பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, September 15, 2014

ஆபாசத் தளங்களைக் கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.

குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை

கணினி பற்றி தெரிந்திருக்கும் அனைவருக்கும் கூகிள் பற்றித் தெரியாமல் இருக்காது அந்த அளவிற்கு இணையதளம் பயன்படுத்தும் மக்களோடு இணைந்துள்ள கூகிள் தேடுபொறியின் சில மறைமுக ரகசியங்களைப் பற்றியும் இதனால் நம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.
கூகிள் இல்லை என்றால் இணையமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு கூகிளின் தேவை மக்களிடையே அதிகரித்துள்ளது,  என்ன தேட வேண்டுமானாலும் நொடியில் தேடிக் கொடுக்கும். அதோடு மட்டுமல்லாமல் நாம் தேடும் தகவல்களுடன் தொடர்புடைய செய்திகளையும் காட்டி நம்மை ஆச்சர்யப்பட வைக்கும், மாணவர்கள் முதல் ஆசிரியர்கள், தொழிலதிபர்கள் என அனைவருக்குமே கூகிள் போல் தகவல்களை கொடுக்கும் தேடுபொறி இல்லை என்று சொல்வதும் உண்மை தான்.
இத்தனை வசதிகள் இருந்தும் கூகிள் தேடுபொறியில் சென்று தமிழில் தேட முடிகிறதா ? உதாரணமாக ” அம்மா “ என்று தட்டச்சு செய்யத்தொடங்கும் போதே ஆபாச வார்த்தைகளைக் காட்டுவதோடு தேடி ரும் முடிவுகளும் ஆபாசத்தையே காட்டுகிறது. ஒரு சிறுவன் இணையத்தில் சென்று கூகிளில் இதுபோல் தேட மேற்கொண்டால் வளரும் பருவத்தில் அவனை இது தவறான வழிக்கு அழைத்துச் செல்லாதா ? நம் குழந்தைகளும் , இளைஞர்களும் வரும் காலசந்ததிகளையும் இதில் இருந்து பாதுகாப்பது நம் கடமை அல்லவா ?, பாதுகாப்பான தேடல் என்பதை முகப்பில் வைத்துவிட வேண்டியது தானே என்று அனைவரும் கூறினாலும் கூகிள் அதைச் சற்றும் கவனிக்கவில்லை என்றால் தமிழன் என்றால் உங்களுக்கு இழிச்சவாயனா ?
வளர்ந்து வரும் நாடான சீனாவும் பல முறை கூகிள் நிறுவனத்திற்கு இதுபோல் ஆபாச தளங்களை தேடுபொறியில் காட்டுவதைத் தடைவிதிக்க வேண்டும் என்று பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளத கூகிள் நிறுவனத்தின் அத்தனை சேவைகளையும் சீனா முழுமையாக தடை செய்திருக்கிறது, ஒரு சில மாதங்களிலே சீனாவின் தொழில்நுட்பக்குழு கூகிளைவிட சிறப்பான தேடுபொறி ஒன்றையும் வெளியீட்டு இருக்கிறது, தன் நாட்டு இளைஞர்கள் வருங்கால தூண் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று சீனா எடுத்திருக்கும் முடிவு எத்தனை உண்மை என்று உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறோம்.
தமிழகத்தின் சில மாவட்ட ஆட்சித்தலைவர்கள் , அதிகாரிகள் எனப்பலர் கூகிளின் இந்ததவறைச் சுட்டிக்காட்டி நீக்க சொல்லியும் கூகிள் ஏனோ செவிசாய்க்கவில்லை , இதை இப்படியே விட்டால் தமிழினத்தை இல்லாமல் செய்தது போல் நாளைய தமிழ் என்ற மொழியையே கொச்சைப்படுத்தி விடுவார்கள், இளைஞர்களையும் சிறுவர்களையும் வக்ரபுத்தி கொண்டவர்களாக மாற்றிவிடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, இதுபற்றி கூகிள் நிறுவனத்திற்கு தெரிவித்தும் இதுவரை எந்தப்பதிலும் இல்லை, ஜீமெயில் யூடியூப் என்ற பெரிய சேவையை கொடுக்கின்றனரே என்ற எண்ணத்தை எல்லாம் விடுத்து இந்தப்பிரச்சினைக்கு அறவழியில் தீர்வு கேட்போம் பதில் கிடைக்கும் வரை கூகிளின் சேவையை நாம் பயன்படுத்தாமல் மற்ற தேடுபொறிகளை பயன்படுத்துவோம். தமிழ்ஸ்பீக் (www.Tamilspeak.com) மூலம் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடையே இந்தப்பிரச்சினையைத்  தெரிவிப்போம், இதே நிலை தொடர்ந்தால் கூகிளின் சேவையை இந்தியாவில் இருந்து நீக்க ஒன்றுபட்டுப் பாடுபடுவோம். இதைப்படிக்கும் ஒவ்வொருவரும் நம் வருங்கால தமிழினத்திற்காகத் தங்களின் பேஸ்புக் , டிவிட்டர் போன்றவற்றில் இந்த செய்தியைப் பகிர்ந்து பரப்புரை செய்வோம்.
Google has become inevitable search engine in the modern world ;   inseparable with the Internet, almost reaching the maxim as If there is no Google; there is no internet. The main facility it offers is it not only to search but also gives a lead or a help to catch the right site we like to browse. But it is a sad fact that if we begin to search in Tamil  language, matters differ. If you put a word “அம்மா” the lead gives you many obscene suggestions leading to ‘Adult’ matters. Think about a child whether a boy or a girl who tries to search a site with that suggestion. Won’t it destroy the future of the child?
All the Tamil parents should safeguard their child from the Internet menace which occur through a leading search engine. Many people warned Google to adapt for a Safe search relieved from Adult matter; but it doesn’t care. China became fed up with this arrogant manner and banned all Google’s services. They care more about their younger generation.And China  found out a very special Search Engine more advanced than Google. Many district Collectors and officers pointed out this danger; but Google lends no ear to the objections. One thing we should be aware of we have contaminated the whole earth in many ways and by many means. Are we ready to contaminate the intellectual sphere also? Are we ready  to spoil the whole generation of tomorrow? If you are ready then it is okay. Don’t care about your children. That much we can assure there won’t be good healthy minded citizen tomorrow.
Let us continue the debate.
- சகாதேவன்

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment