பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, October 20, 2014

கரந்தை மாமனிதர்கள்


கரந்தை மாமனிதர்கள்


வான விரிவைக் காணும்போ தெல்லாம் – உமா
மகேச்சுரன் புகழே என் நினைவில் வரும்.

ஆன தமிழ்க் கல்லூரி நிறுவினோன் – மக்கள்
அன்பினோன், அறத்தினோன் ஆன்ற அறிவினோன்

பெற்ற அன்னையை அன்னாய் என்றுவாய்
பெருக அழைக்கவும் நேரமே யில்லை
உற்றார் உறவினர்க் காக உழைக்க
ஒருநாள் ஒருநொடி இருந்ததே இல்லை
கற்றவர் தமிழர் என்னுமோர் உயர்நிலை
காண வேண்டி இல்லந் துறந்து
முற்றுங் காலத்தைத் தமிழ்த் தொண்டாக்கினோன்
வாழ்க தமிழ் முனிவன் திருப்பெயர்

வான விரிவைக் காணும் போதெல்லாம் – உமா
மகேச்சுரன் புகழே என் நினைவில் வரும்

                                   - பாவேந்தர் பாரதிதாசன்

     நண்பர்களே, நான் பிறந்தது கரந்தை. நான் தவழ்ந்தது கரந்தை. நான் வளர்ந்தது கரந்தை. நான் பயின்றது கரந்தை. நான் பணியாற்றுவதும் கரந்தை.

     எனக்கு ஒரு நல் வாழ்வு, ஏற்றமிகு வாழ்வளித்த, கரந்தைக்கு, இதுவரை நான் என்ன செய்திருக்கிறேன்? என்னையேக் கேட்டுப் பார்க்கிறேன். விடைதான் தெரியவில்லை.

    கரந்தை மண், வளம் பெற, மணம் வீச, தமிழ் மொழி தழைக்க, தமிழினம் தலைநிமிர, அல்லும் பகலும் அரும்பாடு பட்டார்களே, கரந்தையின் மாமனிதர்கள், அவர்களைப் போற்றுவதும், அவர்களின் பெயரினை உரக்கச் சொல்லி முழங்குவதும் ஒரு தொண்டுதானே.அச்சிறு தொண்டினைத்தான்,
கரந்தை மாமனிதர்கள்
என்னும்
சிறு நூல் வழி தொடங்கியிருக்கிறேன்.இந்நூலினை,
எதிர்வரும், அக்டோபர் 26 ஆம் நாள்,
மதுரையில் நடைபெற இருக்கின்ற,
வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழாவில்,
திரு மதுரை சூரியன் அவர்கள்
(மதுரை மாவட்டச் செயலாளர்,பி.எஸ்.என்.எல் தொழிற் சங்கம்)


வெளியிடவும்


முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்கள்,

நூலின் முதற் படியினைப் பெற்றுச் சிறப்பிக்கவும்,
அன்புடன் இசைந்துள்ளார்கள்.

நண்பர்களே,
வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழாவிற்கும்,
நூல் வெளியீட்டு விழாவிற்கும்
தங்களை
வருக,    வருக,    வருக
என இருகரம் கூப்பி
அன்போடு அழைக்கின்றேன்.

வாருங்கள், வாருங்கள்

என்றென்றும் நட்புடன்,
கரந்தை ஜெயக்குமார்

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

1 comments:

  1. பதிவு கண்டு மகிழ்ந்தேன்
    மிக்க நன்றி ஐயா
    தங்களுக்கும், தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete