பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, October 12, 2014

SUPPORT AMMAA - என்றொரு வலைத்தளம் உடனடி விடுதலைக்கான வழிகளைக் கூறுகிறது !

 
 

http://www.supportamma.in/p/your-support-submit.html

  வலைத்தளத்தில்  காணப்படும்  வகைகள் :-

    செய்திகள் ,     வீடியோ ,     அஹிம்சைப் போராட்டம்,      உணர்வுகள்
    
    பிரபலங்கள் கருத்து,     சிறப்பு பூஜை,      தலைவர்கள் ஆதரவு ,     யாகம்
    
   சினிமா நடிகர் நடிகைகள் ,  ஜாமீன் மனு,     வியாபாரிகள்,  

   அங்கப்பிதரட்சணம்,   கிராமிய கலைஞர்கள்,  சாதனைத்  தொகுப்பு
    
   மாணவர்கள் ,  மீனவர்கள் போராட்டம் ,     வாசகர் ,     விடுதலை


இடம்பெற்ற  கருத்துகள் :-
    
தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு பகுதிவாரியாக இறைவனிடம் அம்மாவுக்காக செய்த சிறப்பு பிரார்த்தனைகள் வேண்டுதல்கள் சிலவற்றின வீடியோ தொகுப்பு !...

 மக்களின் அன்பை பெற்ற முதலவர் அம்மாவின் சாதனை தொகுப்பு வீடியோ.

மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கிடைத்த தீர்ப்புக்கு ராம்ஜெத்மலானி கண்டனம்.

மக்களின் முதல்வருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தமிழகம் முழுவதும் தலைவர்கள் கருத்து.

 ஜெயலலிதா விடுதலையில் தாமதம்: 10ம் வகுப்பு மாணவி தீக்குளித்து 

மக்களின் முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து சினிமா நடிகர் நடிகைகள் அறப்போராட்டம்.

 ஜெயலலிதா உடனடியாக விடுதலையாக வேண்டும் என்று கிராமியக் கலைஞர்கள் இன்று வித்தியாசமான முறையில் கூட்டு பிரார்த்தனை நடத்தினார்கள். தமிழ்நாடு 

 மக்களின் முதல்வருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு நாஞ்சில் சம்பத் கண்டனம்.

ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு குறித்து சரத்குமார் கருத்து !

    
உங்கள் ஆதரவை பதிவு செய்யுங்கள்.


நம் அன்பு மற்றும் ஆதரவை அம்மாவுக்கு நேரடியாக தெரிவிக்கும் இடம் !


சட்டப்படி ஜெயலலிதா உடனடியாக விடுதலையாக முக்கியமான வழிகள் !

Support Amma   என்ற   இத்தளம்   வழியாக பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் தங்களின் ஆதரவையும், செய்தியையும் பகிர்ந்து கொள்கின்றனர் அந்த வகையில் வாசகர் ஒருவர் அனுப்பிய செய்தியை இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.  

தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போதைய சட்டச் சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இங்கு கொடுத்திருக்கும்  கருத்துக்களை சட்ட வல்லுனர்கள் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.

ஒரு மாநில முதல்அமைச்சரை கீழமை நீதிமன்ற நீதிபதி சர்வாதிகாரத்தனமாகக் கைது செய்தது செல்லாது என கவர்னர் அறிவிக்க வேண்டும். இதற்குத் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னரிடம் சபாநாயகர் முறையிட வேண்டும். கவர்னர் ஆணையிட்டால் உடனடியாக பெங்களூர்  சிறையில் இருந்து ஜெயலலிதா விடுதலையாவார்.


ஜெயலலிதா மீதான தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் கவர்னருக்கு உள்ளது. இதற்காகத் தமிழக சட்டசபை கவர்னருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். இதனால் ஜெயலலிதாவுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியும். உடனடியாக ஜெயலலிதா மீண்டும் முதல் அமைச்சராக முடியும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கவர்னர் மதிக்காமல் இருப்பது, பயன்படுத்தாமல் இருப்பது தான் இன்னும் விசித்திரமாக உள்ளது. 

இதை அதிமுக சட்ட வல்லுனர்கள் ஏன் பயன்படுத்த தயங்குகிறார்கள் என்பதும் புரியாத புதிராக உள்ளது. ஒரு மாநில முதல் அமைச்சருக்கு கீழமை நீதிமன்ற நீதிபதி தண்டனை அறிவிப்பது தவறில்லை. ஆனால் அவரை தண்டிக்கும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை. அதை கவர்னர் தான் செய்ய வேண்டும். இந்த விடயத்தை சட்ட வல்லுனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்திருக்க வேண்டியவை:


 நீதிபதியிடம் தான் தற்போது தமிழக முதல் அமைச்சர் பொறுப்பில் இருப்பதால் பதவியை  ராஜினாமா செய்து விட்டு இந்த நீதிமன்றத்தில் சரணடைகிறேன் என்று கூறியிருக்க வேண்டும்.


தீர்ப்பின் நகலைப் பெற்றுக்கொண்டு உடனடியாக சென்னை திரும்பி கவர்னரிடம் ராஜினாமாக் கடிதம் கொடுத்திருக்க வேண்டும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மேல்முறையீட்டு வழிகளை ஆய்வு  செய்திருக்க வேண்டும்.


 ஜெயலலிதா தமிழக முதல் அமைச்சராகவும், கூடவே இசட் பிரிவு பாதுகாப்பிலும் உள்ளார்.  எனவே கீழமை நீதிமன்ற நீதிபதி வலுக்கட்டாயமாக ஜெயலலிதாவைக் கைது செய்திருக்க முடியாது. அதிமுக வழக்கறிஞர்கள் பதற்றத்தித்தில் கோட்டை விட்டு விட்டார்கள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?


 தீர்ப்பை எதிர்ப்பது, 100 கோடி அபராதத்தை எதிர்ப்பது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். முதலில் தமிழக முதல்வரை கைது செய்து சிறையில் அடைத்தது தவறு!. நீதிபதி தனது அதிகார வரம்பை மீறி இருக்கிறார் என்ற சட்டப்பிரச்சனையை தான் அதிமுக வழக்கறிஞர்கள் கையில் எடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இப்போது ஜாமீனுக்காக அலைவது தேவையில்லாத நடவடிக்கை!


 தமிழக முதல் அமைச்சர் கைது செய்யப்பட்டவுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் உடனடியாக ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கலாம். இதனால் கவர்னர், மாநில காவல் ஆணையர், தலைமைச் செயலாளர் ஆகியோர் நீதிமன்றத்திற்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருப்பார்கள். 

(ஜெயலலிதா கைது செய்யப்பட்ட விடயம் அடுத்த நாள் தான் கவர்னருக்கும் தலைமை செயலருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை கவனிக்கவும்) 

இங்கு பலருக்கும் ஒரு சந்தேகம் வரலாம்.  குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் உடனடியாக ஜெயலலிதா தனது முதலமைச்சர் பதவியை இழக்கிறார். எனவே மேலே சொல்லபடும் காரணங்கள்  எல்லாம் குழந்தைத்தனமானது எனலாம். 

குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழக்கிறார் என்பது சரிதான்.  ஆனால் அதற்கு வழிமுறைகள் இருக்கிறது. முறையாகக் கவர்னர் தான் இதை அறிவிக்க வேண்டும்.  அல்லாமல் கீழமை நீதிமன்ற நீதிபதி அல்ல. தன்னிச்சையாகப் பதவிஇழக்க முதலமைச்சர் பதவி  ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல. அதற்கு என்று ஒரு மதிப்பு இருக்கிறது. அதை கர்நாடக நீதிமன்றம்  காலில்போட்டு மிதித்துள்ளது. இதைத் தமிழகம் இன்னும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதுதான் கேவலமாக உள்ளது.

முதலமைச்சர் பதவியை கீழமை நீதிமன்ற நீதிபதி பறிக்க முடியும் என்றால் கவர்னர் எதற்கு?  

தமிழக அரசுக்கு நிகழ்ந்த இதே நிலையை இந்திய அரசுக்கு நிகழ்வதாக ஒப்பிட்டு பாருங்கள். பிரதமரை பதவிநீக்கம் செய்ய யாருக்கு அதிகாரம் இருக்கிறது? ஜனாதிபதிக்கா? அல்லது கீழமை நீதிமன்ற நீதிபதிக்கா?

மெத்தப் படித்த கனவான்களே இன்னும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கேவலப்படுத்தாதீர்கள். உலகம் உங்களைப் பார்த்து உரக்கச் சிரிக்கிறது.

சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் ஜெயலலிதாவுக்கு எதற்குச் சிறையில் சொகுசு அறை?  இதிலிருந்தே தெரியவில்லையா சட்டம் சில விதிமுறைகளை வைத்திருக்கிறது என்று! 

கர்நாடக வழக்கறிஞருக்கு முறையாக ஆணை கிடைக்கவில்லையாம் அதனால் ஜெயலலிதா ஜாமீன்  வழக்கில் வாதாட முடியாது என்கிறார். அதை அனைவரும் சரி என ஒப்புக்கொள்கிறோம். 

அதே  போல முறையாகக் கவர்னருக்கு அறிவித்து விட்டுத்தானே ஜெயலலிதாவைக் கைது செய்திருக்க வேண்டும். அதை ஏன் கேள்வி கேட்கத் தயங்குகிறீர்கள்? 

தூக்குத் தண்டனை விதித்தவுடன் நீதிபதியே எமனைப்போல தூக்குக் கயிற்றை வீசிக் குற்றவாளியை அங்கேயே கொல்வது போல உள்ளது நீதிபதி குன்காவின் செயல். 

நல்லவேளை நீதிபதி  தூக்கு தண்டனை விதிக்கவில்லை. அப்படி விதித்திருந்தால் உடனே தன் முன் இருக்கும் சுத்தியலை எடுத்து வீசி கொன்றிருப்பாரோ என்னவோ? 

ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக  முதலமைச்சர் என்ற மாண்புமிகு பதவில் இருப்பவரை தண்டித்தது எவ்விதத்தில் நியாயம் ஒரு நிறுவனத்தில் எடுபடி வேலை செய்யும் நபரை பணிநீக்கம் செய்யவே விதிமுறைகள்  இருக்கிறது. அதைவிட கேவலமானதா முதல் அமைச்சர் பதவி? கொஞ்சமாவது அறிவுபூர்வமாக  யோசியுங்கள் !

- வாசகர்
www.supportamma.in

  Copyright © 2014 Support Amma | Powered by Amma Support Team 


ஈடிணையற்ற  இந்திய  ஜனநாயகம்  ஓர்  இந்தியக்  குடிமகனை இவ்வாறெல்லாம்  சிந்திக்கத்  தூண்டியிருக்கிறது.


கண்ணில் பட்ட  சரியானவற்றை எல்லாம் எடுத்துரைப்பது  வழக்கம் !

அம்மாவிற்கு  ஆதரவான இந்தத்தளம்  கண்ணில் பட்டது.  மாற்றுக்  கருத்துகளுக்கும்  இடம்தரும் தினமணி இக்கோணத்திலும்  மக்களிடம்
கருத்துகளைக் கேட்கலாம். 

சர்க்காரியா கமிஷன்  அன்றைய முதல்வரின்   ஊழலை  அறிவியல் பூர்வமானது  என்று  குறிப்பிட்டதும், அன்றைய  மலைப் பத்திரிக்கையின்  ஆசிரியர் டி.ஆர்.ஆர்.  பக்கம்  பக்கமாக அவற்ரை அலசி  ஆராய்ந்ததும்,  கூட்டணி தத்துவத்தில்  குற்றங்கள்  காணாமற்போனதும்தானே  கடந்தகால  வரலாறு.

காலம்  தீர்ப்புக்களைத் திருத்தி எழுதும் என்ற நம்பிக்கையோடு  அம்மாவிற்கு  ஆதரவான  தளத்தையும், ஆதரவான  கருத்துகளையும் திரட்டியுள்ளது  ஜனநாயகம்தானே ?

பார்வையில் பட்ட தளத்தை வலைப்பூ அன்பர்களுக்கும், தினமணிக்கும் தெரிவித்துவிட்டேன்.  மற்றது  விதிப்படி !  

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

1 comments:

  1. VERY GOOD ARGUEMENTS BUT OUR LAWYERS ARE SHORTSIGHTED> WHAT TO DO

    ReplyDelete