பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, October 12, 2014

மூத்த தமிழறிஞர் திருக்குறள் கழக நிறுவனர் வே.ராமதாஸ் காலமானார்

மூத்த தமிழறிஞரும்,புதுக்கோட்டை திருக்குறள்கழக நிறுவனருமான வே.ராமதாஸ்(82) காலமானார்.

புதுக்கோட்டை கடந்த 1954 -ல் அண்ணலார் சுப்பிரமணியனருடன் இணைந்து திருக்குறள்கழகத்தை தொடங்கியவர். அன்றிலிருந்து திருக்குறள்கழகத்தின் செயலராக இருந்து வந்தார்.  திருக்குறளைப்பரப்பும் பணியை  தனது இறுதி மூச்சுவரை தொய்வின்றி செய்து வந்தார். பாவாணர், பாரதிதாசன், சி. இலக்குவனார், வ.சுப. மாணிக்கம் போன்ற தமிழறிஞர்களிடம் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர்.

இவரது தமிழ்த்தொண்டை போற்றி தமிழக அரசு தமிழறிஞர்களுக்கான ஓய்வூதியம் வழங்கிவந்தது.புதுக்கோட்டை காமராஜபுரம்  ஆறாம்வீதியில் வசித்து வந்த நிலையில், சனிக்கிழமை இரவில் ஏற்பட்ட  திடீர் மாரடைப்பால் புதுகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருக்கு கலைவாணன், ஹரிகிருஷ்ணன், தங்கலெட்சுமி ஆகிய வாரிசுகள் உள்ளனர். இவரது இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெறுகிறது. 

தொடர்புக்கு... 98657 27823. 

நன்றி :- தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment