பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, October 14, 2014

சென்னையில் சிலை கடத்தல் கும்பல் கைது ரூ.1 கோடிக்கு விலை பேசப்பட்ட சாமி சிலை மீட்பு - படத்துடன் தகவல் தந்தது தினத்தந்தி



சென்னையில் சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.1 கோடிக்கு விலை பேசப்பட்ட சாமி சிலை மீட்கப்பட்டது.

சிலை கடத்தல் கும்பல்

சென்னை பெரியமேடு பகுதியில் சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேர், ஒரு சாமி சிலையை விற்பனை செய்ய ஆட்டோவில் வருவதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவின், ரவுடி ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் சிவராம்குமார், சார்லஸ், ராஜேஷ்கண்ணா ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் பெரியமேடு, ராஜாமுத்தையா சாலையில், குறிப்பிட்ட ஆட்டோவை நேற்று முன்தினம் மடக்கிப்பிடித்தனர்.

ஒரு கோடி ரூபாய்

அந்த ஆட்டோவில் மகாவிஷ்ணு சிலை ஒன்றை துணியால் மூடி மறைத்து எடுத்து சென்றது தெரிய வந்தது. 9 கிலோ எடையுள்ள, 1½ அடி உயரமுள்ள அந்த சிலை, கோவில் ஒன்றில் திருடப்பட்டது என்று தெரிய வந்தது. அந்த சிலையை ரூ.1 கோடிக்கு விற்பனை செய்ய எடுத்துச் சென்றதும், கண்டறியப்பட்டது.

சிலையை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். சிலையை ஆட்டோவில் கடத்தி வந்த அயனாவரத்தைச் சேர்ந்த முருகன் (வயது 48), காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த குருநாம் சிங் (50), அண்ணாநகரில் வசிக்கும் இஸ்மாயில் (48) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். குருநாம் சிங் ஓட்டல் அதிபர். சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இஸ்மாயில் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். முருகன் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருபவர். அவரது ஆட்டோவில்தான் சிலையை கடத்தி வந்தனர். இதனால் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

கும்பல் தலைவனுக்கு வலை

இந்த கும்பலின் தலைவனாக செயல்படும் ராயபுரம் தர்மலிங்கத்தை போலீசார் தேடி வருகிறார்கள். தர்மலிங்கம் மீது சிலை திருட்டு தடுப்பு போலீசில் வழக்கு உள்ளது. அவர் விலை மதிப்புள்ள சாமி சிலைகளை திருடி விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். ஏற்கனவே புத்தர் மற்றும் நடராஜர் சிலைகளை திருடி விற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அவர் பிடிபட்டால்தான், தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணு சிலை எந்த கோவிலில் திருடப்பட்டது என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். அவரை தேடி வருவதாகவும் போலீசார் கூறினார்கள். சிலை திருட்டு கும்பலை மடக்கிப்பிடித்த, தனிப்படை போலீசாரை கமிஷனர் ஜார்ஜ் பாராட்டினார்.

நன்றி :- தினத்தந்தி -

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment