பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, November 8, 2014

மாயமானோர் குறித்து குவியும் புகார்கள்

Family members of the persons who disappeared on account of the war in the Kilinochchi district submitting complaints to the Presidential Commission on Disappearances. Picture by Vavuniya North group cor
இலங்கையில், அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்டப் போரின்போது, முல்லைத்தீவு பகுதியில் காணாமல் போனவர்கள் குறித்து ஆயிரக்கணக்கில் புதிய புகார்கள் வந்துள்ளதாக, அதுகுறித்து விசாரணை நடத்திவரும் குழு தெரிவித்துள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரணகாமா தலைமையிலான அந்தக் குழுவின் செயலர் ஹெச்.டபிள்யூ. குணதாஸா இதுகுறித்து கூறியதாவது: கடந்த நான்கு நாள்களாகவே, அதிக அளவில் மக்கள் முன்வந்து காணாமல் போனவர்கள் குறித்த புகார்களைப் பதிவு செய்து வருகின்றனர். கடந்த நவம்பர் 2-ஆம் தேதியிலிருந்து, எட்டாவது முறையாக விசாரணைக் குழு பொதுமக்களை சந்திக்கிறது.
காணாமல் போனவர்கள் குறித்து அவர்கள் கூறுவதை, நாங்கள் பதிவு செய்து வருகிறோம் என்றார் அவர்..
அதிபர் மகிந்த ராஜபட்சவால் நியமிக்கப்பட்ட இந்த விசாரணைக் குழு, இதுவரை 19,500 புகார்களைப் பெற்றுள்ளது.
அவற்றில், சுமார் 5,000 புகார்கள், காணாமல் போன பாதுகாப்புப் படையினரின் உறவினர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment