தமிழ் எழுத்துலகில் பெண் எழுத்தாளராக புகழுடன் வலம் வந்த ராஜம் கிருஷ்ணன் திங்கள் கிழமை இன்று இரவு மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 90.
1925ல் திருச்சிக்கு அருகே உள்ள முசிறியில் பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன். 15 வயதில் கிருஷ்ணன் என்பவருடன் திருமணமானது. பள்ளி சென்று முறையான கல்வி பயிலாவிடினும், மின் பொறியாளரான கணவர் உதவியால் புத்தகங்களைப் படித்து, தாமே கதைகள் எழுதத் துவங்கினார்.
1970ல் தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையைக் கண்டு 'கரிப்பு மண்கள்' என்ற நாவலை எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்து, அதன் விளைவாக 'முள்ளும் மலரும்' என்ற நாவலை எழுதினார். பெண் சிசுக் கொலை உள்ளிட்ட சமூக அவலங்கள் குறித்து எழுதியுள்ளார்.
கலைமகள் இதழில் கதைகள் பல எழுதியுள்ளார். அதன் ஆசிரியர் கி.வா.ஜகன்னாதனால் எழுத்துலகில் வளர்க்கப்பட்டவர். 1953ல் கலைமகள் விருது, 73ல் சாகித்ய அகாதெமி விருது, 91ல் திருவிக விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவரது கணவர் கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் தம் 90ம் வயதில் காலமானார். இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. பின்னர் முதுமையில் வறுமையால் வாடிய சென்னையில் விஷ்ராந்தி ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தில் தங்கினார். கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று இரவு அவர் காலமானார்.
நன்றி :- தினமணி
இவரின் படைப்புகளுள் சில:
- கூட்டுக் குஞ்சுகள்
- வனதேவியின் மைந்தர்கள்
- உத்தரகாண்டம்
- மாறி மாறி பின்னும்
- மலர்கள்
- பாதையில் பதித்த அடிகள்
- உயிர் விளையும் நிலங்கள்
- புதியதோர் உலகம் செய்வோம்
- பெண் விடுதலை
- இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை
- காலந்தோறும் பெண்மை
- கரிப்பு மணிகள்
- வளைக்கரம்
- ஊசியும் உணர்வும்
- வேருக்கு நீர்
- பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
- இடிபாடுகள்
- அலை வாய்க்கரையில்
- சத்திய தரிசனம்
- கூடுகள்
- அவள்
- முள்ளும் மலர்ந்தது
- குறிஞ்சித் தேன்
- சுழலில் மிதக்கும் தீபங்கள்
கடந்த தலைமுறை தமிழ் இலக்கியத்தின் முக்கியமான முகங்களுள் ஒன்றான திருமதி. கிருஷ்ணன் பல்வேறு பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றவர். அவற்றுள் சில:
- 1950—நியூயார்க் ஹெரால்ட் ட்ரைப்யூன் சர்வதேச விருது
- 1953—கலைமகள் விருது
- 1973— சாகித்திய அகாதமி விருது
- 1975—சோவியத் லாண்ட் நேரு விருது
- 1991—திரு.வி.க. விரு

ஆராவாரத்தன்மை எதுவுமின்றி எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். எப்போது அழைத்தாலும் மறுக்காமல் வந்து கூட்டங்களில் பங்கேற்பார். உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று எவரேனும் கேட்டால், நீங்கள் எல்லோரும்தான் எனக்குக் குழந்தைகள் என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்வார். சினிமாவிற்கு வந்த பெண்கள்பாலும் அனுதாபம் உண்டு. நடிகர்களை திரைத்துறைச் செல்வர்கள் என்றும், நடிஉகைகளை திரைத்துறைச் செல்விகள் என்றும் அழக்க வேண்டும் என்று மேடைகளில் பல முறை பேசியதைக் கேட்டிருக்கின்றேன்.,அவர் எழுத்துலகில் சம்பாத்தியம் பண்ணியதே அவரது வாழ்க்கைக்குப் போதும் பொறியாளரான கணவரது வருவாயும் இருந்தது. எல்லாம் எங்கே போயிற்று என்ரே தெரியவில்லை. ஊருக்கு வழிகாட்டிய உத்தமத் தாய்க்கு இறுதிக்காலம் சரியாக அமையவில்லை, இறந்தபின் உடலைக்கூடத் தானம் செய்யச் சொல்லிப் படித்ததாக நினவு.
இவரது இறுதி வாழ்க்கை எல்லோருக்கும் தக்க பாடமாக அமையவேண்டும்.
இலக்கியச்சோலை- சங்கர இராமசாமி
0 comments:
Post a Comment