பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, October 13, 2014

நட்வர் சிங்கின் சர்ச்சைக்குரிய நூல்



முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர்சிங் அண்மையில் "ஒரு வாழ்நாள் போதுமா' என்கிற தலைப்பில் சுயசரிதை எழுதி வெளியிட்டார். அந்த நூலில் சில பகுதிகள் பரபரப்பை ஏற்படுத்தின. அந்தப்பகுதி இதுதான்:
""ராஜீவ் காந்தி திறமையானவர். ஆனால் 1991க்குப் பிறகு அவர் மாறிப்போனார். 
ஸ்ரீலங்கா பிரச்னையில் குட்டை குழப்பிவிட்டார்.  ஸ்ரீலங்கா அதிபர் ஜெயவர்த்தனே, தமக்கு பிரபாகரனிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும், தாங்கள் அனுப்பும் செய்திகளை அவர் அறிந்துகொண்டுவிடுவதாகவும், உடனடியாக இந்தியா எதுவும் செய்யாவிட்டால் விடுதலைப் புலிகள் ஆட்சியை அபகரித்துவிடுவார்கள் என்றும் சொன்னதைக் கேட்டு, அங்கிருந்தபடியே ஐ.பி.கே.எஃப். படையைத் தயார் செய்து உடனடியாக ஸ்ரீலங்காவுக்கு அனுப்பி வைக்கும்படி
ஏற்பாடு செய்துவிட்டார்.  ஸ்ரீலங்கா பிரச்னை சிக்கல்கள் நிறைந்தது. தில்லிக்கு ஒரு கொள்கை, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு ஒரு கொள்கை, தூதர் தீக்ஷõத்துக்கு ஒரு கொள்கை. ஆக, ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையில் நிர்ப்பந்தம் ஏற்படுத்தினர்...

2004 தேர்தலில் காங்கிரஸ் வென்றதும், சோனியா காந்தி பிரதமர் பதவிக்குத் தம்மையே முன்னிறுத்துவது கூடாது என்று தீவிரமாகத் தடை போட்டவர் மகன் ராகுல் காந்தி.
இந்திரா காந்தியையும், ராஜீவ் காந்தியையும் கொன்றது போலவே தாயையும் அரசியல் காவு வாங்கிவிடும் என்பது ராகுலுடைய வாதம்...'' என்கிறார் நட்வர்சிங் தன் நூலில்.
தான் எழுதிய "ஒரு வாழ்நாள் போதாது'  என்ற நூலை சென்னையில் வெளியிட்டுப் பேச வந்திருந்தார் நட்வர் சிங்.
அடிக்கடி தொண்டைதான் கொஞ்சம் மக்கர் செய்ததே தவிர, வேறு பிரச்னை ஏதும் இல்லை. மனிதருக்கு அசாத்திய நகைச்சுவை உணர்வு. அவரது பேச்சிலிருந்து சிலபகுதிகள்:
""நான் 1954ல மத்திய அரசில் பணியில் சேர்ந்த போது, தஞ்சாவூரில் ஒரு மாதப் பயிற்சிக்கு வந்திருந்தேன்.  அப்போது குஞ்சிதபாதம் என்பவர் கலெக்டராக இருந்தார். அவருடைய திருமண வெள்ளிவிழாவைக் கொண்டாடிய போது நானும் போயிருந்தேன். குஞ்சிதபாதத்தைப் பார்த்து ஒருவர் கேட்டார்: ""திருமண வெள்ளி விழாவில் எதை நினைத்துப் பார்க்கிறீர்கள் என்று'' அதற்கு குஞ்சிபாதம் சொன்னார்: ""அப்போது மனைவி ஹஜ்ச்ன்ப்ப்ஹ் ள்ண்ம்ல்ப்ங். இப்போது மனைவி awfully simple. simply awful. என்றார்'' (இதைக் கூறிய போது பலத்த சிரிப்பு எழுந்து அடங்கியது)
""நான் நிறையப் படிப்பேன், நிறைய எழுதுவேன்.  பத்துக்கு மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறேன்.  இந்தப் புதிய நூல் சமீப கால அரசியல் என்பதால் ஐம்பதாயிரம் பிரதிகள் விற்றுப் போய்விட்டன.  பத்தாயிரம், பன்னிரண்டாயிரம் பிரதிகள் விற்கும் என்று எதிர் பார்த்தேன். ஆனால் ஐம்பதாயிரத்தைத் தாண்டிவிட்டது.  ஹிந்தி, மராத்தி, வங்காளி மொழிகளில் மொழி பெயர்ப்புகள் வரவிருக்கின்றன. யாராவது ஏற்பாடு செய்தால் தமிழிலும் வரலாம்.
கேம்ப்ரிட்ஜில் படிக்கும்போது "பாஸேஜ் டு இன்டியா' நாவலாசிரியர் ஈ.எம். ஃபாஸ்டரைப் பார்த்துப் பேசி பழகியிருக்கிறேன்.  ஆர்.கே. நாராயண், முல்க் ராஜ் ஆனந்த், ராஜா ராவ், எல்லோருடனும் நல்ல பழக்கமுண்டு. 
ஃபாஸ்டருடனான நட்புக்கு உதாரணமாக இதைச் சொல்லலாம். ஃபாஸ்டர் ஒரு முறை என்னை தன்னுடன் தேநீர் அருந்த அழைத்திருந்தார்.  ஆனால் வேறு முக்கியமான வேலை அந்த சமயத்தில் அவருக்கு வந்து விட்டது.  நட்புதான் முக்கியம். வேறு எதுவும் முக்கியமில்லை என்று அந்த வேலையை நிராகரித்துவிட்டு, என்னுடன் தேநீர் அருந்த குறித்த  நேரத்துக்கு வந்துவிட்டார்  ஃபாஸ்டர். மறக்க முடியாத சம்பவம் இது.
ராஜாஜி அமெரிக்காவுக்கு வந்தபோது, இந்திய தூதர் வீட்டில் தங்காமல் என்னுடன் தங்கினார்.  அவர் எழுதிய முப்பது கடிதங்கள் என்னிடம் இன்றும் பத்திரமாக இருக்கின்றன. எனது கடிதம் கிடைத்த இரண்டாம் நாளே தம் கைப்பட ராஜாஜி பதில் எழுதிவிடுவார்.
நேரு போன்ற அரசியல்வாதியைப் பார்ப்பது அபூர்வம். பலசாதனைகள் நிகழ்த்தியவர் அவர்.  ஆனால், காஷ்மீர் பிரச்னையை ஐ.நா.வுக்குக் கொண்டு சென்றதும், சீன முதல்வர் சௌ என் லாயை முழுமையாக நம்பியதும் ஏன்  நடைபெற்றது? என்ற கேள்வி இன்றும் கூட என்னைக் குடைந்து கொண்டே இருக்கிறது'' என்றார்.
நட்வர் சிங், ராஜஸ்தானத்தின் பரத்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த, பஞ்சாப் மாநில பட்டியாலா அரசரின் மகளை மணந்துகொண்டவர்.  ஆனால் அரச குடும்ப படாடோபம் எதிலும் அக்கறை காண்பிக்காதவர்.  
என்.ராம் பேசும்போது, "" நட்வர் சிங் நாணயமானவர், நேர்மையானவர்.  தன் கற்பனையைக் கட்டவிழ்த்துவிடாமல், கட்டுக்கடங்கி எழுதியிருக்கிறார்'' என்றார்.
நன்றி :- கதிர் -  தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment