பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, October 2, 2014

பிரபல தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் மரணம்

201410030151030587_Veteran-industrialist-Pollachi-Mahalingam-is-no-more_SECVPF
சென்னை,

பிரபல தொழிலதிபரும், 3 முறை சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி நா.மகாலிங்கம் சென்னையில் நடந்த விழா ஒன்றில் வள்ளலார் குறித்து சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.

கல்வியாளர், ஆன்மிகவாதி, காந்தியவாதி என பன்முகங்கள் கொண்ட தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் (91) சென்னையில் காந்தி ஜெயந்தி விழா ஒன்றில் சொற்பொழிவாற்றுவதற்காக வந்தார்.

அப்போது, திடீரென சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், டாக்டர்கள் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.

வாழ்க்கை வரலாறு

1923, மார்ச் 21 ஆம் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் மகாலிங்கம். இவர் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவராவார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழத்தில் டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

2007-ல் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார். 1952, 1957, 1962 தேர்தல்களில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டவர். பொள்ளாச்சி தொகுதியில் இருந்து 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். குறிப்பாக, பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்.

ஆன்மிக வாழ்க்கையிலும் சிறந்து விளங்கியவர். சக்தி குழும நிறுவனத்திற்கு தலைவராக உள்ள இவர் 5 ஆயிரம் கோடிக்கு அதிபதி ஆவார். பிரபல ஏ.பி.டி. பார்சல் சர்வீஸ் நிறுவனமும் இவருக்கு சொந்தமான நிறுவனங்களுள் ஒன்றே. கல்விச் சேவையிலும் மகாலிங்கம் சிறந்து விளங்கியவர்.

இவருக்கு, மாணிக்கம், பாலசுப்பிரமணியம், ஸ்ரீனிவாசன் என 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இவரது மறைவு தமிழ் மற்றும் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரும் இழப்பு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து பல அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment