உலகில் இதுவரை மிகவும் பழமையான குகை ஓவியங்கள் மேற்கு ஐரோப்பிய பிராந்தியத்திலிருந்தே கிடைத்துள்ளன.
ஆனால், இந்தோனேசியாவின்
சுலவேஸித் தீவில் காணப்படுகின்ற குகை ஓவியங்களும் அந்தளவுக்குப் பழமையானவை
தான் என்கின்ற புதிய தகவல் ஓவிய ஆய்வாளர்களுக்குக் கிடைத்திருக்கின்றது.
சுமார் 40 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் இந்தோனேசியத் தீவில்
உலகில் ஓவியக்கலை எப்படி தோற்றம்
பெற்றது என்பது தொடர்பில் இதுவரை இருந்துவந்த சிந்தனைகளுக்கெல்லாம் புதிய
விளக்கத்தை இதன்மூலம் பெறமுடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
மனிதனின்
கைகளை குகை சுவர்களில் வரைந்திருக்கின்ற இந்த ஓவியங்களின் மீது
வளர்ந்திருக்கின்ற படிமங்களின் வயதை ஆஸ்திரேலியாவையும் இந்தோனேசியாவையும்
சேர்ந்த விஞ்ஞானிகள் கணித்திருக்கின்றனர்.
அந்தக் காலத்து மனிதர்கள்
தமது கைகளின் புறப்பகுதியில் வர்ணங்களைப் பூசிக்கொண்டு, குகையின்
சுவர்களில் அவற்றை பதித்து, வாயினால் கவனமாக ஊதி, தமது கை அச்சுக்களை அங்கே
அச்சுப் பதித்திருக்கிறார்கள்.
இங்கு மனித உருவங்களும் இந்தத் தீவுக்கே உரித்தான காட்டு மிருகங்களின் படங்களும் வரையப்பட்டுள்ளன.
இந்த
ஓவியங்களின் வயதைக் கணித்த ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்திலுள்ள கிரிஃபித்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மெக்ஸிமே ஆபோர்ட், இந்த மரோஸ்
குகையிலுள்ள ஓவியங்களுக்கு குறைந்தது 40 ஆயிரம் ஆண்டுகளாவது வயதிருக்கும்
என்று கணித்திருக்கிறார்.
மேற்கு ஐரோப்பாவுக்கு வெளியிலும்
'சுலவேஸித் தீவு குகை ஓவியங்கள் மனித இனத்தின் வளர்ச்சிக் கட்டங்களில் முக்கிய தருணத்தைக் காட்டுகின்றன'
இங்குள்ள இன்னும் சில ஓவியங்களுக்கு சுமார் 27 ஆயிரம் ஆண்டுகள் வயதிருக்கும் என்றும் விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.
அப்படியென்றால்,
இந்தக் குகைகளைப் பயன்படுத்தியவர்கள் குறைந்தது 13 ஆயிரம் ஆண்டுகளுக்காவது
ஓவியங்களை வரைந்துவந்திருக்கிறார்கள் என்பதை கணிக்க முடிகின்றது.
இந்த
இந்தோனேசிய குகை ஓவியங்களைக் கொண்டு, மனிதனின் மதிநுட்பம் உருவாகி
வளர்ச்சியடையத் தொடங்கிய விதம் குறித்து விஞ்ஞானிகளால் ஆராயமுடிகின்றது.
அதாவது, சிந்தனைக் கோட்பாடுகளை கிரகித்து புரிந்து கொள்வதற்கான ஆற்றலே மனிதனை மற்ற உயிரினங்களிடமிருந்து பிரித்துக்காட்டுகின்றது.
இந்த
ஆற்றல் தான் நெருப்பைப் பயன்படுத்தவும் சக்கரத்தைக் கண்டுபிடிக்கவும்
இன்று நாம் பயன்படுத்துகின்ற மற்ற தொழிநுட்பங்களை உருவாக்கவும்
வழிவகுத்தது.
வரலாற்றில் இப்படியான ஆற்றல்கள் வெளிப்படுத்தப்பட்ட
சந்தர்ப்பங்களை கண்டுபிடிப்பதன் மூலமே மனித இனத்தின் வளர்ச்சிக்
கட்டங்களையும் கண்டுபிடிக்கமுடியும்.
சுலவேஸித் தீவிலுள்ள குகை
ஓவியங்களின் வயதைக் கண்டுபிடித்ததன் மூலம், மனித இனத்தின் மதிநுட்ப
வளர்ச்சி எப்போது, எங்கு தொடங்கியது என்பது தொடர்பில் இன்று நிலவும்
கருத்துக்களை மீளாய்வு செய்ய வேண்டிய நிலை விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
ஸ்பெயினிலும்
தெற்கு பிரான்சிலும் கண்டுபிடிக்கப்பட்ட குகை ஓவியங்களே உலகின் பழமையானவை
என்று பல தசாப்தங்களாக நம்பப்பட்டுவந்தது. இதன்மூலம் இன்று நமக்குத்
தெரிந்த கலைகளுக்கும் அறிவியலுக்கும் காரணமான படைப்பாற்றல் ஐரோப்பாவில்
தான் முதலில் தொடங்கியது என்ற வாதமும் இருந்துவந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment