பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, October 27, 2014

தாஞ்சூரில் மருதுபாண்டியர் குருபூஜை விழா

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகேயுள்ள தாஞ்சூர் கிராமத்தில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அரிமளம் ஒன்றியம், சமுத்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட தாஞ்சூர் கிராமத்தில் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மாமன்னர் மருதுபாண்டியர் பேரவை, பசும்பொன் தேவர் பேரவை சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை விழா, பசும்பொன் தேவர் ஜயந்தி விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு, விழா அரங்கில் வைக்கப்பட்டிருந்த மாமன்னர் மருதுபாண்டியர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரது உருவ படங்களுக்கு மலர்தூவி தீபாராதனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அகில இந்திய முக்குலத்தோர் பாசறை பொதுச் செயலர் ராம. சுப்பிரமணிய காடுவெட்டியார், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆர். சந்திரன், முக்குலத்தோர் சங்க மாநில பொதுச் செயலர் அருள்ராஜ், மாநில இணை பொதுச் செயலர் என். நாகு தேவர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தர்மராஜ், நகரச் செயலர் சத்தியசீலன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
நன்றி :- தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment