பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, August 31, 2014

அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்புஇராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை வழங்கும் ராணி லேடி மெய்யம்மை ஆச்சி விருது, தெய்வத்திரு சிகப்பி ஆச்சி விருது ஆகியவற்றுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த விருதுகள் ஒவ்வொன்றுக்கும் தலா இரண்டு லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
இது குறித்து ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"இராணி மெய்யம்மை ஆச்சி' விருதுக்கு, பெண்களின் முன்னேற்றத்துக்கு தொண்டாற்றி வரும் பெண்கள் மற்றும் நிறுவனங்களும், "தெய்வத்திரு சிகப்பி ஆச்சி' விருதுக்கு ஆன்மிகத்துடன், ஒழுக்கம், பண்பாடு ஆகியவற்றை வலியுறுத்தி கல்வி அளிக்கும் நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன் நிறுவனப் பதிவுச் சான்றிதழின் நகல், 
2013-2014-ஆம் ஆண்டு தணிக்கைச் சான்றிதழின் நகல், 
நிறுவனம் செய்து வரும் பணிகள் ஆகியவற்றுடன்,
 செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் 
"செயலாளர், 
இராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை, 
இராணி சீதை மன்றம், 
603, அண்ணா சாலை, 
சென்னை - 600 006' 
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் 
என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment