பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, September 4, 2014

கனிச்சாறு : 1 :தமிழ்த்தாய் வாழ்த்து - பாவலரேறு பெருஞ்சித்திரனார்



அன்னை மொழியே ! அழகார்ந்த செந்தமிழே !

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே !

கன்னிக் குமரி கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே !

தென்னன் மகளே ! திருக்குறளின் மாண்புகழே !

இன்னறும் பாப்பத்தே ! எண் தொகையே ! நற் கணக்கே !

மன்னுஞ் சிலம்பே ! மணிமே கலை வடிவே !

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே !



சிந்தா மணிச்சுடரே ! செங்கைச் செறிவளையே !

தந்த வடமொழிக்கும் தாயாகி நின்றவளே !

சிந்து மணற்பரப்பில் சிற்றில் விளையாடி

முந்தை எகுபதியர் மூத்த சுமேரியத்தார்

சிந்துங் கலைவடிவே ! சீர்த்த கடற்கோளில்

நந்தாக் கதிரொளியே ! நாடகத்துப் பண்ணீயலே !

வந்து குடிமரபோர் வாழ்த்தி வணங்குவமே !


 கனிச்சாறு - முதல் தொகுதி

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் - முதல் தொகுதி

தென்மொழி பதிப்பகம்

தென்மொழி அடுக்ககம்

( சி.கே.அடுக்ககம் )

மேடவாக்கம் கூட்டுச்சாலை

மேடவாக்கம்

சென்னை - 600 100
-------------------------------
94444 40449 







Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

3 comments:

  1. பொருள் கூறும்

    ReplyDelete
    Replies
    1. அ ன் ண னை த ம ோ ழி வ ய ! அ ழ ்க ோ ய்
      அ ண ம ந் ெ த ்ச ழு ந் ெ மி வ ழ ! ப ழ ண ம க் கு ப்
      ப ழ ண ம ய ோ ய் த் வ ெ ோ ன் றி ய ெ று ங ்க னி வ ய !
      ்க ் ல் த ்க ோ ண் ் கு ம ரி க் ்க ண் ் த் தி ல்
      நி ண ல த் து அ ை ்ச ோ ண் ் ம ண் ணு ல ்க ப்
      வபைைவ்ச! போண்டிய மன்னைனின் ம்கவள!
      திருக்கு்ளின் தபரும் தபருணமக்குரியவவள!
      ப த் து ப் ப ோ ட் வ ் ! எ ட் டு த் த ெ ோ ண ்க வ ய !
      ப தி த னை ண் கீ ழ க் ்க ை க் வ ்க ! நி ண ல த் ெ
      சிலப்பதி்கோைவம! அழ்கோனை மணிவம்கணலவய!
      தபோஙகிதயழும் நிணனைவு்களோல் ெணலபணிந்து
      வோழத்துகின்வ்ோம்.

      Delete