பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, September 2, 2014

திருக்குறள் நடையில் புதுக்குறள்: ஓவிய ஆசிரியரின் கைவண்ணம்அரச்சலூரைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் சாலமன் (44) திருக்குறள் நடையில் புதுக்குறள் எழுதி வருகிறார்.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் திருக்குறளை 2 அடியில் எழுதியது போல இவரும், 2 அடியில் புதுக்குறள் எழுதி வருகிறார். இதுவரை எழுதப்பட்ட 108 குறள்களை, 1.5 செ.மீ. உயரம், 3 செ.மீ. அகலம் கொண்ட மிகச்சிறிய புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
இதற்கு புதுக்குறள் எனத் தலைப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு குறளுக்கும் ஒரு தலைப்பு உண்டு. நல்வாழ்வு, உயர்வு, உள்ளத்தூய்மை, தமிழ்மொழி, பால்நிலா, அம்மா, மழைநீர் சேமிப்பு, திருக்குறள், வெற்றி, அன்பு, தீண்டாமை, வீரம், சினம், வினை, ஆசிரியர், உண்மையும், பொய்யும், நல்விதை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் குறள்களை இவர் எழுதியுள்ளார்.
தனது புதுக்குறள் குறித்து ஓவிய ஆசிரியர் சாலமன் கூறுகையில், ஒரு திரைப்படத்துக்கு கவிஞர் வைரமுத்து 10 குறள்களை இயற்றிப் பாடியுள்ளதாக நாளிதழில் வாசித்தேன். இதுவே, எனக்கு குறள் போன்று எழுத உந்துதலாக இருந்தது.
ஓவியனாகவும், புகைப்பட கலைஞனாகவும் இருப்பதால் சிறிய புத்தகத்தை நானே உருவாக்க முடிந்தது. இதுவரை 180 குறள்கள் எழுதிவிட்டேன் என்றார்.
இவர், சிவகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஜெயவேணி என்ற மனைவியும், பால்நிலவன் என்ற மகனும் உள்ளனர்.

இவர் எழுதிய புதுக்குறளில் சில...
வாழ்வாங்கு வாழ்வார்யாரோ அவர் செஞ்சூரியன்
எழும்முன் எழுவார் அவரே.
நடையழகு உடையழகு விழியழகு என்பாரே அவர்
பால்நிலாவின் உலாஅழகை ரசிக்காதவர்.
நன்றி :தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment