பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, November 8, 2014

போர்க் குற்ற விசாரணையைக் குலைக்க இலங்கை முயற்சி

விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்டப் போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணையைக் குலைக்கும் வகையில், பொதுமக்களையும், மனித உரிமை அமைப்புகளையும் இலங்கை அரசு அச்சுறுத்தி வருவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் ஸயீத் ராத் அல் ஹுûஸன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
போர்க் குற்றம் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படும்போது, பொதுமக்களும், மனித உரிமை அமைப்புகளும் போதிய ஆதாரங்களை அளிப்பதைத் தடுக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
அவர்களைக் கண்காணிப்பதன் மூலமும், அவமானப்படுத்துவதன் மூலமும், அச்சுறுத்தி வருகிறது.
இலங்கைக்கு எதிரான மிகத் தீவிரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இருந்தும், போர் முடிந்த 2009-ஆம் ஆண்டிலிருந்தே நடுநிலையான விசாரணைக்கு இலங்கை அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. மேலும், தவறான தகவல்களையும், உண்மையை திசை திருப்பும் தகவல்களையும் வேண்டுமென்றே பரப்பி வருகிறது என்று ஸயீத் ராத் அல் ஹுஸான் குற்றம் சாட்டியுள்ளார்.
நன்றி :- தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment