பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, September 4, 2014

ஐ. நா விசாரணையில் சாட்சியமளிப்பது எப்படி - விள்க்குகிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

gan2_CI.jpg
 ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தால் நடாத்தப்படும் விசாரணையில் எப்படி சாட்சியமளிக்கலாம் என்பது தொடர்பிலான தெளிவை ஏற்படுத்துவதற்கு பின்வரும் தகவலை நாம் உங்களுக்கு வழங்குகின்றோம்:
அ. எப்போது இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சாட்சியம் அளிக்கலாம்?:

மூன்று வகையான சம்பவங்கள் தொடர்பில் சாட்சியமளிக்கலாம்:  

1.    இறுதி யுத்தத்திற்கு முன்னர் நடந்த சம்பவங்கள் - ஐ நா விசாரணை உத்தியோகபூர்வமாக 2001 காலப் பகுதியின் பின்னரான விடயங்களே கவனத்தில் எடுக்கும். என்றாலும் இலங்கையில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை முழுமையாக விளங்கிக் கொள்ள உதவும் எந்த சம்பவத்தைப் பற்றிய தகவலும் தமக்கு உதவும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் 1948க்குப் பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் சாட்சியமளிப்பதில் தடையில்லை.

2.    இறுதி யுத்தத்திற்குப் பின்னரான சம்பவங்கள் -  ஐ நா விசாரணை உத்தியோகபூர்வமாக 2012 காலப் பகுதியின் முன்னரான விடயங்களே கவனத்தில் எடுக்கும் என்றாலும் இலங்கையில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை முழுமையாக விளங்கிக் கொள்ள உதவும் எந்த சம்பவத்தைப் பற்றிய தகவலும் தமக்கு உதவும் எனக் குறிப்பிட்டுள்ளனர். எனவே இன்றும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் தொடர்பில் சாட்சியமளிப்பதற்குத் தடையில்லை.

3. இறுதி யுத்தத்தின் போதான சம்பவங்கள்

ஆ. எத்தகைய சம்பவங்கள் தொடர்பில் சாட்சியமளிக்கலாம்?: இனப் பிரச்சனை தொடர்பிலான  எந்த வன்முறைச் சம்பவம் தொடர்பிலும் சாட்சியமளிக்கலாம். உதாரணமாக: கொலை, கடத்தல், காணாமல் போதல், காணாமல் போகச் செய்தல், பாலியல் வன்கொடுமை, காணி அபகரிப்பு, சித்திரவதைக்குட்படுத்தப்படல், அரசியல் கைதிகள், தொடர்ச்சியான கைது நடவடிக்கைகள், அச்சுறுத்தல்கள்

இ. உங்கள் சாட்சியம் பின்வரும் விடயங்களை கவனித்தில் கொள்ள வேண்டும்:

சாட்சியம் தருபவர் தொடர்பான விடயங்கள் (பெயர், வயது, முகவரி)

     சம்பவம் நடந்த இடம்:
     சம்பவம் நடந்த திகதி:
     சம்பவம் பற்றிய முழுமையான விபரிப்பு:

சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதைப் பற்றி இயன்ற வரையில் முழுமையான விபரணம்: (உதாரணமாக ஷெல் தாக்குதலால் மரணமடைந்திருந்தால் எந்தத் திசையிலிருந்து அந்த ஷெல் தாக்குதல் நடந்தது - அந்தத் திசையில் யார் நிலை கொண்டிருந்தனர் போன்ற தகவல்கள்;, காணாமல் போனோர் தொடர்பில் - எந்த முகாமைச் சேர்ந்தவர்கள் கடத்திக் கொண்டு போனார்கள் போன்ற விபரங்கள்).

ஈ. எந்த மொழியில் சாட்சியம் அளிக்கலாம்?

சாட்சியங்கள் தமிழிலும் வழங்கப்படலாம். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியமில்லை. சுயமாகத் தாயரித்து அனுப்பலாம். இதற்கென்றொரு படிவம் இல்லை. கடிதம் போல் கூட எழுதி அனுப்பலாம்.


உ. உதவி தேவைப்படுவோர்:

எமது கட்சி அலுவலகத்தை நாடலாம். தொடர்பு முகவரி: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இல 43, 3ஆம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம்.

எ. சாட்சியத்தை எங்கு அனுப்புவது:
மின்னஞ்சல் மூலமாக: oisl_submissions@ohchr.org      என்ற முகவரிக்கோ அல்லது
OISL,  UNOG-OHCHR,  8-14 Rue de la Paix, CH-1211 Geneva 10,  Switzerland என்ற  தபால் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்.

சாட்சியமளிப்பதற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தினை தமிழ் பத்திரிகைகளில் பார்வையிட முடியும். அவ்வாறான ஒரு படிவத்தினை நீங்களாகவே தயாரிக்க முடியும் அல்லது தமிழ் செய்தி இணையத்தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ள முடியும்.

அப்படிவங்களை பூர்த்தி செய்த பின்னர் மேலே கூறப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு அல்லது தபால் முகவரிக்கு நீங்களாகவே அனுப்பி வைக்க முடியும். மேலதிக உதவி தேவைப்படுவோர் எமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு விபரம்:

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இல 43, 3ம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம்

தொiலை பேசி எண்: 0212223739, 0773024316, 0777301021

மின்னஞ்சல்: tnpfparty@gmail.com

ஏ. சாட்சியமளிப்பதற்கான இறுதித் திகதி: 30 அக்டோபர் 2014
தமிழ் மக்களுக்கு இடம்பெற்ற இடம்பெற்றுவரும் அநீதிகளை சம்பவங்களை விசாரணைக் குழுவுக்கு முழுமையாக சமர்ப்பிப்பதன் மூலம் தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் நீதி பெற்றுக் கொள்வதற்கு கிடைத்துள்ள இச் சந்தற்பத்தை அனைத்து தமிழ் மக்களும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கோருகின்றோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்   
தலைவர்                                
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்


  சத்தியக்கடதாசி
............................................................................................................என்னும் முகவரியைச் சேர்ந்த................................................................. ............... (பெயர்) .........வயது.............சமயம் ஆகியநான் உண்மையாகவும், நேர்மையாகவும், பயபக்தியுடனும் வெளியரங்கப்படுத்தி உறுதிப்படுத்தி செய்துகொள்ளும் சத்தியக்கூற்றாவது:-
1.    நான் கீழே விபரிக்கப்படும் சம்பவத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர் ஃ கீழே விபரிக்கப்படும் சம்பவத்தை நேரடியாகக் கண்ணுற்றவர் (தேவையற்றதை வெட்டிவிடவும்)  

2.    பாதிப்புஃசம்பவத்தின் தன்மை...........................................................
..........................................................................................................
............................................................................................................
(பாதிப்பு என்னும் போது பின்வரும் விடயங்கள் உள்ளடங்கும்;;; இனக்கலவரம் போன்ற வன்செயலில் கொல்லப்படுதல் ஃ காயமடைதல் ஃ சொத்துக்களை இழத்தல், சுட்டுக் கொல்லப்படுதல், விமானக் குண்டுத்தாக்குதல் அல்லது செல்தாக்குதலில் கொல்லப்படுதல் ஃ காயமடைதல் ஃ சொத்துக்களை இழத்தல் ஃ கைதுசெய்யப்படுதல் ஃகடத்தப்படுதல் ஃகாணாமல் போதல் ஃசித்திரவதைக்கு உள்ளாக்கப்படல் ஃபாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்படுதல் ஃபாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படல் ஃ உணவு, மருத்துவம் இன்மையால் பாதிக்கப்படல் ஃ வாழ்விடங்கள் அபகரிக்கப்படுதல் ஃ வணக்கஸ்தலங்கள் ஃ நூல் நிலையங்கள் ஃ பாடசாலைகள் ஃ வைத்தியசாலைகள் அழிக்கப்படல்)

3.    பாதிப்பு ஃ சம்பவம் யாரால்செய்யப்பட்டது?..............................................................................
(இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலீஸ் அல்லது காடையர்கள்)      

4.    பாதிப்பு ஃ சம்பவம் நடைபெற்ற திகதி...................................  

5.    பாதிப்பு ஃ சம்பவம் நடைபெற்ற இடம் .............................................. ..............................................................................................  

6.    அச்சம்பவத்தில் எத்தனைபேர் பாதிக்கப்பட்டனர்? (பொருத்தமற்றதெனின் கீறிவிடவும்).............................................................................
7.    பாதிக்கப்பட்டவர்களின் விபரம் தெரியுமெனின் அவர்களதுவிபரங்கள்     (பாதிக்கப்பட்டவர்கள் பலரதுவிபரங்கள் தெரிந்திருப்பின் மேலதிகதாளில் விபரங்களை இணைக்கவும்
7.1.    முழுப்பெயர்    :- .............................................
7.2.    தந்தையின் முழுப் பெயர்:- ..............................................
7.3.    தேசிய இனம்    :-................................................
7.4.    பால் (ஆண் ஃபெண்):- ..............................................
7.5.    சமயம்        :-................................................
7.6.    வயது        :-.................................................
7.7.    பிறந்ததிகதி    :-.................................................
7.8.    முகவரி;        :-................................................
7.9.    கிராமசேவகர் பிரிவு:-................................................
7.10.    திருமணமானவரா:-.................................................
7.11.    கற்பமானவரா? (ஆம்ஃஇல்லை):-...................................

8.  அச்சம்பவத்தில் எவ்வளவுசொத்துக்கள் அழிக்கப்பட்டன?     (பொருத்தமற்றதெனின் கீறிவிடவும்)  
...............................................................................................................

9.    விமானக்குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டிருப்பின் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதுகொத்துக்குண்டா? (தெரியாவிடின் தெரியாதெனக் குறிப்பிடவும்) .............................................................................................  

10.    செல்ஃ விமானக் குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டிருப்பின் பாதிக்கப்பட்டவர்கள் எரிகாயங்களுக்கு உட்பட்டிருந்தனரா?............................................

11.    ஆம் எனின் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது இரசாயனக் குண்டா என உங்களால் கூறமுடியுமா?..................................................................  

12.    பாதிக்கப்பட்டவர் கட்டத்தப்பட்டடோ சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டோ, சட்டத்திற்குப் புறம்பாக கொல்லப்பட்டோ இருப்பின்
அக்குற்றத்தைப் புரிந்தவர்ஃகள்      

இராணுவத்தினராஃ
கடற்படையினராஃ
விமானப்படையினராஃ
பொலீசாராஃ
துணைஇராணுவக் குழுவினரா வேறுதரப்பினரா?.......................................................................................
வேறுதரப்பினர் எனின் யார் எனக் குறிப்பிடவும்................................................


பாதிக்கப்பட்டவர்களின் விபரம்:
12.1.    முழுப்பெயர்    :- .............................................
12.2.    தந்தையின் முழுப் பெயர்:- ..............................................
12.3.    தேசிய இனம்    :-................................................
12.4.    பால் (ஆண் ஃபெண்):- ..............................................
12.5.    சமயம்        :-................................................
12.6.    வயது        :-.................................................
12.7.    பிறந்ததிகதி    :-.................................................
12.8.    முகவரி;        :-................................................
12.9.    கிராமசேவகர் பிரிவு:-................................................
12.10.    திருமணமானவரா:-.................................................
12.11.    கற்பமானவரா? (ஆம்ஃஇல்லை):-...................................


13.    குற்றத்தைப் புரிந்தவர்கள் சிவில் உடையிலா ஃ இராணுவ உடையிலா காணப்பட்டனர்? ...................................................................................................
14.    ஆயுதங்களை வைத்திருந்தனரா? எவ்வகையான ஆயுதங்களை வைத்திருந்தனர்? ..............................................................................................................................................
15.    வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதா? (ஆம் ஃஇல்லை)    .....................
ஆம் எனின் அதன் இலக்கம், நிறம் உள்ளிட்ட விபரம்  
......................................................................................................................................
16.    குற்றத்தைச் செய்தவர்களை அடையாளம் காணமுடியவில்லை எனின் யார் என்று சந்தேகிக்கின்றீர்கள்?  
................................................................................................
சந்தேகிப்பதற் கானகாரணம் என்ன?     ....................................................................................................................................
17.    பாதிக்கப்பட்டவருக்கு ஏற்கனவே மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததா? ஆம் எனின்    யாரால் எப்போது எவ்வாறு உள்ளிட்டவி பரங்களைகு றிப்பிடவும்    ..................................................................................................................
18.    சம்பவத்தினைநேரில் கண்டசாட்சியங்கள்  உண்;டா? ஆம் எனின் அச் சாட்சிகளின் பெயர் முகவரியைக் குறிப்பிடவும்  
................................................................................................................  
19.    பாதிப்புஃசம்பவம் தொடர்பில் முன்னர் எங்காவதுமுறைப்பாடுசெய்யப்பட்டுள்ளதா?  
..........................................................................................
20.    மேலுள்ளவினாவிற்கு ஆம் எனில் எத்தனையாம் திகதி எங்கு முறைப்பாடு செய்யப்பட்டது என குறிப்பிடவும்  
..........................................................................................................................
21.    மேலுள்ளவினாவிற்கு இல்லை எனில் ஏன் முறைப்பாடுசெய்யப்படவில்லை என குறிப்பிடவும்.......................................................................
22.    மேலதிகமாகஏதாவதுசொல்லவிரும்பின் இங்குவிபரமாககுறிப்பிடவும் (தேவைப்படின் மேலதிகதாளை இணைக்கவும்)  
..............................................................................................................ஆண்டு               கையொப்பம்
................................இலிருந்துஎன் முன்னிலையில்
கையொப்பமிட்டார்.
   என் முன்னிலையில்

சமாதானநீதவான் ஃ                                        
 சத்தியப்பிரமாண ஆணையாளர்.

(குறிப்பு:- 1948.02.04ம் திகதியிலிருந்து தற்போது வரை உங்களிற்கேற்பட்ட பாதிப்புக்களை அல்லது நீங்கள் நேரடியாகப் பார்த்த சம்பவங்களை விபரியுங்கள். முடிந்தால் சமாதானநீதவான் ஃசத்தியப்பிரமாண ஆணையாளர் ஒருவர் முன்னிலையில் கையொப்பமிட்டு அனுப்புங்கள். முடியாவிட்டால் நீங்கள் மட்டும் கையொப்பமிட்டுஅனுப்பலாம்)
 • தமிழ் சிறி likes this
  ninaivu-illam

  Socializer Widget By Blogger Yard
  SOCIALIZE IT →
  FOLLOW US →
  SHARE IT →

  0 comments:

  Post a Comment