பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, October 2, 2014

கவுன்டவுனுடன் நிமிடத்தோடு மரண தேதியை அறிவிக்கும் புதிய வாட்ச்!
துபாய் : இந்த வாட்ச்சை பார்க்கும் போது எல்லாம் நமக்கு வாழ்நாள் இவ்வளவுதான் அதனால நாம எல்ல வேலையயும் சிறப்பா செய்யனும்,இன்னும் நிறைய சாதிக்க தோன்றும் என்கிறார் இதன் தயாரிப்பாளர். அந்த வாட்ச்தான் டிக்கர்  என்ற பெயருடன் மார்கெட்டுக்கு வந்துள்ளது.உதரணமாக‌ 41 வருடம், 3 மாசம், 4 நாள், 7 மணிநேரம், 5 நிமிடம், 19 நொடியில‌ நீங்க இறந்து விடுவீர்கள் என்று காட்டும். பெட்ரிக் கோல்டிங் என்பவர் இந்த வாட்சை தயாரித்து உள்ளார். இப்படி டெரரான ஒரு வாட்ச்சை அறிமுகப்படுத்திய பெட்ரிக் கோல்டிங் கூறியதாவது, மனித‌ வாழ்க்கையில இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று, ஆனால் நம்ம எலலாரும் நமக்கு இருக்குற‌ இந்த விலை மதிப்பில்லாத‌ நேரத்தை சரியா பயன்படுத்துவது இல்லை என்று தெரிவித்தார். 

இந்த டிக்கர் வாட்ச் மத்த ஸ்மார்ட் வாட்ச் போல உங்கள உங்க வேலைகளை கண்டு சோர்வடைய வைக்காது, அதுக்கு பதிலா இந்த வாட்ச்சை பார்க்கும் போது எல்லாம் நமக்கு வாழ்நாள் இவ்வளவுதான் அதனால நாம எல்லா வேலையயும் சிறப்பா செய்யனும், இன்னும் நிறைய சாதிக்கனும்னு தோனும். ஒரு சிறந்த மற்றும் சந்தோசமான வாழ்கையை வாழ்றதுக்கு இந்த வாட்ச் கண்டிப்பா உதவிகரமாக‌ இருக்கும். அதற்காகத் தான் இந்த வாட்ச் டிஸைன் செய்யப்பட்டு உள்ளது. நமக்கு தரபட்ட வாழ்க்கை என்பது ஒரு முறை தான் எனவே இந்த வாழ்கையில் உள்ள ஒவ்வொரு நாளின் பயனையும் இந்த வாட்சோட துணையோட முழுமையாக‌ பெற வேண்டும் என்பது தான் இந்த வாட்ச்சோட தத்துவம் என்றார். இந்த வாட்ச் இன்றைய சந்தை மதிப்பில் ஆன்லைனில் $79 அமெரிக்க டாலர்களுக்கு கிடைக்கிறது. சந்தை மதிப்பில் ரூபாய் 4,871.26 க்கு கிடைக்கிறது என இதன் தயாரிப்பளர்கள் தெரிவித்து உள்ளார்கள்.

நன்றி :- தினகரன்

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment