
ஜோகன்னஸ்பர்க்,
100 ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கையை எதிர்த்து மகாத்மா காந்தியடிகளுடன் இணைந்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டவர், தமிழகத்தைச் சேர்ந்த தில்லையாடி வள்ளியம்மை ஆவார். 16 வயதில் கறுப்பர் இன மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த வள்ளியம்மை 1914–ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது நிமோனியா காய்ச்சலுக்கு பலியானார்.
அவருடைய தியாகச் செயலைப் பாராட்டி இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் லெனாசியா நகரில் 5 வாரங்களுக்கு முன்பு லெனாசியா நகர தமிழர் கூட்டமைப்பின் சார்பில் வள்ளியம்மையின் மார்பளவுச் சிலை ஒன்று நிறுவப்பட்டது. இந்த சிலையை நேற்று பள்ளிச் சீருடை அணிந்து வந்த சிலர் இரும்பு கம்பியால் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதில் அந்தச் சிலை முற்றிலுமாக சேதமடைந்தது. இந்த சம்பவத்துக்கு லெனாசியா நகர தமிழர் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
நன்றி :- தினத்தந்தி
0 comments:
Post a Comment