கவியரசு கண்ணதாசன் நாத்திகராகவும், திராவிடராகவும் இருந்து பின்னர் ஆத்திகராகவும் திராவிட மறுப்பாளராகவும் மாறி வழ்ந்து மறைந்தது எல்லோருக்கும் தெரியும்.
அதேபோன்று திராவிட இயக்கங்களால் இன்றளவும் கொண்டாடப்படுபவர் பாரதிதாசன். தன் வாழ்நாளின் இறுதிப் பகுதியில் ஒரு தமிழ்த் தேசியராக வாழ்ந்து மறைந்தார் என்னும் உண்மையைத் திராவிட இயக்கங்கள் ஒத்துக்கொள்வதில்லை. அவர், தொடக்கத்தில் ஒரு ஆத்திகராக, இந்தியராக வாழ்ந்தார். தந்தை பெரியாரை ஏற்றுக் கொண்ட பிறகு ஒரு நாத்திகராக, ஒரு திராவிடராகத் தன்னை மாற்றிக் கொண்டார். இதனையே கிளிப்பிள்ளையைப் போலத் திரும்பத் திரும்பக் கூறிவருகின்றனர் திராவிட இயக்கத்தினர். இது முழு உண்மையல்ல. பாரதிதாசன் ஒரு நாத்திகராக வாழ்ந்தார் என்பது மட்டுமே உண்மை. அவர் தமிழராக வாழ்ந்தார் என்பது மறைக்கப்படுவிட்டது. அதற்கு நிறையச் சான்றுகள் நம்மால் தர முடியும்.
1952-இல் பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதியில் “சிறுத்தையே வெளியில் வா” என்ற புகழ் பெற்ற பாடல் உண்டு. அதன் இறுதிப்பகுதியில், வாழ்க இளஞனே, வாழ்க நின் கூட்டம் வாழ்க திராவிட நாடு வாழ்க நின் வையத்து மாப்புகழ் நன்றே” என்று பாடல்வரிகள் இருக்கும்.
1958-இல் நாம் தமிழர் இயக்கம் தோற்றுவித்த ஆதித்தனார் அவர்கள் பாரதிதாசன் பாடல்களை “தாயின் மேல் ஆணை” என்ற தலைப்பில் வெளியிட்டார். அதில் மேற்கண்ட பாடலில் உள்ள ”திராவிட நாடு” என்பது “செந்தமிழ் நாடு” என்று மாற்றப்பட்டு விட்டது.
”வாழ்க இளைஞனே, வாழ்க நின் கூட்டம் வாழ்க செந்தமிழ் நாடு வாழ்க நின் வையத்து மாப்புகழ் நன்றே”
அதேப்[ஓல், குடும்ப விளக்கு முதற்பதிப்பு 1950 மார்ச்சில் வெளியிடப்பட்டது. அதில் ’மக்கட்பேறு’ என்ற தலைப்பில் உள்ள பாடல் பின்வருமாறு:
இளஞ்சேரனை நீ யரென்று கேட்டுப்
பதிலை எதிர்பார்த்திருந்தார் - அவனோ
தன்மார்பு காட்டி நான் தம்பி என்றான்
திராவிடன் என்று நீ செப்படா தம்பி”
என்றே இயம்பி அமிழ்து வந்தாள்
வாழிய திராவிட மக்கள்!
வாழிய நற்றமிழ் வையகம் இனிதே”
குடும்ப விளக்கு நூலின் 2-ஆம் பதிப்பு 1960-லும், 3-ஆம் பதிப்பு 1963-லும் வந்தது. இவ்விரு பதிப்பிலும் “திராவிடன்” என்பது “தமிழன்” என்றும், ”திராவிட மக்கள்” என்பது “தமிழ் மக்கள்” என்றும் மாற்றப்பட்டுள்ளது.
“தமிழன் என்று நீ செப்படா தம்பி”
என்றே இயம்பி அமிழ்து வந்தாள்
வாழிய தமிழ் மக்கள்!
வாழிய நற்றமிழ் வையகம் இனிதே”
தந்தை பெரியாரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்த போதிலும் பெரியாரின் தமிழ்மொழி எதிர்ப்பு, தமிழ் எழுத்துச் சீர்ய்ஜிருத்தம், ஆங்கிலமொழி ஆதரவு ஆகியவற்றில் கடும் எதிர்ப்பக் காட்டவும் பாரதிதாசன் தயங்கவில்லை.
”நூலைப்படி - சங்கத்தமிழ் நூலைப்படி!
முறைப்படி நூலைப்படி! - சங்கத்தமிழ் நூலைப்படி!
காலையில் படி, கடும் பகலில் படி,
மாலை இரவு, பொருள்படும்படி!”
என்று பெரியாருக்கு உறைக்கும்படிக் கூறினார்.
1949-ஆம் ஆண்டு பேராயக்கட்சி ( காங்கிரஸ் கட்சி ) ஆட்சியின்போது இருந்த கல்வி அமைச்சர் அவிம்னாசிலிங்கம் செட்டியார் அவர்களால் “எழுத்துச் சீர்திருத்தம்” என்னும் பெயரில் தமிழ் மரபெழுத்துக்களை ஒழிக்கும் முடற்சி மேற்கொள்ளப்பட்டது. 1935-ஆம் ஆண்டிலிருந்தே தந்தை பெரியாரும் இதனையே தொடர்ந்து வலியுறுத்தி எழுதி வந்தார். அதில் ஆங்கில எழுத்துக்களைத் தமிழில் கலந்து எழுதியதோடு, தமிழுக்கு மாற்றாக ஆங்கிலமொழியை முன் நிறுத்தவும் துணிந்தார். இதைக் கண்டித்து பாரதிதாசன் எழுதினார்.
“..எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே!
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே!
இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே”
.......
எழுத்துத் திருத்தத்திலும் எண்ணத் திருத்தம் வேண்டும்
எழுத்துக்களைச் சீர்திருத்தும் ஆர்வலர்க்கு ஓர் விண்ணப்பம்,
எதற்காக இந்த வேகம்? பழுத்துக் கனிந்திட்ட மொழ் கனிக்கு
பழம் அழுகச் செய்வதுவா உங்கள் திட்டம்?
ஒழுக்கத்தில் ஓரழகு வேண்டுமாயின்
உயர் பெரியார் திருத்தத்தை ஏற்க! மேலும்
கழுத்தறுப்பு வேலைதனைச் செய்வதெல்லாம்
காய்களைக் காயடிக்கும் செயலை ஒக்கும்.
மொழிக்குரிய உயர்கருத்தும் உலகளாகவும்
முன்னேறும் அறிவியலை வளர்க்கும் எண்ணம்
விழிக்கடையின் ஓரத்தும் வராத பேர்கள்
வெதும்புவதேன் எழுத்தினிலே சீர்திருத்தம் !
கொழித்த மொழி பிரஞ்சினிலே, ஆங்கிலத்தில்,
குறியீட்டைக் காட்டுகிற மொழி சீனத்தில்
தொழில்படுமா உங்கள் சீர்திருத்தம் ?
தோல் விழுங்கிச் சுளைகளை ஏன் எரிகின்றீர் நீர் ?
மக்களெல்லாம் தாய்மொழியைக் கற்பதற்கு
மடத்தனமாய்க் க்லற்பிக்கும் முறையை மாற்றிச்
சிக்கலின்றித் தெளிவாக உணருவதற்குச்
செம்மைநிலை காணாத ஆங்கிலத்தால்
தக்கவொரு தகுதியினைப் பெற்றார் போன்று
தமக்குள்தாம் பெரியார் என எண்ணிக்கொண்டு
தக்கைகளாய் தலைநிமிர்ந்து ஆடல் வேண்டா !
! பாவேந்தர் 01 - 02 - 1950 )
மேற்கண்ட பாடலில் பாரதிதாசன் “எழுத்துச் சீர்திருத்தம்” வேண்டாமென்றுவலியுறுத்தியும் தந்தை பெரியார் கேட்கவில்லை.
பெரியார் தந்த புத்திபோதும்மென்றும் இயக்கம் நடத்தும் வீரமணியும் திருந்திய பாடில்லை. அவர் நடத்தும் விடுதலை” ஏடு எழுத்துச் சீர்திருத்தம் எனும் பெயரில், தமிழ் எழுத்தில் கிரந்த எழுத்துக் குறியீடுகளைக் கல் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது,. வீரமணியா;ல் விடுதலை ஏட்டினை முழுமையாக அந்தக் கிரந்தக் கலப்பு எழுத்தில் வெளியிட முடியுமா? வெளியிட்டால் வீரமணியால் கூட அதனைப் படிக்க முடியாது என்பதுதானே எதார்த்தம்!
புரட்சிக்கவிஞர் விரும்பிய தமிழ்வழிக்கல்வி தமிழ்நாட்டில் இல்லை. எல்லாம் ஆங்கில மயமாகி வருகிறது. தமிழக அரசும் கல்விஉ வணிகர்களும் ஆங்கிலவழிக் கல்வியைத் திணிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆங்கிலக்கல்வி வணிகம் நடத்தும் வீரமணிக்கு தமிழ் எழுத்தில் கைவைக்கும் துணிச்சல் வந்ததெப்படி ?
பாரதிதாசன் பிறந்த இந்நாளில் ( 29 - 04 - 1891 ) இந்ந்நாளில் தமிழை அழிப்போரின் ( ஆரியம் - திராவிடம் ) பேசுவோரின் செவிப்பறை கிழியும்வரை, “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று ” சங்கெடுத்து ஊதிடுவோம்.!
கதிர்நிலவன் - மதுரை
நன்றி :- தமிழர் எழுச்சி, S -9, மருத்துவர்கள் குடியிருப்பு,
பூ.சா.கோ.மருத்துவமனை வளாகம்,
பீளமேடு, கோவை - 641 004
ஆசிரியர் :- முருகு இராசாங்கம்
கைப்பேசி :- 94435 24166
thamizharezhuchi@yahoo.com
0 comments:
Post a Comment