பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, September 28, 2014

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - டாக்டர் சங்கர சரவணன்

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - டாக்டர் சங்கர சரவணன்; ரூ.195; பக்.480; விகடன் பிரசுரம், சென்னை -2; 044-4263 4283.

பொது அறிவுக் களஞ்சியம் வரிசையில் விகடன் பிரசுரம் வெளியிடும் மூன்றாவது நூல். பள்ளிகளில் நாம் அனைவரும் படித்த ஒரு பாடத்தை மீண்டும் ஏன் புத்தக வடிவில் படிக்க வேண்டும் என்ற கேள்விக்கு புத்தகத்தின் முகப்பிலேயே விடை இருக்கிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு தயாராவோருக்காக இந்தப் புத்தகம் பிரத்யேகமாக வெளியிடப்பட்டுள்ளது. யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் இதிலிருந்து கேட்கப்படும் கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு 25 அலகுகளில் இந்தப் புத்தகம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும், விடுதலைப் போராட்டமும் என்ற பாடத்தை அணுகுகிறது. 1995 முதல் 2013 வரை ஐ.ஏ.எஸ். முதல்கட்டத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் இறங்கு வரிசையில் பாடந்தோறும் தரப்பட்டுள்ளன. கேள்வி, பதில்கள் ஆங்கிலம், தமிழ் இருமொழிகளிலும் தந்து, விளக்கங்கள் தமிழ் மொழியிலும் தரப்பட்டுள்ளன.
விடுதலைப் போரில் தமிழகம் பற்றிய கேள்விகள், இந்துத்வா, சூரத் காங்கிரஸ் மாநாடு, திப்பு சுல்தான் பற்றிய மதிப்பீடு, பட்டய சட்டம் 1833, முதல் இந்திய சுதந்திரப் போரில் இவர்கள், சூரத் காங்கிரஸ் மாநாடு, தேசபக்த புரட்சியாளர்கள் - சில தேர்வு குறிப்புகள் ஆகிய தலைப்புகளில் பல தகவல்கள் மிகவும் நேர்த்தியாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் இந்தப் புத்தகத்தை நிச்சயம் படிக்கலாம்.

நன்றி :- தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment