பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, October 21, 2014

அதுதான் என் ஆசை !

முன்னைப்  போலத்  தமிழ்  இனம்

இன்னல்  துயரம்  யாவும்  நீங்கித்

தன்னை  தானே  ஆள  வேண்டும்

அதுதான்  என்ஆசை !


மின்னைப்  போலக்  கதிரைப்  போல

அன்னைத்  தமிழ்த்  தாய்மொழி.  இம்

மண்ணை  ஆட்சி  செய்ய  வேண்டும் !

இதுதான்  உள்ஓசை!


உலகம்  முழுதும்  அலைந்து  சாகும்

இலக்கை  இழந்த  தமிழர்,  தமிழ்

நிலத்தில்  வந்து  வாழ  வேண்டும்!

அதுதான்  என்நோக்கம்!


புலத்தை  மீட்டுப்  புன்மை  தவிர்த்துக்

குலத்தில்  தமிழர்  ஒன்றே  என்னும்

இலக்கை  மீண்டும்  அடைய  வேண்டும் !

இதுதான்  என்ஆக்கம்!ஊரும்  பேரும்  உலகம்  போற்ற

தாரும்  நிலமும்  தமிழர்  தாங்க

ஏரும்  நீரும்  செழிக்க  வேண்டும்

அதுதான்  என்வேண்டல்!தூரும்  தும்பும்  கசடும்  நீக்கி

வேறும்  அன்பும்  மனதில்  ஊறக்

கூறும்  நலன்கள்  குவித்தல்  வேண்டும்

இதுதான்  என்தூண்டல்!


பாவலரேறு  -1985
Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment