
இராமேசுவரத்துக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில்
நிறுத்தப்பட்டிருந்த படகுப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக,
படகுத் துறை அமைக்கப்படவிருப்பதாக இலங்கைக்கான இந்தியத் தூதரகம்
தெரிவித்துள்ளது.
இலங்கை உள்நாட்டுப் போரினால் அந்நாட்டின் கொழும்பு நகருக்கும்,
யாழ்ப்பாணத்துக்கும் இடையில் நிறுத்தப்பட்டிருந்த யாழ்தேவி ரயில் சேவை பல
ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திங்கள்கிழமை தொடங்கியது.
இதற்கான ரயில் பாதைகளைச் சீரமைக்கும் பணியில், இலங்கைக்கு இந்தியா உதவியது.
இதுகுறித்து கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையின் மிக நெருக்கமான அண்டை நாடு என்ற முறையில் அந்நாட்டில் அமைதி,
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும், மறு கட்டமைப்பதிலும் முழுமையான
ஆதரவளிக்க இந்தியா எப்போதும் தயாராக உள்ளது.
இலங்கை வடகிழக்கு ரயில் பாதை சீரமைப்புத் திட்டத்துக்கு இந்தியா அளித்து
வரும் உதவி, இரு நாட்டு நல்லுறவில் ஒரு புதிய மைல் கல் ஆகும்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக தலைமன்னாரில் ஒரு படகுத் துறை அமைக்கப்படவுள்ளது.
தமிழகத்தின் ராமேசுவரத்துக்கும், தலைமன்னாருக்கும் இடையில் படகுப்
போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக இந்தப் படகுத் துறை
அமைக்கப்படவுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி :- தினமணி
0 comments:
Post a Comment