பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Wednesday, October 15, 2014

ஏழிசை மன்னர் வாழ்ந்தது வெறும் நாற்பத்தொன்பது ஆண்டுகளே !130px-Ambikapathycolour
பெயர்: எம். கே தியாகராஜ பாகவதர்
பிறந்த தேதி:01-03-1910
பிறந்த இடம்:மாயவரம்
தந்தை கிருஷ்ணமூர்த்தி
தாய் மாணிகத்தம்மாள்
உடன் பிறந்தவர்கள்
சகோதரிகள்:
அமிர்தவல்லி, புஷ்பவல்லி, பங்கஜவல்லி
சகோதரர்கள்:
எம். கே கோவிந்தராஜ பாகவதர்,
எம். கே. ஷண்முகம்
பிள்ளைகள்
மகள்கள்: சுசீலா, சரோஜா
மகன்: ரவீந்திரன்
முதல் நாடகம்  அரிச்சந்திரா
முதல் நாடக வேஷம் லோகிதாசன்
முதல் படம் பவளக்கொடி.
கடைசிப்படம் சிவகாமி
மொத்தம் நடித்த படங்கள்
பவளக்கொடி (1934)
நவீன சாரங்கதாரா (1935)
சத்திய சீலன் (1936)
சிந்தாமணி (1937)
அம்பிகாபதி (1937)
திருநீலகண்டர் (1939)
அசோக்குமார் (1941)
சிவகவி (1943)
ஹரிதாஸ் (1944)
ராஜமுக்தி (1948)
அமரகவி (1952)
சியாமளா (1952)
புதுவாழ்வு (1957)
சிவகாமி (1960)
பெற்ற பட்டங்கள்
பாகவதர்
இசை நாடகப் பேரொளி,
சங்கீத கலாச் சாகரம்,
கந்தர்வ கான ஏழிசை மன்னர்
மறைவு 01-11-1959
பாடகராய்,நடிகராய்,கர்னாடக
இசை வித்வானாய்….! 
01.03.1910 ஆம் ஆண்டூ மாயவரத்தில்,திரு கிருஷ்ணமூர்தி என்ற விஸ்வகர்ம சமூக பொற்கொல்லருக்கும், அவருடைய மனைவி மாணிக்கத்தம்மாள் என்பவருக்கும் பிறந்தவர்
    தான் பாடகராய், நடிகராய்,onthephonecopy கர்னாடக  இசை வித்வானாக மூன்றில் ஒன்றாக பரிமளித்து மணம் பரப்பிய எம்கேதியாகராஜ பாகவதர் அவர்கள்பிறந்த பொழுது அவர் குடும்பம் வளமானதாக இல்லை சிறிது காலம் கழித்து அவர் குடும்பம் திருச்சிக்கு குடி பெயர்ந்தது.சிறுவன் 
தியாகராஜன் பாலக்கரையில் உள்ள பள்ளியில் ஆரம்ப கல்வி கற்க அனுப்பப்பட்டான். தியாகராஜன் ஆர்வம் படிப்புக்கு பதிலாக, பாட்டு கேட்பதிலும், பாடுவதிலுமே இருந்தது. அச்சிறுவனைத்  தேவார, திருவாசகப் பாடல்களும் எஸ்ஜிகிட்டப்பா போன்ற நாடக நடிகர்களின் கணீரென்ற பாடல்களுமே பெரிதும் கவர்ந்தன. 
அந்நாட்களில் நாடக நடிகர்கட்கு பெரிதாக மதிப்பும் இருக்கவில்லை. வருவாயும் இருப்பதில்லை. எனவே அவர் தந்தை, மகன் பாடுவதைக் கேட்டு ரசிக்கும் மன நிலையில்  இல்லை. ஆனால் தியகராஜனின் சங்கீதக் காதல் மிகவும் ஆழமானதாக இருந்தபடியால் ஒரு   நாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தலைமறைவானான். 
பெற்றோர் மனம் கலங்கி அவனைத் தேடத் தொடங்கினார்கள். தியகராஜன் கடப்பாவில் இருப்பதையும், அங்கு தன் பாடல்களால் ஒரு ரசிகர் குழுவைப் பெற்றிருப்பதையும் அறிந்து உடனே கடப்பா சென்ற கிருஷ்ணமூர்த்தி, இறைவனைப் புகழ்ந்து தன் மகன் பாடிய பாடல்களைக் கற்கண்டை சுவைக்கச்செல்லும் எறும்புகள் போல் ரசிகர் கூட்டம் ரசித்து மகிழ்வதைக் கண்டு பெரு மகிழ்வுற்றார். பின்னர் கிருஷ்ணமூர்த்தி தனது மகனை அழைத்துக் கொண்டு திருப்பதிக்கு சென்றார்.
திருப்பதி தேவஸ்தானத்தின் உயர் அதிகாரியான பேஷகார், அச்சிறுவனின் தெய்வீக கானத்தைக் கேட்டு மகிழ்ந்து பிரசாதத்தை அளித்து ஆசிர்வதித்தார். திருச்சிக்கு திரும்பியதும் எறக்குறைய அந்த ஊரின் எல்லாக் கோவில்களிலும், சபாக்களிலும் பஜனைகள் பாட அழைக்கப்பட்டான்.  
சங்கீதக் (குழந்தை) மேதையின் புகழ் பரவலாயிற்று ரயில்வே துறையில். பணியாற்றிக் கொண்டிருந்த எஃப் ஜி நடேச ஐயர் என்பவர் திருச்சியில் “திருச்சி ரசிக ரஞ்சனி சபா” என்ற பெயரில் ஒரு நாடக கம்பெனி நடத்திவந்தார்.திசேவாசதனம் என்ற திரைப்படத்தில் எம் எஸ் சுப்புலஷ்மியுடன் ஈஸ்வர ஐயர் என்ற கதாபாத்திரமேற்று நடித்திருக்கிறார். ஐயர் தனது ஹரிச்சந்திரா நாடகத்தில் லோகிதாசன் பாத்திரமேற்று நடிக்க ஒரு தகுதியான சிறுவனைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் கிருஷ்ணமூர்த்தியை  சந்தித்து அவருடைய அனுமதி பெற்றுத் தியாகராஜனை தன் நாடகக் குழுவில் சேர்த்துக்கொண்டார்.
நாடகத்துறைப்பிரவேசம்…!
p
பத்து வயது சிறுவன் தியாகராஜன் லோகிதாசனாகப் பங்கேற்ற நாடகம் பெறும் வெற்றி பெற்றது.ஒரே நாளில் நட்ச்சத்திர அந்தஸ்தைப் பெற்றான். 
திருச்சியிலும், அருகாமையிலிருந்த ஊர்களிலும் அச்சிறு குழந்தையின் மேதாவிலாசம் சூறாவழி க்காற்றாய் சுழன்று வெற்றிவாகை சூடியது. 
வித்வானாகத் திகழ்ந்த மதுரை பொன்னு ஐய்யங்கார் ஹரிச்சந்திரா நாடகத்தைக் காண நேர்ந்தது. கேள்வி ஞானத்தின் மூலமாகவே தியாகராஜன் சிறப்பாக பாடுவதைக் கேட்டு வியந்து,அவன் குடும்ப சூழலையையும் நினைத்து அவனுக்கு ஊதியம் ஏதுமின்றிக் கர்னாடக சாஸ்தீரிய இசையை முறைபடிக் கற்றுக்கொடுக்க முன்வந்தார்.
இசையை ஆர்வமாகப் பயின்றது மட்டுமின்றி, நடிப்பு பயிற்சியை நடராஜ வாத்தியாரிடமும்(இவர் எஸ் ஜி கிட்டப்பா பாடி பிரபலமான காயாத கானகத்தே,, அன்றோரு நாள் பாடல்களையும்,  எம்கே டி பாடிய ஞானகுமாரி பாடலையும் எழுதியவர்.நரசிம்மா ஐய்யங்காரிடமும், ஸ்வரபிரயோகங்களில் வல்லவரான சுப்பையா பிள்ளையிடமும் பயின்றார்.
முதல் கர்நாடக இசைக்கச்சேரி!
ஆறுவருடங்கள்கடினப்பயற்சிக்குப் பிறகு மதுரை பொன்னு ஐய்யங்கார் திருச்சியில் கமலாத்தெருவில் உள்ள பெரியகாளி அம்மன் கோயிலில் தியாகராசனின் இசையை முதன்முதலாக அரங்கேற்ற விரும்பினார். 
அப்போழுது கஞ்சிரா புதுக்கோட்டை தக்ஷ்ணாமூர்த்தி பிள்ளை என்பவரின் சீடனான மிருதங்க வித்வான் தக்ஷ்ணாமூர்த்தி சாரி என்பவர் மிருதங்கத்தில் சிறப்பாகப் பயின்று “அபிநவ நந்திகேஸ்வரர்’ என்று புகழ் பெற்றிருந்தார். 
ஆறு வருடங்கள்  கடினப்பயற்சிக்குப் பிறகு மதுரை பொன்னு ஐய்யங்கார் திருச்சியில் கமலாத் தெருவில் உள்ள பெரியகாளி அம்மன் கோயிலில் தியாகராசனின் இசையை முதன்முதலாக அரங்கேற்ற விரும்பினார். அப்போழுது கஞ்சிரா புதுக்கோட்டை தக்ஷ்ணாமூர்த்தி பிள்ளைஎன்பவரின் சீடனான மிருதங்க வித்வான் தக்ஷ்ணாமூர்த்தி சாரி என்பவர் மிருதங்கத்தில் சிறப்பாகப் பயின்று “அபிநவ நந்திகேஸ்வரர்’என்று புகழ் பெற்றிருந்தார். அவரை அணுகி தஷிணாமூர்த்தி பிள்ளை தியாகராஜனின் பாட்டுக்கு மிருதங்கம் வாசிக்குமாறு சொன்னார். ஒரு சிறுவனுக்கு மிருதங்கம் வாசிப்பதைத் தம் தகுதிக்குக் குறைவாகக் கருதி அவர் மறுத்த பொழுது, ஆசானே வற்புறுத்தி வாசிக்க வைத்தார்.
 ஆக, தியாகராஜனின் முதல் இசை நிகழ்ச்சி பிரபல வித்வான்களான தஷிணாமூர்த்திப் பிள்ளை கஞ்ஜிரா வாசிக்க, மதுரை பொன்னு அய்யங்கார்ின் வயலின் பின்னணியில், தஷிணாமூர்த்தி சாரியின் மிருதங்கத் துணையுடன் மூன்று மணி நேரம் அமர்க்களமாக நடைபெற்று ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன.
முடிவுரை சொல்ல வந்த தஷிணாமூர்த்தி சாரி, தான் அது வரை அத்தகைய இனிய சாரீரத்தைக் கேட்டதில்லை என்றும், அத்தகைய இளம் வயதில் ராகங்களைக் கையாளும் லாகவமுள்ள அச்சிறுவன் அபூர்வத்திறமை  பெற்றவன் என்றும், முருகன் அருளால் கர்நாடக இசை உலகிற்கு ஓர் அபூர்வ ரத்தினம் கிடைத்திருப்பதாகவும் புகழாரம் சூட்டினார்.
‘பாகவதர்’ என்ற பட்டத்தையும் அளித்தார். அன்று முதல் ‘திருச்சி தியாகராஜன்’ ‘தியாகராஜ பாகவதர்’ ஆனார். தக்ஷிணாமூர்த்தி பொன்னு அய்யங்காரிடம் தான் முதலில் அவனுடைய திறமையை அறியாது மறுத்ததற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
நாடக நடிகனாக எம்.கே.டி. :
p3
1926 ஆம் ஆண்டில் எம்.கே.டி. திருச்சி ‘கோல்டன் ராக்’ பகுதியில் ‘பவளக்கொடி’யில் கதாநாயகனாகத் தோன்றினார். அவருடன் கதாநாயகியாக நடித்த டி.பி. ராமகிருஷ்ணன் பின்னாளில் அகில இந்திய வானொலியில் சங்கீத வித்வானானார்.
சில வருடங்கள் கழித்து எஸ்.டி. சுப்பலஷ்மி, பாகவதருடன் ஜோடி சேர்ந்து ஆரோக்கியமான, கூர்மையான வசனங்களாலும், ஒருவர்க்கொருவர் சளைக்காத நடிப்பினாலும் சரித்திரம் படைத்தனர். எம்.கே.டி.யின் இசை அனைவரது மனதையும் ஆட்கொண்டது மறுக்கவொண்ணாத உண்மை. இந்தியத் தமிழர்கள் மட்டுமின்றி ஸ்ரீ லங்கா, பர்மா, மலேயா மற்றும் சிங்கப்பூர்த் தமிழரையும் அவருடைய இசை அடிமைப்படுத்தியது. எம்.கே.டி. தன்னை மற்றவர்களைப் போல் எந்த ஒரு குறிப்பிட்ட நாடகக் கம்பனியுடனும் ஐக்கியப்படுத்திக் கொள்ள  விரும்பாததால் அவருடைய நாடகங்கள் ‘சிறப்பு நாடக’ங்களாக அறிவிக்கப்பட்டன. 
அவர் தன் விருப்பத்திற்கும், வருவாய்க்கும் தக்கவாறு வாய்ப்புகளைத் தேர்வு செய்தார். அவருக்கு ஒரு நாளுக்கு 50 ரூபாய்கள் கொடுக்கப்பட்டு வந்தது. அது அந்த நாளில் மிக உயர்ந்த தொகையாகக் கருதப்பட்டது. 
அவருடைய நாடகங்கள் இடைவெளியின்றித் தொடர்ந்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்றன. எம்.கே.டி. ஏகலைவனைப் போன்று எஸ்.ஜி. கிட்டப்பாவைத் தன் மானசீக குருவாக வரித்திருந்தார்.ஒரு முறை திருச்சி செங்கோட்டையில் எம்.கே.டி. அவர்களின் ‘வள்ளித்திருமணம்’ நாடகத்தைக் காண நேர்ந்தது. அந்நாடகத்தில் ‘கரஹரப்ரியா’ ராகத்தில் எம்.கே.டி. பாடிய ‘ராமா நீ எட’ என்ற தியாகராஜ கிருதியைக் கேட்டு மெய் சிலிர்த்து நின்று விட்டார் கிட்டப்பா. தம்மை மறந்து கரவொலி எழுப்பி ‘ஒன்ஸ் மோர்’ கேட்டு மீண்டும் பாடச் செய்தார். 
எம். கே.டி. அவர்களுடைய விருப்பத்தை உடனே நிறைவேற்றினார். உடனே மேடை ஏறி அவருக்கு பவளங்களுடன் கூடிய பொற்சங்கிலியைப் பரிசளித்து அந்தச்சிறு பாகவதர் உண்மையிலேயே மஹா வித்வான் என்று ஒப்புதல் அளித்தார். ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர் போலும்’. பிற்காலத்தில்  பாகவதர் கிட்டப்பாவிடமிருந்து தாம் பெற்ற பரிசும், பாராட்டும் தமக்கு மிகவும் மகிழ்ச்சியளித்ததாகத் தெரிவித்தார். 
இரட்டை ஹார்மோனியம் வாசிப்பில் சிறந்து விளங்கிய தேவுடு ஐயர் எல்லா நாடகங்களிலும் எம்.கே.டி.க்கு ஹார்மோனியம் வாசிப்பது வழக்கம்.சிறிது காலம் கழித்துப் பிரபல இசை இயக்குனர் ஜி. ராமநாதன் அவர்களும் எம்.கே.டி. யின் நாடகங்களுக்கு ஹார்மோனியம் வாசித்தார். பிறகு அவர்கள் இருவரும் இணைந்து திரைப்படப் பின்னணி இசையில் ஒரு சகாப்தத்தைப் படைத்தார்கள். இவ்வாறு எம்.கே.டி. தன் இசையால் பரிமளித்த நாடகங்களைத் தமிழ் நாட்டின் பெரு நகரங்களெங்கும் நடத்திச்சிகரத்தை நோக்கிப் பீடு நடை போட்டார்.
பாகவதரும் ரசிகர்களும்…
அவருடைய ரசிகர்கள் பாகவதர் நடந்து வந்த பாதையில் உள்ளமண்ணை எடுத்து வைத்துக் கொள்வார்களாம்.இன்னும் சில ரசிகர்கள் அவர் தொட்ட பொருட்களை முத்தமிட்டு மகிழ்வார்களாம். அந்த அளவிற்க்கு பார்ப்போரை வசீகரிக்கும் தோற்றமும், தெய்வீக குரலும் ஒருங்கே அமையப்பெற்ற தேவலோக மனிதனாகவே மக்களுக்கு தோன்றினார் பாகவதர்.
ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால் ஆங்காங்கே   பாகவதர் தரிசனம் கிடைத்தால் மட்டுமே ரசிகர்கள் ரயிலை செல்ல அனுமதிபபர்.அந்த அளவிற்க்கு பாகவதர் என்றால் அப்படி ஒரு மயக்கம். 
ஒரு சமயம் காரில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை சென்று கொண்டிருந்தபோது, ரயில்வே கிராசிங் அருகே கார் நிற்க்க நேரிட்டது.பாகவதர் காரிலிருக்கிறார் என்பதை கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் அலைமோதியது. 
ரயில் வந்தவுடன் கார்டு, ரயிலை நிறுத்தி மன்மதலீலை பாடலை பாடினால் மட்டுமே ரயிலை போக அனுமதிப்போம் என்று தங்கள் ஆசையை பூர்த்தி செய்து கொண்டனர். 
இன்னொரு சமயம், காரில் போய் கொண்டிருக்கும் போது, ரசிகர்கள் இவரைப் பார்த்து விட, ஒரு ரசிகர் அருகிலிருந்த கடையில் சோடா வாங்கிவந்து தர, பாகவதரின் கார் ஓட்டுனர் சுகாதரமற்ற இதை  இதை குடிக்கமாட்டார் என் கூற அதை எம் கே டி உடனே வாங்கி குடித்து விட்டு ரசிகர்களின் அன்பை விடப் பெரிது வேறொன்றுமில்லை என்றார்.
 
வசீகரம்:
பல லட்சக்கணக்கான ஆண்களை தனது தோற்றத்தால் கிறங்கடித்த ஹாலிவுட் நடிகை கிராட்டோ கார்போபோல,இவர் பெண்களின் கனவு நாயகனாக இருந்தார் என்றே சொல்லலாம். பல பெண்களின் தூக்கத்தை பாழடித்தவர். பணம் படைத்த பெண்ணாக இருந்தாலும் சரி, ஏழைப்பெண்ணாக இருந்தாலும் சரி, எந்த ஜாதியாக் இருந்தாலும் சரி, எந்த இனமாக இருந்தாலும் சரி, உள் மனதிலே காதலித்தார்கள் என்று ஒரு விமர்சகர் எழுதுகிறார்.அந்த அளவிற்க்கு ஒரு வசீகரம்.  
தமிழிசைவளர்த்தவர்:
Picture6
சென்னையில் 1941ல் கல்கி, ராஜா அண்ணாமலை செட்டியார், ஆர் கே சண்முகம் செட்டியார் ஆகியோர் தமிழிசை சங்கம் ஆரம்பித்தபோது, அதை ஊக்குவித்ததோடல்லாமல் தமிழ் பண்ணிசை ஆய்விலும் பங்கெடுத்தார். 
1954 வரை தமிழிசை விழாவில் தொடர்ந்து பாடினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஒவ்வொரு விழாகளிலும் தமிழில் கீர்த்தனகள் பாடி தமிழிசையை  ஊக்குவித்தார். சொல்லு பாப்பா என்ற தலைப்பிட்டு பாரதி பாடல்களை ஒவ்வொரு மேடையிலும் பாடினார். 
சக கலைஞர்களையும் மதிக்கும் பண்பு:
ஒரு சமயம் நாகர்கோவிலில் என் எஸ் கே வீட்டு கிரகப்பிரவேசத்தில் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. வரவேண்டிய மிருதங்கவித்வான் அன்று வராததால் ஒரு இளம் வயது வித்வானை ஏற்பாடு செய்தார் என் எஸ் கே. பிரமாதமாக அந்த கச்சேரி அமைந்தது. அதற்காக ஒரு வைர மோதிரத்தை என் எஸ் கே பாகவதருக்கு பரிசாகத் தந்தார். அதை உடனேயே அந்த இளம் கலைஞருக்குப் பரிசாக தந்துவிட்டார்.
பத்திரிக்கையாளரின் பார்வையில்…
p2
வெள்ளைக்குதிரை. அதன் மேல் ஒய்யாரமாக பாகவதர். மந்தகாசப் புன்னகையோடு பவனி வர, பெண்கள் எல்லாம் வெட்கப்பட்டு ஓடுவர். அங்குள்ள ஒரு பெண்ணைப் பார்த்து பாகவதர் மன்மதனாகக் கண்ணடிக்க, அந்தப் பெண் மிரண்டு ஓடுவாள். இது ஹரிதாஸ் படத்தில் இடம்பெற்ற காட்சி. ஆனால் உண்மையில், பாகவதரின் அந்த இமை அசைவில் இதயம் தொலைத்து, பித்துப் பிடித்து அலைந்த பெண்கள்தான் அதிகம்.
பிராணநாதா! உம்மை நேரிலே ஒரே ஒருமுறை தரிசித்துவிட்டால் போதும். மறுநொடியே தற்கொலை செய்து கொள்ளக் கூடத் தயார் என்கிற ரதியில் பெண்களின் கடிதங்கள் பாகவதரை மொய்த்த நாள்கள் பல.
எம்.கே. தியாகராஜ பாகவதர், தமிழ் சினிமாவின் கதல் வசூல் மன்னன். நாடக மேடையில் அவர் பாடிக் கொண்டே தோன்றும்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவார வரவேற்பு வேறெந்த நடிகருக்கும் கிடைத்ததில்லை. பாமரர்களும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர். 
ஒரே சமயத்தில் நாடகம், சினிமா, இசை என்று மூன்று குதிரைகளில் ராஜ பவனி வந்த பெருமை பாகவதருக்கு மட்டுமே சாத்தியமாயிற்று.
 *ஒரு கொலை வழக்கு. ஒரு சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கையை சூன்யமாக்கிய வழக்கு. நடந்தது என்ன? பாகவதர் குற்றவாளியா? நிரபராதியா? தொலைத்த இடத்திலேயே தன் புகழைத் தேடிய பாகவருக்கு,  
மீண்டும் அது கிடைக்காமல் போனது ஏன்? *இசையும் நாடகமும் கலந்த பாகவதரின் வாழ்க்கையை எளிய, சுவாரசியமான மொழியில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஜெ. ராம்கி.
நன்றி :-  http://vishwakarmaviswass.com/?page_id=247

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment