பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, October 4, 2014

தாய்மொழியின் அவசியம் புரிந்தால் சரி! - வி.எம்.கலைப்பித்தன் - கடலூர்


 'சி.பி.எஸ்.இ., உட்பட, மத்திய அரசு பாட திட்டத்தை அமல்படுத்தும் அனைத்து பள்ளிகளிலும், அடுத்த ஆண்டு முதல், தமிழ் பாடம் கட்டாயம் கற்பிக்க வேண்டும்' என, தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. கடந்த 60 ஆண்டு கால கல்வி வளர்ச்சியில், தாய்மொழி மீது இப்போதாவது அக்கறை ஏற்பட்டுள்ளதே!

அந்தந்த மாநிலத்தின் தாய் மொழியுடன், ஆங்கிலம் மற்றும் ஒரு மொழி (இந்தி) கற்றுக் கொடுப்பது தான், இந்திய தேச ஒற்றுமைக்கு வழிகோலும். உலக பழைய சிறப்பு மொழிகளில் ஒன்றான தமிழ் மொழிக்கும், இந்தியாவில் இடம் இருக்க வேண்டும் என்பதே, மக்களின் வேண்டுகோள். 10ம் வகுப்பு வரை, தமிழ் படிக்க, 2025ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என்பதில், ஒரு ஆயாசம் தெரிந்தாலும், இனி வரும் அரசுகள், இதைக் குலைக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலையும் எழுகிறது. எப்படியோ, தாய் மொழியின் அவசியம் அரசுக்கு புரிந்தால் சரி.

நன்றி : தினமலர்

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment