பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, October 14, 2014

ஊரைச் சொல்லியாச்சு ! நிகழ்வைச் சொல்லியாச்சு ! படங்களை மட்டும் காணோமே, ஏன் ?15-10-2014. அதிகாலை 5 மணி ! கூகிள்  தமிழ்ச்  செய்திகளில்  பளிச்சிட்டது  ஓர்  தகவல். . சென்னை  பெரியமேடு  ராஜா முத்தையா  சாலை ... ஊர், பகுதி,  தெரு சொல்லியாச்சு. ஓக்கப்பட்டு வந்த வாகனம்  ஆட்டோ  என்றும்  ஓட்டிவந்தவர்  முருகன் என்றும்  சொல்லப்பட்டுவிட்டது.

ஆட்டோவில்  கடத்திவரப்பட்டது  திருடப்பட்ட மகாவிஷ்ணு சிலை என்பதும்  அறிவிக்கப்பட்டுவிட்டது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஓட்டலுக்குச்  சொந்தக்காரர் 50 வயதுக்காரர்  குருநாம் சிங், ரியல்  எஸ்டேட் அதிபர் இஸ்மாயில்,  48  வயதுக்காரர்  என்றும்  குறிப்பிடப்பட்டுவிட்டது. 

மறைத்துக்  கொண்டுவரப்பட்ட மகாவிஷ்ணு சிலையின்  உயரம் ஒன்றரை அடி என்பதையும் தெரிவித்துவிட்டனர்.

மதிப்பு 5 லட்சமாம். திருடப்பட்டது புராதன  கோவிலிலிருந்தாம். மூன்றுபேரும்  சிலை கடத்தல்  கும்பலைச்  சேர்ந்தவர்களாம். கைது செய்த  போலீஸார் வழக்கம்போல்  சிலையை  மீட்டனர்.  ஆட்டோவைப்  பறிமுதல் செய்தும் உள்ளனர்.

ஊரையும் சொல்லி நபர்களையும்  சொல்லி நிகழ்வையும் சொல்லியவர்கள்  படங்களையும்  போட்டால்  என்ன  விபரீதம் நடந்துவிடுமோ தெரியவில்லை.

ஒரு சிலை, ஒரு  ஆட்டோ, மூன்று  நபர்கள் என்று மட்டும்  குறிப்பிட்டிருந்தால் கூட்டத்தவரைப்  பிடிப்பதற்கு  ரகசியம் காக்கின்றனர் என்று எடுத்துக்கொள்ளலாம்.

எல்லாவற்றையும்  பகிரங்கப்படுத்திவிட்டு  படங்களைமட்டும் மறைத்த  மர்மம் யாதோ? 

பேப்பரின்  பெயரைத்  தெரிந்து  கொள்ள விரும்புவோர்,  கூகிள்  செய்திகளுக் 

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment