பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, October 11, 2014

வயது 65. இனிமேல்தான் மகாத்மாவின் சத்தியசோதனையைப் படிக்கப்போகின்றேன். நீங்கள் ?



காந்தியடிகள்  மறைந்து  65  ஆண்டுகள் கடந்துவிட்டன.  காந்தியைப்பற்றிப்  பேசும்  நாம்  அவரைப்பற்றிப்  படித்திருக்கிறோமா  என்று  கேட்டால்  இல்லை  என்றே  பலர்  பதில்  கூற  வேண்டியிருக்கும். 

என்றும்  நினைவில்  வாழும் அருட்செல்வர்  பொள்ளாச்சி  நா. மகாலிங்கம்  ஐயா அவர்கள்  முன்வெளியீட்டுத்திட்டத்தில்  20  புத்தகங்களில் முழுச்சரித்திரத்தையும்  தமிழில்  நமக்காகக்  குறைந்தவிலையில்  வழங்கினார். வாங்கி வைத்ததோடு  சரி. புரட்டிப்பார்த்து  மலைத்துப்போனேன். 

வாசிக்கப்படாத  புத்தகங்களை  அச்சடிக்கப்பட்ட  குப்பைக்  காகிதங்கள் என்பார் உழைப்பால்  உயர்ந்த  மதுரா டிராவல்ஸ்  உரிமையாளர், கலைமாமணி வீ.கே.டி. பாலன். நினைவில்  வாழும் திரைத்துறைக்  கவிஞர் , இலக்கியச் செல்வர், முத்தமிழ்  வித்தகர் , அனுபவிக்காத  பருவமங்கையரோடு ஒப்பிட்டுக்கூறுவார்..  சில  ஆண்டுகள்  என் வீட்டு அலமாரியில் உறங்கிக்கொண்டிருந்த  அந்த  20  புத்தகங்களையும் சென்னைப்  புறநகரில் உள்ள  அம்பத்தூர் நூலகத்திற்கு, நண்பர்  நக்கீரன்  பொறுப்பாளராக இருந்தபோது  இலவசமாக  வழங்கிவிட்டேன். .   

மகாத்மா காந்தியின்  சுயசரிதை  சத்திய  சோதனை என்ற பெயரில்,  ரா.வேங்கடராஜூலு அவர்கள்  மொழி பெயத்துள்ளார்.620 -பக்கங்களுக்கும் மேற்பட்ட பக்கங்களைக்கொண்ட  நூல் பல  இடங்களில்  கிடைக்கிறது. குறிப்பாக  தமிழ்நாட்டில்  உள்ளா  காதிக் கடைகளில் நிச்சயம்  கிடைக்கும். போகும்போதெல்லாம்  ஒரு புத்தகத்தை  வாங்குவேன். சில  பக்கங்கலை மட்டும்  மேலோட்டமாகப்  படித்துள்ளேன். யாராவது  வீட்டிற்கு  வரும்போது அந்தப் புத்தகம் அவருக்குப்  பரிசளிப்பாகாச்  சென்றுவிடும்.  

அண்மையில்  அகமதாபாத் சென்றிருந்தேன். சபர்மதி  ஆசிரமத்தைப் பார்க்காமல்  திரும்பமுடியுமா? நாள்தோறும் திருவிழ்க்ஷாக்கோலம். உலம் முழுவதிலிருந்து  மக்கள் வந்து சென்ற வண்ணம்  உள்ளனர். மனச்சாட்சி இடித்துரைத்தது. மேலே  குறிப்பிடப்பட்டுள்ள புத்தகம்  ஒர் மலிவுப் பதிப்பு. நவஜீவன்  டிரஸ்டால்  1994-ல்  வெளியிடப்பட்டுள்ளது. அந்தச்  சிறு புத்தகத்தையாவது,  படித்துவிடுவது என்பது  தீர்மானம்

 .20 வால்யூம்களுடன் ஒப்பிடும்போது 600 பக்கங்கள்  சிறு நுல்தானே. வாங்கினேன். வங்கிவந்து  ஒரு வரும் ஆகிவிட்டது. இன்னும்  படிக்கவில்லை. இது அக்டோபர்  மாதம். எப்படியும்  படித்துவிடுவது என்று  தீர்மானித்துக் கையில்  எடுத்துள்ளேன்.1994- ஆம்  ஆண்டு  புள்ளிவிவரப்படி  இந்தப்  புத்தகம் 1,40,000 பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

முதலில்  படித்து முடிப்போம். பின்னர் எதிரொலிப்போம். மற்றவர்களையும் வாங்கிப் படிக்கச்  சொல்வோம். முடிவு செய்தேன்  எனவே  இந்தப்  பதிவு.


வாழ்க  நீ !  எம்மான்,  இந்த  வையத்து  நாட்டி  லெல்லாம்

தாழ்வுற்று  வறுமை  மிஞ்சி    விடுதலை  தவறிக் கெட்டு

பாழ்பட்டு  நின்ற  தாமோர்     பாரத  தேசந்  தன்னை

வாழ்விக்க  வந்த  காந்தி  மஹாத்மா  நீ  வாழ்க !  வாழ்க “  

-  மகாவி  சி.  சுப்பிரமணிய  பாரதியார்

-----------------------------------------------------------------------------------------------------------------------------

மோஹன்தாஸ்  கரம்சந்த்  காந்தியை  தேசப்பிதா என்று  அறிவிக்க

இந்திய அரசியல் சட்டத்தில் இடமில்லை என்றொரு  கருத்து உள்ளது.

விவரம் அறிந்தோர் தெரிவிக்கலாம்,

--------------------------------------------------------------------------------------------------------------------------

Name of  the  book  :-  SATHYA  SOTHANAI

AUTHOR  :-  Mahathma  Gandhi

Tamil Translator  :-  R. Venkatarajulu

June  1994  - Fifty- third Reprint :- 15000  copies,

October  2013  -  Total  6, 40, 000 Copies

Phone : 079 - 27540635,  27542634

E-mail :- sales@navajeevantrust.org

Website : www.navajeevantrust.org

Main Distributor

Gandhian  Literature  Socitey

Tamilnad  Gandhi  Amarak  Nidhi

Madurai  -  625  020  Ph. : 0452 - 2533957

*******

Gandhi  Peace  Foundation

248/332  Ambujammal  Street

Alwarpet,  Chennai  -  600  018

Ph.  044-  24993839

******

Sarvodaya  Ilakkiya  Pannai

32/1,  West  Veli  Street

Madurai  - 625  001

Ph.  0452 - 2341746,  0452  -  5548483  



Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment