பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, September 15, 2014

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நூல்கள் சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம்


பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், பல்கலைக்கழக 34 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிப்புத் துறையில் 50 சதச் சிறப்புத் தள்ளுபடி நூல்கள் விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.
   இந்த விழாவுக்குத் தலைமை வகித்த பல்கலைக்கழகப் பதிவாளர் சே. கணேஷ்ராம் பேசியது: பதிப்புத் துறையில் 450-க்கும் அதிகமான நுல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிவியல், வாழ்வியல் களஞ்சியம் மிகவும் சிறப்பு வாய்ந்தவை என்றார் அவர்.
   துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் செ. சுப்பிரமணியன் பேசியது:
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் அண்ணா பிறந்த நாள், தமிழ்ப் புத்தாண்டு நாளில் என இரு முறை சிறப்பு தள்ளுபடி விற்பனையில் நூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இப்போது தொடங்கப்பட்டுள்ள 50 சதத் சிறப்புத் தள்ளுபடி விற்பனை அக். 14-ம் தேதி வரை தொடரும். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் சுப்பிரமணியன்.
நிதி அலுவலர் ஆ.மீ. பார்த்திபன் வாழ்த்துரையாற்றினார். முன்னதாக, பதிப்புத் துறைத் துணை இயக்குநர் பா. ஜெயக்குமார் வரவேற்றார். பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் இரா. முரளி நன்றி கூறினார்.
ற்ஹ15ற்ற்ன்1 - படவிளக்கம்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத் துறையில் திங்கள்கிழமை தொடங்கப்பட்ட 50 சதச் சிறப்புத் தள்ளுபடி விற்பனை நிகழ்ச்சியில் நூல்களைப் பார்வையிட்ட பதிவாளர் சே. கணேஷ்ராம், துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் செ. சுப்பிரமணியன் உள்ளிட்ட்டோர். 
நன்றி : தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment