பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, October 14, 2014

பாடலை எழுதியது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமா? திருச்சி தியாகராஜனா?

 

தமிழ்த் தாமரை 

இசைக்கவி 

திருச்சி தியாகராஜன்


கவிஞரின் முதல் திரைப்பாடல்

படம் -பொன் விளையும் பூமி
பாடியவர் -சி எஸ் ஜெயராமன்

கவிஞர் திருச்சி தியாகராஜன் திரைத்துறையில் எழுதிய இந்த முதல் பாடலிலேயே, பொன் விளையும் பூமி படத்திற்கான விமர்சனத்தை எழுதிய தினத்தந்தி ,பாடலை எழுதியது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமா? திருச்சி தியாகராஜனா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.அந்தளவுக்கு புகழ் பெற்ற பட்டுக்கோட்டையாரின் பாடல்களோடு ஒப்பிட்டு எழுதியது குறிப்பிடத்தகுந்தது


பொன் விளையும் பூமியிலே
பொழுதெல்லாம் பாடுபட்டும்
புதுவாழ்வு காணாமல்
பொங்குகிறான் தொழிலாளி
அன்னைபூமி செல்வமெல்லாம்
அள்ளி அள்ளி தந்தாலும்
அரைவயிற்றுக் கஞ்சியில்லை
ஆடையில்லை வீடுமில்லை
தொகையறா
குடும்ப வண்டி குடுகுடுன்னு
உருண்டு ஓடுது- பாதை
குறுக்கே வந்து மேடு பள்ளம் 
தடுக்கப் பார்க்குது
கொடுமையான வேங்கைப்புலிகள்
காட்டை அழிக்குது- விலங்கு
குணம் படைத்த மனித மிருகம் 
நாட்டை அழிக்குது
சேற்றைக் கலக்கி நாத்தை நட்டவன்
காத்தா பறக்கிறான் - அதைப்
பாத்து ரசிக்கும் மோசக்காரன்
நோட்டா மடிக்கிறான் - பச்சை
நோட்டா மடிக்கிறான்
ஆடி ஆடி நம்ம ஜோடிமாடுகள்
ஜோரா போகுது-அதில்
ஆணும் பெண்ணும் குடும்பம் நடத்தும்
அழகு தோணுது
மூடிவச்சு மோசடி செய்யும்
பேடியைப் போலே- ஒருத்தன்
முன்னே விட்டு பின்னாலே வந்து
கடையாணியைக் கழட்டுறான்
முன்னே வச்ச கால நீயும்
பின்னே வைக்காதே - உன்
முன்னேற்றத்தில் தடையைப் பார்த்து
முகம் சுளிக்காதே
கண்ணு ரெண்டின் பார்வைபோலே
ஒண்ணா ஓடுங்க- வழியில்
காணும் ஏற்ற தாழ்வைக்
காலால் மிதிச்சிப் போடுங்க.
 http://lyricistttr.blogspot.in/
பெரியவர்  திருச்சி  தியாகராஜன்  26-12-1983-ஆம் நாள்  நல்லாசி  கூறிக்  கையெழுத்திட்டுத்  தந்த  வெளிச்சம்  கவிதைப்  புத்தகத்திலிருந்து  தமிழகம்   மேய்ச்சல்காடு  என்ற கவிதை அடுத்த பதிவாக வெளிவரும். 

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment