாக்டர் சிவந்தி ஆதித்தனாரையும், இளையவர் பாலசுப்பிரமணிய ஆதித்தனையும் தமிழ்நாடு மகிழ்ச்சியோடு பாராட்டுகிறது.

இந்திய விடுதலை கால போராட்டத்தை ஒரு பளிங்கு போல வரலாற்றுச் சுவடுகள் தெளிவாக வெளியிட்டுள்ளது. வரலாற்றுச் சுவட்டில் உள்ளத்தை தொடாத பகுதிகளே இல்லை.

"வரலாற்றுச் சுவடுகள்'' மெருகுடனும், பொலிவுடனும், ஆற்றலுடனும் திகழ்கிறது. இந்த நூலை வெளியிட சிறப்பானவர், தகுந்தவர் முதல்-அமைச்சர் கருணாநிதிதான்...''

அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் வா.செ.குழந்தைசாமியின் பேச்சு : 
Ad Options

`தினத்தந்தி' நாளிதழ் கொண்டு வந்திருக்கும் "வரலாற்றுச் சுவடுகள்'' என்ற இந்த நூலைப் பற்றி பேசுவதற்கு முன்பு, நான் தனிப்பட்ட முறையில் `தினத்தந்தி' அதிபர் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். 

விளையாட்டு என்பது உலகில் இன்று முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் ஒரு துறை. அதிலே தலைமைப் பொறுப்பு வகிக்கும் தமிழர்கள் மிகக் குறைவானவர்கள். டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்கள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் 10 ஆண்டுகள் தலைவராக இருந்தவர். இப்போது ஆயுட்காலத் தலைவர்.

ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் துணைத் தலைவராக எட்டு ஆண்டுகள் இருந்தவர். அதன் நிதிக் குழுவின் தலைவராக இருந்தவர். இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் தலைவர். சர்வதேச கைப்பந்து சம்மேளனத்தின் நிதிக் குழுத் தலைவர். இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும்.

ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் என்று வரும்போது நிதிக் குழுவின் முதல் தலைவராக அவர்தான் இருந்தார். சர்வதேச கைப்பந்து சம்மேளனத்தின் நிதிக் குழுத் தலைவர் என்று வரும்போது இப்போதும் அவர்தான் இருக்கிறார். நிதிக் குழு என்று வரும்பொழுதெல்லாம் டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்களை தலைவராக நியமிப்பது அவர் கைராசி உள்ளவர் என்பது மட்டுமல்ல, கை சுத்தம் என்பதாலும்தான் அந்தப் பெருமை அவருக்கு கிடைத்திருக்கிறது.

இதை பாராட்டும் வகையில், இந்த மாதம் 13-ந் தேதி சீனாவில், ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்த அதே நகரில், அவருக்கு ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் சார்பில், `ஓ.சி.ஏ.அவார்டு ஆப் மெரிட்' என்ற உயரிய விருது வழங்கி கவுரவித்திருக்கிறார்கள். தமிழகத்தில் இருந்து இந்த விருதை பெறுவது டாக்டர் சிவந்தி ஆதித்தன்தான் என்பதில் பெருமையோடு தலைவர் அவர்கள் சார்பிலும், அவை பெருமக்கள் சார்பிலும், என் சார்பிலும் அவரைப் பாராட்டுவதில் நான் மகிழ்ச்சியும், மனநிறைவும் கொள்கிறேன்.

இரண்டாவதாக "வரலாற்றுச் சுவடுகள்'' என்ற தலைப்பில் வந்திருக்கும் இந்த நூல், `தினத்தந்தி'யில் தொடர்ந்து வந்த பகுதியின் தொகுப்புகள் ஆகும். `தினத்தந்தி'யைப் பற்றியும் நான் ஒரு கருத்து சொல்ல வேண்டும்.

அது சாதாரணமான தினத்தாள் அல்ல என்பது மட்டுமல்ல `தினத்தந்தி'யின் பெருமை. உலக நாகரீகத்தை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு யுகமும் ஒரு கருவியால் உருவானது. எண்ணாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அடையாளம் தெரியாத மேதையால் உருவாக்கப்பட்ட மிக எளிய கருவிதான் வேளாண்மை யுகத்தை உருவாக்கியது.

18-ம் நூற்றாண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நீராவி எந்திரம்தான் தொழில் யுகத்தை உருவாக்கியது. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட கணிப்பொறிதான் கல்வி யுகத்தை உருவாக்கியது.

15-ம் நூற்றாண்டிலே ஐரோப்பாவில் அச்சு எந்திரம் கண்டு பிடிக்கப்பட்டது. அதற்கு பிறகு அங்கு அச்சு எந்திரத்தின் மூலம் மக்களிடம் நூல்களும், பத்திரிகைகளும் விழிப்புணர்வை கொண்டு வந்தன.

அதைப் போலவே படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை படிப்பவர்கள் என்ற நிலையை மாற்றி, பத்திரிகை செய்தி பாமரர்களையும் எட்டும் நிலையை உருவாக்கி தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி சாதனையைச் செய்த மாபெரும் கருவி `தினத்தந்தி' என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

`தினத்தந்தி'யில் வந்திருக்கும் செய்திகள் பாடப்புத்தகத்தில் இடம் பெறத்தக்கவை. பல்கலைக் கழகங்கள் பயன்படுத்தக்கூடியவை. இந்த நேரத்தில் மூன்று சான்றுகளை மட்டும் கூற விரும்புகிறேன்.

மகாத்மா காந்தியை 1948-ல் சுட்டுக் கொன்றார்கள். அதைக் குறிப்பிட்டுள்ள வரலாற்று சுவடு, அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது ஐக்கிய நாடுகள் சபை நடந்து கொண்டிருந்தது. இந்த செய்தியைப் பார்த்தவுடன் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு ஐக்கிய நாடுகள் சபை ஒத்திவைக்கப்பட்டது என்பது முக்கியமல்ல. ஐக்கிய நாடுகளின் உறுப்பினர்களாக இருந்த எல்லா நாடுகளிலும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

நாம் அறிந்த அளவில், ஒரு தனி மனிதனுக்கு எந்த நாட்டிலும், எந்தப் பதவியிலும் இல்லாத ஒருவருக்கு உலக நாடுகள் அனைத்தும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டது அன்றும் காந்திக்குத்தான், அதற்கு பிறகு யாருக்கும் அப்படிப்பட்ட ஒரு பெருமையைச் செய்ததில்லை.

இரண்டாவதாக வரலாற்றுச் சுவட்டில் இடம் பெற்றிருக்கும் ஒரு செய்தி என்னவென்றால், விண்வெளி பயணம் ஆகும். விண்வெளி வரலாற்றில் அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் மாபெரும் போட்டி உண்டு. அதில் ரஷ்யா முந்தியது. 1957-ல் பூமியை வலம் வரும் ஸ்புட்னிக் என்ற விண்கலம் பூமியை வலம் வந்தது. 1961-ல் யூரி காகரின் என்ற ரஷ்ய இளைஞர் பூமியைச் சுற்றி வந்து பத்திரமாகப் பூமிக்கு திரும்பினார்.

அதே 1961-ல் அமெரிக்கா ஷெப்பர்டு என்பவரை பூமியை வலம் வர அனுப்பி வைத்தது. அப்போது பதவியில் இருந்த கென்னடி சொன்னார், 1970-க்குள் ஒரு அமெரிக்கன் சந்திரனில் கால் வைப்பான் என்று சபதம் செய்தார். அது ஏதோ வீம்புக்கு சொன்னது போலப்பட்டது. ஏனென்றால், பூமியில் இருந்து 3-1/2 லட்சம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கிறது சந்திரன். அதைச் சுற்றி வருவதற்கு ஒரு விண்கலத்தை அனுப்ப வேண்டும்.

அந்த விண்கலத்தில் இருந்து ஒருவர் சந்திரனைச் சுற்றி வர வேண்டும். அந்த கலத்தில் இருந்து சந்திரனில் ஒருவர் இறங்க வேண்டும். இதை 1970-க்குள் அமெரிக்கா செய்து முடிக்கும் என்று கென்னடி கூறினார். அப்போது அது வீம்புபோல பட்டாலும் அதற்கு ஓராண்டுக்கு முன்பே 1969-ல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால்வைத்தார்.

1961-ல் கென்னடி இந்த வாக்குறுதியை கொடுத்தார். அவர் இல்லாவிட்டாலும், அந்த நாடு அந்த வாக்குறுதியை நிறைவேற்றியது. அதாவது சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற ஒரு குறிக்கோள் இருக்கிறது. அதை கென்னடி இருந்து செய்யாவிட்டாலும் அந்த நாடு செய்தது.

ஆனால், அந்த குறிக்கோளுக்கு ஆசிரியராக, தலைவராக விளங்கும் நமது தலைவர் முயற்சியில் இருந்து ஒரு சான்று கூற விரும்புகிறேன். திருவள்ளுவர் சிலையை நான் நிறுவுவேன் என்று 1975-ல் தலைவர் கலைஞர் சொன்னார். அதற்கு பிறகு அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகும் ஆளவிடப்படவில்லை. மீண்டும் ஆட்சி கலைக்கப்பட்டது.

1996-ல் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தபோது அதை நினைவில் வைத்து, 1975-ல் தமிழ் மக்களிடம் கொடுத்த வாக்குறுதியை 25 ஆண்டுகளுக்குப் பிறகு 2000-ம் ஆண்டிலே அவர் நிறைவேற்றினார். சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற வாக்குறுதியின் உருவமாக நடமாடும் ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அது டாக்டர் கலைஞர்தான் என்று கூறினால் அதில் எந்த விதமான கருத்து வேறுபாடும் இருக்க முடியாது.

`தினத்தந்தி'யின் வரலாற்று சுவடுகள், பள்ளியிலும், பல்கலைக் கழகத்திலும் பயன்படத்தக்கது. ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டியது. எப்படிப்பட்ட நூல் மக்களுக்கு தேவையோ, எந்த நூல் இல்லையோ அப்படிப்பட்ட ஒரு நூலை, `தினத்தந்தி' "வரலாற்றுச் சுவடுகள்'' என்ற பெயரில் நமக்கு கொடுத்திருக்கிறது.

கி.வீரமணி பேச்சு :


Ads by SmartSaver%2B%2015Ad Options
இங்கே வரவேற்புரையாற்றிய போது பெருமதிப்புக்குரிய சிவந்தி அவர்கள், `வீரமணியை ஏன் அழைத்திருக்கிறோம் என்றால், தந்தை பெரியாருக்கும், வீரமணிக்கும், தினத்தந்திக்கும் மிக நீண்டகால தொடர்பு உண்டு. இவர் வந்து வாழ்த்தினால் பெரியாரே வந்து வாழ்த்தியதாக ஆகும் என்ற மகிழ்ச்சியிலேதான் அழைத்திருக்கிறோம்' என்று என்னை அழைத்ததை நியாயப்படுத்தினார்கள். மிக்க நன்றி.

இது ஒரு தலைமுறை உறவல்ல. நான்காவது தலைமுறை உறவு. இதுவும் பதிய வேண்டிய வரலாற்றுச் சுவடுதான். பத்திரிகை உலகில் அமைதியான அறிவுப் புரட்சியை செய்தவர் ஆதித்தனார். அவரது மாமனார் மணச்சை ஓ.ராமசாமி நாடார் மலேசியா நாட்டில் இருந்தார். 

1929-ம் ஆண்டு தந்தை பெரியார் மலேசியாவுக்கு போனபோது, ஒரு புது ரோல்ஸ் ராய்ஸ் காரில்தான் பெரியார் வர வேண்டும் என்று ஏற்பாடு செய்த பெருமை ஓ.ராமசாமி நாடாரையே சாரும்.

அதுமட்டுமல்ல தமிழ் கூறும் நல்லுலகத்துக்கும், இந்த குடும்பத்துக்கும் எவ்வளவு உறவு உண்டு, எவ்வளவு தொண்டு மனப்பான்மை உண்டு என்பதற்கு அடையாளம் அவர். சிங்கப்பூரில் தமிழர் சீர்திருத்தச் சங்கத்துக்கு அடையாளமாக மிகப் பெரிய கட்டிடத்தை அளித்த பெருமை மணச்சை ஓ.ராமசாமி நாடாரை சாரும். 

அந்த பாரம்பரியத்தில் இருந்து ஆதித்தனார், அதற்கு அடுத்து சிவந்தியார், அதற்கு அடுத்து பாலசுப்பிரமணியனார் என்று அவர்களுடன் எங்களுடைய திராவிட இயக்கத்து உறவு இருக்கிறதே அது 4 தலைமுறையை கண்ட உறவு.

எனவே கலைஞர்தான் இந்த புத்தகத்தை வெளியிட சரியானவர், உரிமை பெற்றவர் என்ற அளவிலே அவரை அழைத்துள்ளார்கள். 1958-ல் வாலாஜாபாத் நகராட்சியிலே நகர்மன்ற தலைவராக இருந்த சி.ஆர்.வரதராஜன், பெரியாரை அழைத்து, ஆதித்தனார் வாழ்ந்தபோதே அவருடைய படத்தை திறந்து வைக்கும்படி கேட்டுக் கொண்டார். அந்தப் படத்தை திறந்து வைத்த பெரியார் கூறிய வார்த்தைகளை இந்த விழாவுக்கு பெரியார் கூறும் வாழ்த்தாகவே பதிவு செய்கிறேன்.

அந்த விழாவில் பெரியார், `எனது நண்பரும், எனது கொள்கையில் கூட்டுப் பணி செய்பவருமான ஆதித்தனாரின் திருவுருவப் படத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி' என்று பேச்சை தொடங்கினார். அந்த சொல் எவ்வளவு ஆழமுடையது. ஏன் இவர்கள் இந்த மேடையில் இருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட பொருத்தம் இருக்க முடியாது.

தினத்தந்தி மூலம் ஆதித்தனார் செய்த தமிழ்த் தொண்டும், தமிழ் சமுதாயத்துக்கு செய்த தொண்டறமும், பெரியாரின் கொள்கையில் செய்த கூட்டுப் பணியாகும். எனவே அந்த கூட்டுப் பணிக்கு உரிமையுள்ளவர்களாக வந்திருக்கிறோம். நாங்கள் விருந்தினராக வரவில்லை. நாங்கள் பக்கத்து வீட்டுகாரர்கள். அது மட்டுமல்ல பாசத்துக்கு உரியவர்களும்கூட. சில பக்கத்து வீட்டுக்கு சண்டை உண்டு. ஆனால் இங்கு நிரந்தர உறவு உண்டு. அதற்கு எந்த விதமான பாகுபாடும் கிடையாது.

மீண்டும் மனுதர்மம் இந்த நாட்டில் மறுபிறவி எடுக்க விடமாட்டோம் என்று முதல்-அமைச்சர் தெளிவாக கூறினார். அந்த தத்துவம், தாற்பரியம் இந்த விழாவிலும் இருக்கிறது. 7.9.61 அன்று அறந்தாங்கியில் ஆதித்தனாரை பெரியார் பாராட்டி பேசியபோது, `ஒரு லட்சம் விற்பனையாகும் தினத்தந்தி பத்திரிகை என்ற சிறந்த ஆயுதம் ஆதித்தனாரிடம் உள்ளது' என்று குறிப்பிட்டார். 

49 ஆண்டுகளுக்கு முன்பு 1961-ம் ஆண்டில் ஒரு தமிழர் ஏடு ஒரு லட்சம் விற்பனை என்றால், இந்த சாதனை தினத்தந்திக்கு மட்டும்தான் உரியது, வேறு எவருக்கும் கிடையாது.

இன்று தினத்தந்தி வாசகர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சம் என்பது தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால், தமிழர்களுக்கு ஆற்றல் இல்லை, அறிவு இல்லை, தகுதி இல்லை, திறமை இல்லை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த ஒரு கூட்டம் நாணி வெட்கப்படக் கூடிய அளவுக்கு மிகப் பெரிய சரித்திர சாதனையை இந்த ஏடு நடத்தி இருக்கிறது. இந்த ஏட்டின் தொகுப்புகள் இப்போது வரலாற்றுச் சுவடுகள் வாயிலாக ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது.

மற்றவர்கள் மறைத்த செய்தியை தினத்தந்தி மறைக்காமல் தந்துள்ளது. அதுதான் இதன் தனிச்சிறப்பு, தனித்தன்மை. காந்தியார் வடபுலத்தில் இருந்து வரும்போது, ஆச்சாரியார் ஏதேதையோ அவரிடம் சொல்கிறார். அவர் திரும்பும்போது, `தமிழகத்தில் வகுப்புவாத கோஷ்டி இருக்கிறது' என்று கூறினார். 

உடனே சுயமரியாதை உருவமான, காந்தியின் தலைசிறந்த சீடரான பச்சைத் தமிழர் காமராஜர், தன்மானத்தை பெரிதாகக் கருதி நின்ற காரணத்தால், `காந்தி அவர்களே எங்களை நீங்கள் புண்படுத்திவிட்டீர்கள். இதோ எனது ராஜினாமா' என்று பதவி விலகினார் காமராஜர். காந்தியாரை எதிர்த்த அந்த வரலாறு, வரலாற்றுச் சுவடில் பதிவாகியுள்ளது.

அதன் தொடர்ச்சிதான் இன்றைய இனப் போராட்டம். அன்று காமராஜர், அந்த இடத்தில் அண்ணாவுக்குப் பிறகு கலைஞர். வானொலியில் அறிஞர் அண்ணா பேசும்போது, பத்திரிகை தொழில் சொந்த தொழிலா? அல்லது பொது சேவையா? என்று கேட்டார்கள். ம.பொ.சி.க்கும், அண்ணாவுக்கும் இடையே நடந்த உரையாடல் அது. சொந்தத் தொழிலாக இருந்தாலும் அது பொது சேவையாக இருக்க வேண்டும், மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று இருவருமே சொன்னார்கள். அதை இன்று ஆழமாக தினத்தந்தி தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

கையேடாக தொடக்கி துண்டறிக்கையாக எடுத்து பல தியாகங்களை செய்து இன்று முரசொலியை வளர்த்து இருக்கிறார்கள். அதுபோல்தான் விடுதலையின் வரலாறும். நாங்களெல்லாம் கொள்கை ஏடுகள் என்பதால் பல எதிர் நீச்சல்களை போட்டோம். கொள்கையையும் ஓரளவுக்கு காத்துக் கொண்டு, மக்களின் விருப்பங்களையும் தெரிந்து கொண்டு, இரண்டையும் இணைத்து வெற்றி பெற்றது தினத்தந்தி ஒன்றுதான். ஆதித்தனாரின் பாரம்பரிய வெற்றிகளிலே ஈடு இணையற்ற மிகப் பெரிய வெற்றி.

தினத்தந்தியின் நாளைய வரலாற்றுச் சுவடுகளுக்கு இன்று அடித்தளமாக இருப்பது என்னவென்றால், சமீபத்தில் வரும் அதன் தலையங்கங்கள்தான். அனைத்தும் அற்புதமான தலையங்கங்கள். அவை முரசொலியின் தலையங்கமா அல்லது விடுதலையின் தலையங்கமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும். 

ஏனென்றால், நியாயம் என்றால் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாக அவை எழுதப்படுகின்றன. ஒரு பத்திரிகை தனது கருத்தை சொல்லக் கூடிய பகுதி அது. இன்று பல உயர்சாதி ஏடுகள் தங்கள் தலையங்கத்தில் விஷத்தை கொட்டுகின்றன.

இன்று (30-ந் தேதி) வந்த தலையங்கத்தை சிந்தித்துப் பார்க்க வேண்டும். கலைஞர் தனது வியூகத்தை எப்படி வகுத்து இருக்கிறார் என்று மக்களுக்கு அறிவூட்டும் தலையங்கம் அது. `ஆட்டத்தை தொடங்கிவிட்டார்' என்ற அற்புதமான தலைப்பின் கீழ் வரும் தலையங்கம் அது. எதை ஆழமாக கூற வேண்டுமோ, அதை சம்மட்டி அடியாக அடித்தும், சொடுக்குகள் போலவும் கொடுத்து இருக்கிறார்கள். (அந்த தலையங்கத்தின் பெரும்பகுதியை படித்துக் காட்டினார்).

`நவம்பரிலேயே ஆளும் தி.மு.க.வும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் ஆயத்தப் பணிகளை தொடங்கிவிட்டன. தேர்தல் விளையாட்டில் 2 அணி கேப்டன்களும் தயாராகிவிட்டனர்' என்று எழுதப்பட்டு உள்ளது. இதில் நடுநிலை தவறாமல் எழுதும்போது சொல்ல வேண்டிய கருத்தை எடுத்துக் காட்ட தயங்கவில்லை. அதில் திருவாசகம் என்ற வார்த்தையை நல்ல சொல்லாட்சியுடன் கொடுத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில்தான் தலைவர் ஒரு கருத்தும், மற்றவர்கள் ஒரு கருத்தும் சொல்ல முடியும் என்ற அப்பட்டமான உண்மையை அதில் கூறியுள்ளனர்.

உண்மையை சரியான நேரத்தில் வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு இந்த பத்திரிகை பின்வாங்காது என்ற உண்மைக்காக தலை வணங்குகிறோம். ஆயிரம் பாராட்டுகள். வரலாற்றுச் சுவடுகள் பெருகட்டும்.

கருணாநிதியின் பேச்சு :-


தினத்தந்தி நாளிதழின் "வரலாற்றுச் சுவடுகள்'' எனும் மிகப்பெரிய இந்த நூலை வெளியிடுகின்ற வாய்ப்பு கிடைத்தமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன் - பெருமையடைகிறேன். 

தினத்தந்தி - மேட்டுக்குடியிலே வாழ்கின்றவர்களுடைய பத்திரிகை இல்லை. அது - காடுமேடுகளில் தங்களுடைய வாழ்க்கையை நடத்துகின்ற சாதாரண ஏழையெளிய மக்களுடைய பத்திரிகை - சாமானிய மக்களுடைய பத்திரிகை. அந்தப் பத்திரிகை சார்பில் "வரலாற்றுச் சுவடுகள்'' என்ற தலைப்போடு அரிய நூல் ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்கள்.

நான் இந்த விழாவில் இந்த நூலை வெளியிடுவேன் என்று விளம்பரப்படுத்தியிருந்தாலும்கூட, உண்மையிலேயே இதை வெளியிட்டவர் சிவந்தி ஆதித்தன்தான். கட்டுரைகளைத் தயாரித்து, தொகுத்து, அச்சியற்றி இன்றைக்கு மக்கள் முன்னால் கொண்டுவந்து, அதைப் பரப்புகின்ற இந்தப் பணியைச் செய்திருப்பவர், என்னுடைய அருமை நண்பர் சிவந்தி ஆதித்தன். 

ஆனால், வெளியிடுவதற்கு ஒரு அடையாளம் வேண்டும். அந்த அடையாளமாக என்னை ஆக்கி, அதை அவர் வெளியிடுகிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது? உணர்வின் அடிப்படையில் - நான் வெளியிடுவதும் ஒன்றுதான்; அவர் வெளியிடுவதும் ஒன்றுதான். அதே உணர்வோடு ஒரு சில வார்த்தைகளை உங்களுக்கு இந்த விழாவிலே வழங்க விரும்புகிறேன்.

நான் நீண்ட நேரம் பேச இயலாது. காரணம், அதிக நேரம் பேசக் கூடாது என்று மருத்துவர்கள் எனக்கு அறிவுரை வழங்கியிருக்கின்றார்கள். குரல் அந்த அளவிற்கு ஒத்துழைப்பதும் இல்லை; ஒத்துழைத்தாலும் நான் மருத்துவர்களுடைய அறிவுரையையும் மீறி - வேலூர் போன்ற இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேசி, இருந்த தொண்டையையும் கெடுத்துக் கொண்டிருக்கிறேன். "தொண்டை'' கெடுத்துக் கொள்ளவில்லை; "தொண்டையை''த்தான் கெடுத்துக் கொண்டிருக்கிறேன்.

மிக அருமையான விழா இது. இந்த விழாவில் தினத்தந்தியினுடைய வரலாற்றுச் சுருக்கத்தை சிவந்தி ஆதித்தன் அவர்கள் தன்னுடைய வரவேற்புரையிலே எடுத்துச் சொல்லியிருக்கிறார்; அவ்வை நடராசன் - அவருக்கே உரிய தமிழ் ஆற்றலோடு தினத்தந்தி நாளிதழ் எப்படியெல்லாம் மக்களிடத்திலே இடம் பெற்றிருக்கிறது - அவர்களுடைய மனதிலே பதிந்திருக்கிறது என்பதை இங்கே எடுத்துச் சொன்னார்; முன்னாள் துணைவேந்தர் - தமிழறிஞர் வா.செ.குழந்தைசாமி பல வரலாற்றுச் சான்றுகள், குறிப்புகள், பல தலைவர்களுடைய வாழ்க்கைச் சரித்திரம் - இவற்றையெல்லாம் கோடிட்டுக்காட்டி, அரியதோர் புதையல் போன்ற சொற்பொழிவை இங்கே ஆற்றியிருக்கின்றார். நம்முடைய தமிழர் தலைவர் - எனது இளவல் வீரமணி - "பெரியார் நோக்கில் தினத்தந்தி'' என்ற தலைப்பில் பேசவில்லையென்றாலும், அந்தத் தலைப்பில் பேசியது போலவே பல கருத்துக்களை இங்கே எடுத்துக் கூறியிருக்கின்றார்.

அதை அவர் கூறும்போது, மேடையிலே எனக்கு ஒரு குறிப்பு வந்தது. அந்தக் குறிப்பு - "1951, 1952, 1953, 1954 ஆண்டுவரை, சென்னையிலும், பிற ஊர்களிலும், பெரியார் பேசுகின்ற பொதுக் கூட்டங்கள் அனைத்திலும், தமிழர்கள் அனைவரும் தவறாமல் - தமிழன் நடத்தும் "தினத்தந்தி''யை வாங்கிப் படியுங்கள்'' என்று பிரச்சாரம் செய்துதான் பேசி முடிப்பார்''. 

அதற்குக் காரணங்கள் கூறும்போது, "மெயில்'', "இந்தியன் எக்ஸ்பிரஸ்`` போன்ற ஆங்கில தினசரிகளும், "தினமணி'', "மித்திரன்'', "நவசக்தி'' போன்ற தமிழ் தினசரி பேப்பர்களும், "ஆனந்த விகடன்'', "கல்கி'' போன்ற வாரப் பத்திரிகைகளையும் "யாரோ'' நடத்துகிறார்கள் - பெரியார் சொன்ன வார்த்தையை நான் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால், விழா நடத்துகின்ற நண்பர் சிவந்தி ஆதித்தனுக்கு நான் சங்கடத்தை உருவாக்க விரும்பவில்லை. 

"தினத்தந்தி பேப்பர் மட்டும்தான், தமிழன் நடத்துவது - தமிழர்கள் அனைவரும் தவறாமல் "தினத்தந்தி'' பேப்பரை வாங்கிப் படியுங்கள்'' என்று கூட்டம் முடியும் நேரத்தில் பெரியார் பேசி முடிப்பார் - இது குறிப்பு.

இதையே நான் பேசி முடிக்க வேண்டுமென்று அந்தத் தோழர் எனக்கு செய்தியாக அனுப்பியிருக்கிறார் என்று கருதுகிறேன். நான் இந்த மேடையிலே பேசாவிட்டாலும், தமிழ்நாட்டு மக்கள் இனி எந்தப் பேப்பரைப் படிப்பது - எதைப் படிக்காமல் இருப்பது என்கின்ற அந்த முடிவை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்களே அந்த முடிவை எடுத்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

தினத்தந்தி வெளியிட்டுள்ள இந்த "வரலாற்றுச் சுவடுகள்'' புத்தகம் - பெரிய புத்தகம். நான் உரிமையோடு சிவந்தி ஆதித்தனிடம் சொன்னேன். அதனுடைய விலை 375 ரூபாய் - எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் - 375 ரூபாய் என்று அதனுடைய விலையைப் போட்டிருக்கிறீர்களே, அது நிரம்ப அதிகமாகத் தெரிகிறதே? என்று சிவந்தியிடம் சொன்னேன். "நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் குறைத்துக் கொள்ளுங்கள்'' என்று சொன்னார். 

நான் அவ்வளவு இரக்கமற்றவன் அல்ல; எனக்கும் தெரியும். ஒரு நூல் வெளியிடுவது என்றால், அச்சடிப்பது என்றால், விற்பனை செய்வது என்றால், அதற்காக உரிய கமிஷன் உள்பட எவ்வளவு அடக்கம் ஆகும் என்பது எனக்கும் தெரியும். முழு வடிவமாக ரூ.375-ஐ, ரூ.300 என்று கொடுத்தால் (கூட்டத்தினர் கைதட்டல்) - என்னை ஆதரிப்பதற்கு இவ்வளவு பேர் இருக்கிறீர்கள் - இங்கே கையொலி செய்தால் மாத்திரம் போதாது; இங்கிருந்து விடை பெற்றுத் திரும்பும் போதோ, அல்லது வீட்டிற்குச் செல்லும்போதோ, உங்களுடைய கையிலே இந்த "வரலாற்றுச் சுவடு'' இருக்க வேண்டும். அதை மறந்து விடக்கூடாது.

இதில் என்னென்ன குறிப்புகள் இருக்கின்றன என்று புரட்டிப் பார்த்தால், எனக்கேகூட இந்த தினத்தந்தி வரலாற்றுச் சுவடு புத்தகத்தைப் பார்த்த பிறகுதான், பல விஷயங்கள் - புதைந்து கிடக்கின்ற ரகசியங்கள் எல்லாம்கூட தெரிந்தன. யாருக்காவது தெரியுமா?

ஜின்னாவுக்கு 40-வது வயதில் ஒரு காதலி இருந்தாள்.. இது தினத்தந்தியில் இருக்கிறது. "காதலி'' தினத்தந்திக்கு இல்லை. ஜின்னாவுக்கு.. - அவருக்கு வயது 16 - 18 கூட ஆகவில்லை. 40 வயதுள்ள ஜின்னா அவரைக் காதலித்தார். ஆனால், ஜின்னாவினுடைய பெற்றோர் அதற்குச் சம்மதித்தும்கூட, அந்தப் பெண்ணின் பெற்றோர் பெரிய பிரபுக்களின் குடும்பத்தார் என்ற காரணத்தால், ஜின்னாவினுடைய குடும்பத்தைவிட செல்வாக்கு மிகுந்த குடும்பம் என்ற காரணத்தால், அந்தப் பெண்ணின் தந்தை அந்தக் காதல் திருமணத்தைத் தடுத்து விட்டார். 

காரணம் அப்போது 16 வயதுதானே ஆகிறது, 18 வயதாகட்டும் என்று சொல்லி விடுகிறார். இரண்டாண்டு காலம் அந்தப் பெண் காத்திருந்து - 18 வயதானதும் ஜின்னாவை அந்தப் பெண் திருமணம் செய்து கொண்டார். இந்தக் குறிப்பு இந்தச் சுவடிலே இடம் பெற்றுள்ளது. 

அது மாத்திரமல்ல; அதற்குப் பிறகு ஜின்னா நீண்ட காலம் வாழ முடியவில்லை. ஒரு கொடிய நோய்க்குள்ளாகி பிறகு மறைந்து விடுகிறார். ஆனால் அவருடைய கனவாக இருந்த பாகிஸ்தான் அவர் வாழும்போதே உதயமாகி விடுகிறது. பாகிஸ்தான் பெற்ற பிறகுதான் அவர் மறைந்தார் என்று ஜின்னாவின் வரலாற்றுக் குறிப்பை இதிலே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

1942-ம் ஆண்டு நம்முடைய பெருமதிப்புக்குரிய ஆதித்தனார் அவர்கள் தினத்தந்தி ஏட்டினைத் தொடங்குகிறார். அந்த ஏட்டின் சார்பாக பெரிய மலர் போல தயாரிக்கப்பட்ட இந்த அழகிய நூலை வெளியிடுகின்ற நானும், அதே 1942-ம் ஆண்டுதான் திருவாரூரில் "முரசொலி'' பத்திரிகையைத் தொடங்கினேன். 

முரசொலியும், தினத்தந்தியும் எப்படி ஒரே நேரத்தில் தொடங்கி வளர்ந்தன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆனால் தினத்தந்திக்குக் கிடைத்த அளவிற்கு வளர்ச்சி முரசொலிக்கு இல்லை. நான் அதை ஒத்துக் கொள்கிறேன். 

எந்தவொரு பத்திரிகைகாரரும் அதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். தினத்தந்தியைவிட, "முரசொலி'' பத்திரிகை ஆயிரம் அதிகமாகப் போயிற்று என்றுதான் சொல்வான். நான் உண்மையைச் சொல்வதற்குக் காரணம், முரசொலி பத்திரிகை, திராவிட நாடு, விடுதலை, திராவிடன் போன்ற இந்தப் பத்திரிகைகள் எல்லாம் ஒரு கொள்கை அடிப்படையில், அந்தக் கொள்கைக்காக நடத்தப்படுகின்ற பத்திரிகைகளாகும்.

நான் சிறுவனாக இருந்த போது படித்த பத்திரிகை "பகுத்தறிவு'' - "குடியரசு'' போன்ற ஏடுகள். வார ஏடுகள். பல்லாயிரக்கணக்கில் வெளியிடப்பட்டன என்று சொல்ல முடியாது. அப்படியிருந்தும்கூட, பல்லாயிரக்கணக்கான பத்திரிகைகள் பகுத்தறிவோ - முரசொலியோ - விடுதலையோ - வெளியிடப்படாவிட்டாலும்கூட - பத்திரிகைகள் பல்லாயிரக்கணக்கில் பரவவில்லையே தவிர, பல லட்சக்கணக்கான இளைஞர்கள் பகுத்தறிவாளர்களாக ஆவதற்கு அந்த ஏடுகள் துணை நின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.

அப்படிப்பட்ட காலக்கட்டத்திலேதான், 1942-ம் ஆண்டில் பெரியவர் ஆதித்தனார் அவர்கள் இந்த ஏட்டினைத் தொடங்கினார். எவ்வளவு கஷ்ட நஷ்டங்கள் தினத்தந்தியின் தொடக்கக் காலத்திலே இருந்தது என்பதை நான் கேள்விப்பட்டும் இருக்கிறேன் - நேரடியாக அறிந்தும் இருக்கிறேன். எதிலும் ஒரு புரட்சி செய்ய வேண்டும் என்று எண்ணுகிறவர் மறைந்த மாமேதை, பத்திரிகை உலகத்தின் ஜாம்பவான், தமிழர்களின் நலம் பாடிய பெரியவர் ஆதித்தனார் என்பதை நானும் அறிவேன், நாடும் அறியும். 

அப்படிப்பட்டவருடைய உழைப்பு, திறமை, ஆற்றல் இவைகள் எல்லாம் சேர்ந்துதான் அன்றைக்கு மதுரையிலே ஆரம்பிக்கப்பட்ட "தினத்தந்தி'' பத்திரிகை தமிழ்நாடு முழுதும் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் எல்லாம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, இன்றைக்கு இதற்கு ஈடில்லை, இணையில்லை என்கின்ற அளவிற்கு வியாபித்திருக்கின்ற தினத்தந்தியாகும்.

ஏதோ பத்திரிகை நடத்தினால் ரொம்ப சுகமாக பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் என்று யாரும் சொல்ல முடியாது. அவரும் ஒரு தொழிலாளர் போராட்டத்தில் பனைமரத் தொழிலாளர்களுக்காக நடத்திய போராட்டத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஆதித்தனார் கையிலே விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டார். இன்றைக்கு யார் யாரோ கையிலே விலங்கு போட்டதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இல்லாத விலங்கைப் போட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் அன்றைக்கு உண்மையிலேயே ஆதித்தனார் அவர்களை விலங்கிட்டு, தெருவிலே அழைத்து வந்த காட்சியைப் படம் பிடித்து பத்திரிகைகள் எல்லாம் வெளியிட்டன. 

இப்படி தொழிலாளர் போராட்டத்திற்காக கைதாகி, அதன் பிறகு மொழிப் போராட்டத்தின் போது நானெல்லாம் கைது செய்யப்பட்டபோது அவரும் கைதாகி - நான் பாளையங்கோட்டை சிறைச்சாலையிலே இருந்தபோது அவரும் மற்றொரு சிறைச்சாலையிலே இருந்தார் என்கிற அளவிற்கு தியாகங்கள் புரிந்த தியாக தழும்பேறிய உடல்தான் ஆதித்தனாருடைய உடல் என்பதை நான் இங்கே உருக்கத்தோடு உணர்ச்சியோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

ஏதோ பத்திரிகை நடத்தியதால் அதிலே சம்பாதித்தார் என்று சொல்லிவிட முடியாது. பத்திரிகை நடத்துபவர்கள் சிலர் சம்பாதிக்கின்றார்கள், இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. இருந்தாலும் நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி குறிப்பிட்டதைப் போல, பத்திரிகையிலே லாபம் வரலாம், பத்திரிகைகளினால் சம்பாதிக்கலாம், வருமானம் வரலாம், ஆனால் வருமானத்தை மாத்திரம் பார்த்து நாம் கட்டிக் காக்க வேண்டிய தமிழர் மானத்தை மறந்து விடக்கூடாது. அதை மறக்காமல் தினத்தந்தி இருந்தது - இன்றைக்கும் அதை மறக்காமல்தான் தினத்தந்தி பத்திரிகையினுடைய இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது.

இந்தப் பத்திரிகை வீரமணி குறிப்பிட்டதைப் போல தலையங்கம் எழுத ஆரம்பித்திருக்கிறது. தினத்தந்திக்கு உள்ள ஒரு சிறப்பு அதிலே தலையங்கம் வராமல் இருக்கும். அதுதான் ஒரு சிறப்பாக இருந்தது. இப்போது அந்தச் சிறப்புத் தேவையில்லை - நாம் சிறப்பாக இருந்தால் போதாது - மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் - அதற்கு நாம் நம்முடைய அறிவுரைகளை அவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்து தலையங்கம் தீட்டத் தொடங்கியிருக்கிறார்கள். 

முரசொலியிலே தலையங்கங்கள் எழுதி நிரம்ப நாட்களாகி விட்டன. யாரும் எழுதுவதில்லை. முரசொலியிலே எழுதுவதெல்லாம், மக்களுக்குத் தேவையான கருத்துக்களைச் சொல்வதெல்லாம் உடன்பிறப்புக் கடிதம்தான். கடிதம் எழுதும்போது நேரடித் தொடர்பு - தலையங்கம் எழுதும்போது வேறு மாதிரியான தொடர்பு. 

அந்தத் தொடர்பை நான் சில நாட்களாக தினத்தந்தி பத்திரிகையிலே தேடிப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லையெனினும், எடுத்த எடுப்பிலேயே கண்ணுக்குத் தெரிகின்ற வகையிலே தலையங்கம் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

அதுவொரு ஆறுதல். அந்தத் தலையங்கமே எனக்கு ஆர்வத்தை எழுப்புகிறது என்று சொல்ல மாட்டேன் - அந்தத் தலையங்கமே என்னை வாழ வைக்கிறது என்று சொல்ல மாட்டேன் - அந்தத் தலையங்கம் எனக்கு ஒரு "ஆறுதல்''. வேறு பத்திரிகைகளின் தலையங்கங்களைப் படித்துவிட்டு, இந்தத் தலையங்கத்தைப் படிக்கும்போது எனக்கு ஒரு ஆறுதல். எப்படி வெளியிலே சென்று வீட்டுக்கு திரும்புகின்றவரையில் - நமக்கு வேண்டாதவர்கள் நம்மை அடித்து, நொறுக்கி, ஏதேதோ செய்து காறித் துப்பி, காயப்படுத்தி நம்மை அனுப்பும்போது, வீட்டிற்கு வந்தால், வீட்டிலே இருக்கின்ற தாய் - "ஏனப்பா! இவ்வளவு நேரம் கழித்து வந்தாய்?'' என்று கேட்டால் எவ்வளவு ஆறுதலாக இருக்கும்?

அதைப் போல, தினத்தந்தியின் தலையங்கத்தைப் படிக்கும்போது, எனக்கு ஒரு ஆறுதல். சொந்தங்கள் நம்மை சீராட்டும்போது, பாராட்டும்போது நமக்கு ஆறுதல்தான். விடுதலை பத்திரிகையின் தலையங்கத்தைப் படித்தால், எனக்கு ஆறுதல் மாத்திரமல்ல - ஒரு ஆக்ரோஷமே வரும் - விடுதலை பத்திரிகையின் மீது அல்ல - விடுதலையால் இன்று நேற்றல்ல - நான் பயிற்றுவிக்கப்பட்டு பல ஆண்டுக் காலம் ஆகிறது. குடியரசு - விடுதலை போன்ற இந்த ஏடுகள் எந்த அளவிற்கு தமிழனை தலைநிமிரச் செய்திருக்கின்றன என்பதை நான் அறிந்தவன். அறிந்ததை மற்றவர்களுக்குச் சொன்னவன் - இப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பவன். 

எனவே, நம்முடைய சிவந்தி ஆதித்தன் அவர்கள் ஒரு அரிய முயற்சியாக இந்த நூலை - "நூல்'' என்றுதான் சொல்வேன். ஏனென்றால் இதுவொரு பத்திரிகையினுடைய தொகுப்பு அல்ல - இதுவொரு வரலாற்று ஏடு. இன்னும் ஒரு நூறாண்டுகளுக்குப் பிறகு படித்தாலும்கூட, ஒரு வரலாற்றுப் புத்தகத்தை படித்தது போன்ற ஒரு உணர்வு நிச்சயமாக எதிர்காலத் தமிழர்களுக்கு ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு அருமையான பொக்கிஷத்தை, கருவூலத்தை இன்றைக்கு சிவந்தி ஆதித்தன் வழங்கியிருக்கிறார்.

இதைப் போன்ற கருத்து நிறைந்த பெட்டகங்கள் நிரம்ப தமிழகத்திலே உலவிட வேண்டும். அப்படி உலவினால்தான், யார், யார் எப்படி வாழ்ந்தார்கள்? எந்தெந்த அரசு எப்படி நடந்தது? என்னென்ன செய்திகள் நம்முடைய நாட்டின் சரித்திரத்தில் அடங்கியிருக்கின்றன என்ற உண்மைகளையெல்லாம் நாம் புரிந்து கொள்ள முடியும்.

உள்ளே ஏராளமான படங்கள் - நான் இவற்றையெல்லாம் சொல்வதற்குக் காரணம் - உள்ளே இவ்வளவு படங்கள் இருக்கின்றன என்று சொல்வதற்குக் காரணம், 300 ரூபாய் பெறுமானம் உள்ளதுதான் இந்தப் புத்தகம் என்பதை உங்களுக்கு வலியுறுத்துவதற்காகத்தான். இட்லர் பிறந்த இடம் - "இட்லர் பிறந்த வீடு'' என்று இந்த மலரிலே இருக்கிறது. ஒரு மாடிக் கட்டடம் - அங்கேதான் இட்லர் பிறந்தார் என்று இருக்கிறது.

அதைப் போல, முசோலினியும், அவரது நண்பர்களும், அவருடைய காதலியும் மக்களால் துரத்தப்பட்டு, அடிக்கப்பட்டு, தூக்கிலே தொங்க விடப்பட்டு, அப்படித் தொங்குகின்ற அந்தப் பிணங்களை ஊரார் பார்த்து கேலி செய்துவிட்டு போகின்ற அளவிற்கு அவருடைய கொடுமைகளையெல்லாம் சித்தரிக்கின்ற அந்தச் சரித்திரச் சான்றை படமாக - இருந்த படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இப்படி பல தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிலே இருக்கின்றன.

காந்தியடிகளுடைய வரலாறு - வரலாற்று நிகழ்வுகள் - பண்டித நேரு அவர்களுடைய ஆற்றல் - பகத்சிங்கினுடைய வீரம் - நம்முடைய தமிழ்த் தேச தியாகிகளுடைய தியாகம் - அத்தனையும் இந்தப் புத்தகத்திலே இருக்கிறது. 

ஒரு முறை இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தால், பல புத்தகங்களைப் படித்த பயன் நிச்சயமாக உண்டாகும் என்ற அந்த உறுதியை உங்களுக்கு சொல்லி - இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். படித்துப் பயன் பெறுங்கள் - நாட்டு மக்கள் விழிப்புணர்வோடு உலவிட பயன்படுங்கள் - 

அதற்கு உறுதுணையாக உங்களுக்கு ஒரு ஊன்றுகோலாக நம்முடைய சிவந்தி ஆதித்தன் வெளியிட்டிருக்கின்ற இந்த அருமையான நூலினை 300 ரூபாய் விலைக்குத் தருகிறார்கள். இதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான் மீண்டும் அதைச் சொன்னேன்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

கலைஞரின் பேச்சு வழக்கம்போல உள்குத்து, வெளிக்குத்து என்று எல்லாக் குத்துக்களும் இருந்தாலும் ரசிக்கும்படி இருந்தது..! கூடவே நூலின் விலையைக் குறைக்கச் சொல்லி பலத்த கை தட்டலை வாங்கிக் கொண்டு போய்விட்டார்.

ஆனால் அரங்கத்தி்ன் உள்ளே நுழையும்போதே அதனை வாங்கிக் கையில் வைத்திருந்த என்னைப் போன்றவர்களின் சாபத்தையும் பெற்றுக் கொண்டுவிட்டார்..! அன்றைக்கு அங்கேயே நான் கேட்கும்போது 800 சொச்சம் புத்தகங்கள் விற்பனையானதாகச் சொன்னார்கள். ஒரு சிலர் பள்ளிகளுக்காக என்று சொல்லி 20, 25 பேக் செய்து வாங்கிக் கொண்டு போனார்கள்..!

எல்லாருக்கும் 75 ரூபாய் மொய்..! இதனை முன்பேயே சொல்லியிருந்து தினத்தந்திக்காரர்கள் குறைத்திருந்தால் முன்னமேயே வாங்கிய என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு 75 ரூபாய் மிச்சமாயிருக்கும்..!

இத்தனை நாள் கருணாநிதியைத் திட்டியதற்குப் பலனை அவரை வைத்துக் கொண்டு அவர் மூலமாகவே என் அப்பன் முருகன் எப்படி திருப்பியடித்திருக்கிறான்..  பாருங்கள்..! 

பரவாயில்லை. போனால் போகட்டும்.. நீங்களாவது 300 ரூபாய்க்கு வாங்கி அனுபவியுங்கள். நிச்சயம் ஒவ்வொருத்தர் வீட்டிலும் இருக்க வேண்டிய பொது அறிவுப் புத்தகம் இது.! வாங்கத் தவறாதீர்கள்..!

பொறுமையுடன் வாசித்தமைக்காக உங்களது பொற்பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்..!
http://www.truetamilan.com/