
திராவிட இயக்கத்தின் முக்கியமான படைப்பாளிகளின் ஒருவர் புலவர் குழந்தை. இவர் எழுதிய ராவண காவியத்தை மறக்க முடியுமா? மரபிலக் கியத்திலும் மரபிலக்கிய வடிவங்களிலும் ஆழ்ந்த பரிச்சயம் உடையவர் குழந்தை. அவர் எழுதிய உரைநடை நூல்களுள் மிக முக்கியமானது ‘யாப் பதிகாரம்’. 20-ம் நூற்றாண்டின் மத்தியில் தமிழ்க் கவிதை அநேகமாக யாப்பைத் துறந்துவிட்டது. புலவர் குழந்தை போன்ற ஒருசிலர்தான் முழு மூச்சாக யாப்பில் எழுதிக்கொண்டிருந்தார்கள். புலவர் குழந்தையின் ‘யாப்பதிகாரம்’ நூலைப் படிக்கும்போது பல தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன.

யாப்பு என்றால் என்ன என்று நம்மில் யாராவது ஒருவருக்கு எப்போதாவது கேள்வி எழுந்தால் அணுகுவதற்குச் சரியான நூல் ‘யாப்பதிகாரம்’. ஒவ்வொரு யாப்பு வடிவமும் அதன் உள்வடிவங்களும் இலக்கியங்களிலிருந்து சரியான எடுத்துக்காட்டுக்களுடன் எளிமையாக விளக்கப்பட்டிருக்கின்றன. இன்றளவும் ஈர்க்கும் நூல் ‘யாப்பதிகாரம்’.
நன்றி :- தி இந்து
0 comments:
Post a Comment