
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் "எழுத்து' என்ற தமிழ் இலக்கிய அமைப்பைத் தொடங்குகிறார்.
இதற்கான தொடக்க விழா, வரும் நவம்பர் 3-ஆம் தேதி சென்னை ஆழ்வார்ப்பேட்டை எம்.சிடி.எம். சிதம்பரம் மேல்நிலைப் பள்ளியில் உள்ள சிவகாமி பெத்தாச்சி கலையரங்கில் நடைபெறவுள்ளது.
தமிழ் இலக்கியத் தளத்தில் புதுமைகளை மிளிரச் செய்யவும், தமிழ் இலக்கியம் மேன்மையுறத் தொண்டாற்றவும் "எழுத்து' என்ற இலக்கிய அமைப்பை தொடங்குவதாக ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் அவ்வை நடராசன், கவிஞர்கள் வைரமுத்து, மு.மேத்தா, மரபின் மைந்தன் முத்தையா, ப.சிதம்பரம் ஆகியோர் எழுத்து அமைப்பின் அறங்காவலர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2004 முதல் தொடர்ந்து 10 ஆண்டுகள் நிதி, உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம், காங்கிரஸ் கூட்டணி அரசில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் அரசுப் பணிகள் இன்றி ஓய்வில் இருப்பதால் இலக்கியத்தின் மீது தனது கவனத்தைத் திருப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவ்வை நடராசன், வைரமுத்து ஆகியோருடன் ப.சிதம்பரம் அடிக்கடி ஆலோசனை நடத்தி வந்தார். எழுத்தாளர்கள், நடிகர்கள், இலக்கிய ஆர்வமுள்ள நீதிபதிகள் என பலருக்கும் ப. சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் நேரில் அழைப்பு விடுத்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை (அக். 25) நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து "எழுத்து' அமைப்பின் தொடக்க விழாவுக்கான அழைப்பிதழை கார்த்தி சிதம்பரம் வழங்கினார்.
நன்றி :- தினமணி
0 comments:
Post a Comment