பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, September 2, 2014

நொச்சி – அறியப்படாத தமிழ்ப் பதிப்பாளுமைகள் ஆய்வு – ஆவணம்

xnochi_-_Copy_2036232a.jpg.pagespeed.ic.DcjV4Zed5q

நொச்சி’ நூலில் 28 பதிப்பாளுமைகள் குறித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தவிர, 27 பதிப்பாளுமைகள் தொடர்பான தகவல் குறிப்புகளையும் தொகுத்து பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளனர்.
தமிழ்ப் பதிப்பு வரலாறு என்பது இதுவரை ஒரு சார்பாகவே எழுதப்பட்டுள்ளது. உ.வே. சாமிநாதையர், சி.வை. தாமோதரம்பிள்ளை, ச. வையா புரிப்பிள்ளை, மே.வீ. வேணு கோபாலப்பிள்ளை, ஆறுமுக நாவலர், இரா. இராகவையங் கார் போன்ற செவ்வியல் இலக்கியப் பதிப்பாளர்கள் தொடர்ந்து முன்னி லைப்படுத்தப்படுகின்றனர்.
இவர்கள் மட்டும்தான் பதிப்பாளர்கள் என்ற பிம்பம் தொடர்ந்து நிறுவப் பட்டுக்கொண்டே வருகிறது. இந்த ஒருசார்பான வரலாற்றை இப்புத்தகம் தகர்த்துள்ளது. செவ்வியல் இலக்கியப் பதிப்பாளர் களையும் தாண்டி இத்துறையில் தங்கள் வாழ்நாட்களைக் கழித்த பதிப்பாளர்கள் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளனர். மேலும் காலமாற்றத்தில் பதிப்பு முறையில் நிகழ்ந்த அக/புற மாற்றங்களையும் இத்தொகுப்பு நூல் சான்றுகளோடு விவரிக்கிறது.
இந்து மதத்தின் ஆன்மிக வாதியாகவும் அருளாளராகவும் தொடர்ந்து முன்னிறுத்தப்படும் இராமலிங்க அடிகள் ‘ஒழிவி லொடுக்கம்’, ‘தொண்ட மண்டல சதகம்’, ‘சின்மய தீபிகை’ ஆகிய மூன்று நூல்களைப் பதிப்பித்துள்ளார் என்ற தகவல் இராமலிங்க அடிகளாரை வாசித்த அனைவருக்கும் தெரியும். பாடப் புத்தகங்களும் தொடர்ந்து இந்தத் தகவல்களை மட்டுமே அடுத்த தலைமுறையினரிடம் கொண்டுபோய்ச் சேர்த்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்தத் தொகுப்பு நூல் இராமலிங்க அடிகளாரை மிகச் சிறந்த பதிப்பாளராக நிறுவுகிறது. அடிகளார் பதிப்புத் துறையில் பல சீர்திருத்தங்களையும் முன் முயற்சிகளையும் மேற்கொண்டு இத்துறையைச் செழுமைப் படுத்தியிருக்கிறார். இன்று பதிப்பு முறையில் பயன்படுத்தப்படும் பல உத்திகளுக்கு அடிகளாரே காரணமாக இருந்திருக்கிறார்.
ஆனால் இவர் தொடர்ந்து பதிப்புப் பணியில் ஈடுபட வில்லை என்பது வருந்தத் தக்கது. இதுபோன்ற காலத்தால் மறக்கடிக்கப்பட்ட ஆளுமைகளையும் அவர்களின் பதிப்பு முயற்சிகளையும் இப்புத்தகம் ஆவணப்படுத்தியிருக்கிறது.
நொச்சி – அறியப்படாத தமிழ்ப் பதிப்பாளுமைகள் ஆய்வு-ஆவணம் 
பரிசல் வெளியீடு, 
எண்.101, எச் ப்ளாக்,
முத்துமாரியம்மன் கோயில் தெரு,
எம்.எம்.டி.ஏ காலனி, 
அரும்பாக்கம், 
சென்னை 106 
விலை: ரூ.130/- 
அலைபேசி 93828 53646
தி இந்து

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment