பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, October 7, 2014

கேரள மாநிலத்தில் ‘மதுக்கடைகள் மூடப்படுவது உறுதி’ முதல்–மந்திரி உம்மன்சாண்டி பேச்சுகேரள மாநிலத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படுவது உறுதி என்று முதல்–மந்திரி உம்மன்சாண்டி கூறினார்.

பூரண மதுவிலக்கு

கேரள மாநிலத்தில் படிப்படியாக மதுவிலக்கு திட்டம் அமல்படுத்தப்படும் என்று அந்த மாநில முதல்–மந்திரி உம்மன்சாண்டி ஏற்கனவே அறிவித்தார். 10 ஆண்டுகளில் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார். இதன்படி முதல் கட்டமாக கேரள மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைதோறும் மதுக்கடைகள் மூடப்படுகிறது.

இதுதவிர காந்தி ஜெயந்தி, புனிதவெள்ளி, ஸ்ரீநாராயணகுரு ஜெயந்தி உள்பட குறிப்பிட்ட நாட்களிலும் மதுக்கடைகள் திறக்கப்படுவதில்லை. மேலும் சாதாரண ஓட்டல்களில் இயங்கும் 700 ‘பார்’களை மூடவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

உறுதி

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் நேற்று மதுஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் முதல்–மந்திரி உம்மன்சாண்டி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

10 ஆண்டுகளில் முழுமையான மதுவிலக்கு கொண்டுவருவது என்ற திட்டத்தில் அரசு உறுதியாக உள்ளது. இதற்காக மது விற்பனை அளவை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். அரசின் இந்த முயற்சிக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மக்களின் ஆதரவு இருக்கும்போது, வேறு எந்த சக்தியாலும், அரசின் இந்த நடவடிக்கையை தடுத்துவிட முடியாது.

இவ்வாறு உம்மன் சாண்டி பேசினார்.

நன்றி :- தினத்தந்தி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment