பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, November 3, 2014

இந்தியாவில் இயங்கும் உலகிலேயே பெரிய விபச்சாரத் தடுப்பு மையம், பிரஜ்வாலா,ஹைதராபாத்.




மதுரா  மாமனிதர்  விருதாளார் -2014 

 டாக்டர்  சுனிதா  கிருஷ்ணன்  -  அறிவார்ந்த  பெண்மணி 


1972 - இல்  பிறந்த சுனிதா  கிருஷ்ணண்  ஒரு  சமூகப்  போராளி.  பிரஜ்வாலா - PIRAJWALA - என்கிற  அரசுசாரா  தொண்டு  நிறுவனத்தின்  தலைமைச்செயலர் மற்றும்  கூட்டு  நிறுவனர்.  இந்த  அமைப்பு  பாலியல்  வன்கொடுமை  என்னூம் படுகுழியில்  தள்ளப்பட்டுவிட்ட பெண்களை  மீட்டெடுத்துப்  புனர் வாழ்வளித்து,  சமூகத்தில்  அவர்களுக்குரிய  இடத்தைப்  பெற்று, கெளரவத்துடன்  வாழ  வழிவகுக்கிறது.

சுனிதா  ஓர்  அறிவார்ந்த - அற்புதமான  குழந்தை  என்பது,  அவரின்  எட்டாவது வயதில்  மனநிலை  பாதிக்கப்பட்ட  குழந்தைகளுக்கு  நடனம்  கற்றுக் கொடுத்தபோதே  புலனாயிற்று.

தனது  12-ஆம்  வயதில்  அடிப்படைவசதிகள்  கூட  இல்லாத  - மனித உரிமைகள்  மறுக்கப்பட்ட  குழந்தைகளுக்காக  ஒரு  பள்ளியை  நடத்தத் துவங்கினார்.

தனது  15-வது  வயதில்  தலித்  சமூகத்துக்காக  ஒரு  நவீன  கல்வி இயக்கத்தைத் துவங்கி  நடத்திவந்தார்.  அதுபோது  எட்டு  மனித மிருகங்களால்  பாலியல்  வல்லுறவுக்கு  ஆளானார்.  இந்தக்  கொடூர சம்பவம்தான்  இப்போது  இவர்  ஆற்றிவரும்  அரிய  சேவைகளுக்கு அடித்தளமிட்டுத்  தந்தது.

சுனிதா  தன்  பள்ளிப்படிப்பை  பெங்களூரூ,  மும்பை,  டெல்லி  மற்றும் வடகிழக்குப்  பாகத்திலுள்ள  அரசுப்  பள்ளிகளில்  தொடர்ந்தார்.  பெங்களூரூ தூய  ஜோஸஃப்  கல்லூரியில்  சுற்றுச்  சூழல்  அறிவியல்  பாடத்தில்  பட்டம் பெற்றார்.  பிறகு  மங்களூரூ  ரோஷ்னி  நிலையா  என்ற  கல்விக்கூடத்தில் மருத்துவம்,  மனோதத்துவம்  ஆகிய  துறைகள்  சார்ந்த  சமூக  சேவை மேலாண்மையில்  ( MSW)  முதுகலைப்  பட்டம்  பெற்றார்.

அதன்  பிறகு  சமூகசேவை  பாடத்தில்  முனைவர்  பட்டம்  பெற்றார். முனைவர்  பட்டத்துக்கான  கள  ஆய்வுக்காக  பாலியல்  தொழிலாளிகளின் வாழ்க்கை  முறைகளைக்  கருப்பொருளாக  எடுத்துக்கொண்டார்.

1966-இல்  ஹைதராபாத்தின்  மெஹபூப்  -  கி  -  மெஹந்தி  என்னுமிடத்திலுள்ள சிவப்பு  விளக்குப்  பகுதியில்  வசித்துவந்தவர்கள்  அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.  அதன்  விளைவாக  விபச்சாரத்தின்  பிடியில் சிக்கியிருந்த  ஆயிரக்கணக்கான  பெண்கள்  வீடு  வாசல்கள்  இல்லாத  பரிதாப நிலைக்குத்  தள்ளப்பட்டனர்.

தன்னோடு  சமசிந்தனையுள்ள  கிறிஸ்துவ  மதபோதகரான  சகோதரர், ஜோஸ் வெட்டுக்காட்டிலை  இணைத்துக்கொண்டு  ஓர்  இடைக்காலப் பள்ளிக்கூடத்தைப்  பாலியல்  தொழிலாளிகள்  காலிசெய்த  இடத்திலேயே நிறுவினார்.  அதன்மூலம்,  இளையதலைமுறைப்  பெண்கள்  பெண்  வாணிபக் கொடுமையில்  சிக்காமல்  பார்த்துக்  கொண்டார்.

ஆரம்பகாலத்தில்,  பிரஜ்வாலா  நிலையத்தின்,  அன்றாடத்  தேவைகளைப் பூர்த்திசெய்திடத்  தனக்குச்சொந்தமான  நகை நட்டுகளையும், பிறகு வீட்டின் பண்ட  பாத்திரங்களையும் கூட விற்றிடத்  தயங்கவில்லை.


இன்று  பிரஜ்வாலா,  தடுத்தல்  -  மீட்டெடுத்தல்  - மறுவாழ்வு  -  சமூகத்தோடு மீள்  உறவு -  விழிப்புணர்வு - அறிவுரைகள்  என்கிற  ஐந்து  தூண்களின்  மீது பிரம்மாண்டமாக  உயர்ந்து  நிற்கிறது.  


இந்த  அமைப்பு,  தார்மீக  -  பொருளாதார  -  சட்டரீதியானச்  சமூக ஆதரவையும்,  பாதுகாப்பையும்,  வன்கொடுமைகளுக்கு  ஆளானவர்களுக்கு வழங்குகின்றது.  அதோடு மட்டுமல்ல  வன்கொடுமைக்குக்  காரணமான சதிகாரக்  கும்பலையும்  சட்டத்தின் முன்  நிறுத்தித்  தண்டனை  வாங்கிக் கொடுக்கிறது.


இன்றையதேதிவரை  பிரஜ்வாலா  பெண் வாணிபக்  கொடுமைக்கு  உள்ளான 9500  துர்ப்பாக்கியசாலிகளை  மீட்டெடுத்து,  மறுவாழுவு  வழங்கி  அரிய சேவை  செய்து  வருகின்றது.  இந்த  நிறுவனத்தின்  சேவையை அளவிட்டுப்பார்த்தால்,  பெண்வாணிபத்துக்கு  எதிராகப்  போராடுவதிலும், இத்தகைய  பெண்களுக்குப்  புகலிடம்  கொடுப்பதிலும்  உலகத்திலேயே பிரஜ்வாலாதான்  மிகப்பெரிய  அமைப்பு  என்பது  காணக்கூடியதாக இருக்கிறது. 

இந்தத்  துறையில்  ஆரம்பகாலத்தில்  கால்பதித்த  டாக்டர்  சுனிதா, விழிப்புணர்வை  ஏற்படுத்த  சினிமா ஒரு  சக்திவாய்ந்த  நல்ல  ஊடகம் என்பதை  உணர்ந்து  கொண்டார்.  அத்துறையிலும்  கவனம்  செலுத்தி  14 ஆவணப்படங்களைத்  தயாரித்துள்ளார்.

அவற்றின்  கருத்தியல்  - பிரதியாக்கம்  அத்தனையும்  டாக்டர்  சுனிதாவின்  கைவண்ணம்தான்.

HIV / AIDS  - பால்ய  விவாஹம் - உறவுகளுக்குள்ளேயே  பொருந்தாத் திருமணம் - விபச்சாரம்  - பெண்  வாணிகம் -  மதக்கலவரம் - ஆகியவை  இந்த ஆவணப்  படங்களின்  கருப்பொருளாகும்.


தனக்கு  ஏற்பட்ட வலி,  அதனால்  எழுந்த  கோபம்  ஆகியவற்றைத் தன்னுடையச்  சக்தியாக  -  பலமாகச்  சேகரித்துக்கொண்டு  இம்மாபெரும் சேவைக்காகத் தன்னை  அர்ப்பணித்துக்கொண்டுள்ளார்.


அதன் மூலம்  தனக்குக்  கிடைக்கும்  ஒவ்வொரு  தளத்திலும்  சமூகத்தின் மெத்தனம் - அலட்சியம் - பாலியல்  வன்கொடுமைகளைச்  சகித்துக் கொள்வது  போன்ற  பொறுப்பற்ற  சுவாவத்தின்  உச்சி முடியைப் பிடித்து உலுக்குகின்றார்.

உங்களை  எது  இயக்குகிறது என்று  அவரிடம்  கேட்டால்,  தயங்காமல் வருகின்றது பதில். 

        
    
Awards & Honours
Based on her courageous and tireless work as an anti-trafficking crusader, Prajwala’s founder
Dr. Sunitha Krishnan has also received numerous accolades and honours:
2013-2014
1. Kairali Ananthapuri Award, Muscat, 2014.
2. People of the Year award from LIMCA Book of Records, 2014.
3. Woman of Substance Award, Rotary Club Mumbai, 2014.
4. Anita Parekh Award For Women’s Empowerment, Rotary Club Mumbai, 2013.
5. Rotary Social Consciousness Award & Paul Harris Fellowship, Rotary Club Mumbai, 2013.
6. Godfrey Phillips National Amodini Award, 2013.
7. Living Legends Award from Human Symphony Foundation, 2013.
8. Mahila Thilakam Award, Government of Kerala, 2013.
9. DVF Exemplary Woman Award, Dianne Von Furstenberg Foundation, 2013.
10. Outstanding Woman Award, National Commission for Women, 2013.
11. MADURA  MAAMANITHAR  AWARD , CHENNAI, TAMILNADU,  01-11-2014
2011-2012
1. Akrithi Woman of the Year, Rotary Club Coimbatore, 2012.
2. IRDS Safdar Hashmi award for Human Rights, 2012.
3. Women in Excellence Award, SHE Foundation, 2012.
4. Outstanding Social Work Award, Government of Kerala, 2012.
5. John Jay College of Criminal Justice International Leadership Award, New York, 2011.
6. N Joseph Mundaserry Award for Outstanding Social Work, Qatar, 2011.
7. Akruthi Woman of the Year Award, Rotary International, 2011.
8. G8 Woman Award, Colors TV, 2011
9. Indiavision Person of the Year Award, Indiavision TV Channel, 2011.
10. Human Rights Award, Vital Voices Global Partnership, Washington DC, 2011.
2002-2010
1. Tejaswini Award, FICCI, 2010.
2. Kelvinator Woman Power Award, Colors TV, 2010.
3. Gangadhar Humanitarian Award, Kerala, 2010.
4. Vanitha Women of the Year, Manorama Publications, 2009.
5. Trafficking in Persons (TIP) Report Heroes from US Department of State, 2009.
6. CNN-IBN Real Hero Award, Reliance Foundation, 2008.
7. Perdita Huston International Award for Human Rights, United Nations of Capital Hill, washington D.C 2006.
8. World Of Children Health Award, 2006.
9. Citation from Governor of Andhra Pradesh for Contribution to Women’s Empowerment, 2004.
10. Shree Shakti Puraskar, Government of India, 2003.
11. Ashoka Fellowship, 2002.

             

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment