பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, September 1, 2014

வாங்க படிக்கலாம் ! - சிங்கப்பூர் ஆசிரியையின் வலைப்பூக்கள் - அறிமுகம்



சிங்கப்பூரில் ஆசிரியையாகப் பணியாற்றுபவர். 2010-ஆம் ஆண்டிலிருந்து தமிழ் வலைப்பதிவராக உலா வருகின்றார்.

Cooking for Diabetics...? ,

வாங்க படிக்கலாம்!, 

எனக்குள் ஒருத்தி... 

என்ற மூன்று வலைப்பூக்களுக்குச் சொந்தக்காரர்!

வாங்க படிக்கலாம்!

என் இனிய குழந்தைகளே, இளைய தளபதிகளே, செல்லச் சிட்டுக்களே.. இந்த வலைப்பூ உங்களுக்குப் பயன் மிக்கதாக இருக்கும் என நம்பி நான் இதனை துவக்குகிறேன்.. உங்கள் கல்விப் பயணம் உங்களுக்கும் உங்கள் கல்வித் தேடல்களுக்கும் தேவைகளுக்கும் பயனுள்ளதாக அமைய நான் வாழ்த்துகிறேன். உங்களுக்கு மேலும் ஏதேனும் தேவைகள் இருக்குமாயின், தயங்காமல் என்னுடன் மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ளுங்கள்!

வாக்கியங்களை முடித்து எழுதுக ( விடைகள் ) , வாய்மொழித் தேர்வுகளில் பட உரையாடல், வாய்மொழித் தேர்வு - உரையாடல் பகுதி , "வாசித்தல் எப்படி?" ,சிறுவர்களுக்கான வாய்மொழி - உரையாடல் குறிப்புகள், ஒலி வேறுபாடு பயிற்சி, மாதிரிப் பயிற்சி - ஜூன் 2014 -என்பனவெல்லாம் அவரது பதிவுகளின் தலைப்புச் செய்திகள். மாணாக்கருக்குப் பெரிதும் துணை நிற்பவை. 


2013- ஆம், ஆண்டில் ஒரே பதிவு

நல்ல கருத்துக்கள் கொண்ட புத்தகம்

புதுவையில் நான் ஒரு மாத கால இலவசப் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது கண்டெடுத்த புத்தகம் ஒன்று. சிறிய நூல் தான் இருப்பினும், பொருள் மிக அரிது!  நூலின் ஒரு சில கருத்துக்களை உங்களுடன் நான் இங்குப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

வேலை: அதுவே ஒரு தியானம் 

உங்கள் வேளையில் நீங்கள் கவனம் செலுத்துங்கள். மன அமைதிக்கு முக்கியத்துவம் தருவோர் எல்லாவற்றிற்கும் மேலாகக் கடைப்பிடிக்க வேண்டிய நியதி இது. இந்த உலகத்தில் எதுவுமே உங்கள் கவனத்தை வேண்டுவதில்லை. அனைத்தையும் கவனிக்க ஆண்டவன் இருக்கிறான். உண்மையில், உங்களையும் கவனிப்பது அவன்தானே? இந்த உண்மையை மறக்கக்கூடாது. 

குறை கூறலாமா?

நான் திரும்பவும் கூறுகின்றேன், உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். எவரையும், எதையும் குறை கூறாதீர்கள். குறை கூறுவது திட்டுவதற்கு நிகர். எது நடந்தாலும், அது கடவுளின் இச்சையால் நடக்கிறது. கடவுளின் அனுக்கிரகம் இன்றி எதுவுமே நிகழ்வதில்லை. ஏதாவது நடந்தது என்றால் அது உங்கள் பார்வையில் நல்லதாகவோ, அல்லது கெட்டதாகவோ இருக்கலாம். அதற்கு கடவுளின் அனுமதி இருக்கிறது என்றுதான் பொருள். நீங்கள் அதைக் கண்டனம் செய்தால் கடவுளின் விருப்பத்தை, கடவுளின் பேரறிவை, கடவுளின் தீர்ப்பை நீங்கள் விமர்சிக்கின்றீர்கள் அன்றுதானே அர்த்தம்? அதைச் செய்யாதீர்கள். உங்களுக்கு அமைதி கிட்டும்.


 தொடர்பு மின்னஞ்சல் முகவரி : ladyrain72@hotmail.com

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment