பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Wednesday, October 15, 2014

தமிழகம் மேய்ச்சல்காடு


கலைகள்  காட்சி  யென்று  கபடப்  பெயரை  வைத்து

விலைக்கு  மேனி  காட்டும்  வேசி  நடனத்தாலே

இளைஞர்  மனதைச்  சுண்டி  இழுத்தே  பணத்தைச்  சேர்க்கும்

சலுகை  அடைந்தோர்க்கெல்லாம்  தமிழகம்  மேய்ச்சல்  காடு !


பகையை  அகத்தில்  தேக்கிப்  பாசம்  முகத்தில்  காட்டிக்

குகைக்குள்  இருட்டைப்  போல  கொள்கை  வளர்த்துக்  கொண்டு

மகளிர்  கற்பை  விற்று  மாசு  படிய  வைக்கும்

தகுதி  யுடையோர்க்கெல்லாம்  தமிழகம்  மேய்ச்சல்  காடு ! 


சாதி  மதங்கள்  சேர்ந்த  சகதி  பூசிக்  கொண்டு

நீதி  தலைகீ  ழாக  நேர்மை  கெடுத்து  விட்டு

போதை  வர்த்தை  சொல்லிப்  பொருளைச்  சுருட்டி  வாழும்

சாத  கத்தைப்  பெற்ற  தமிழகம்  மேய்ச்சல்  காடு !   


காமம்  பணமே  சேர்ந்து  காந்த  மாகும்  வாழ்வில்

காமம்  முலாய்  வைத்துக்  காசை  மூட்டை  கட்டிப்

பாம  ரர்கள்  நெஞ்சில்  பாழும்  நஞ்சைத்  தூவும்

ஆமாம்  சாமிக்  கெல்லாம்  தமிழகம்  மேய்ச்சல்காடு ! 


கட்சி  சாயம்  காட்டக்  கழுத்தில்  துண்டைப்  போட்டே

எச்சில்  கதைகள்  பேசி,  எதையும்  முடிப்பே  னென்று

பச்சைப்  பொய்யைச்  சொல்லிப்  பணத்தைச்  சுருட்டிக்  கொள்ளும்

நச்சுப்  பாம்புக்  கெல்லாம்  தமிழகம்  மேய்ச்சல்  காடு !


கடத்தல்  கள்ள  நோட்டுக்  கலையை  வளர்த்துக்  கொண்டு

பிடித்தோர்  பிடியை  நீக்கப்  பெரிய  தொகையைத்  தந்து

தடுக்கும்  வழக்குப்  போட்டால்  சட்டம்  வளைய  வைக்கும்

தடத்தில்  நடப்போர்க்  கெல்லாம்  தமிழகம்  மேய்ச்சல்காடு !  


நாட்டைச்  செம்மை  செய்ய  நானோர்  தலைவ  னென்றே

கூட்டம்  சேர்த்துக்  கொண்டு  குழப்பம்  கொள்கையாக்கி

வீட்டைச்  செல்வமாக்கும்  விளம்ப  ரத்தில்  தேர்ந்த

சாட்சி  யாவோர்க்  க்கெல்லாம்  தமிழகம்  மேய்ச்சல் காடு !   


முத்தமிழ்ப்  பேராசான்

திருச்சி தியாகராஜன்  

 

  
 

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment