பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, September 28, 2014

மகான் ஷைகு சாஅதி - ஆர்.பி.எம். கனி;

இஸ்லாமிய வரலாற்றிலே எத்தனையோ அறிஞர்கள் தங்கள் ஞானத்தால் இந்த உலகிற்கு ஒளியூட்டியுள்ளனர். உதாரணமாக இஸ்லாத்தில் பற்று கொண்ட பக்தாத்தை சார்ந்த முகைதீன் அப்துல்காதர் ஜிலானி, உமர் கய்யாம், இந்தியாவில் புகழ்பெற்ற சூபி ஞானி நிஜாமுதீன்
அவுலியா போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
அந்த வரிசையில் ஷைகு சாஅதி 12 ஆம் நூற்றாண்டில் பாரசீகத்தில் பிறந்த ஒப்பற்ற நீதி அறிஞர், கவிஞரான அவர் கஜல் கவிதைகளில் உள்ள உணர்ச்சி பிரவாகத்தை விட நீதி வழங்குவதில் தொலைநோக்கு சிந்தையாளராகவும், நீதி உணர்வு மிக்கவராகவும் திகழ்ந்திருக்கிறார்.
ஒரு பக்கீர் நூறு தவறுகள் செய்தாலும் அவரோடு இருப்பவர்கள் அதனைக் கவனிப்பதில்லை. ஆனால் ஓர் அரசன் முட்டாள்தனமான வார்த்தை ஒன்றைச் சொன்
னால் அடுத்த கணமே அது பிற நாடுகளில் எதிரொலிக்கும் என்கிறார். ஓர் உண்மையைச் சொல்லிவிட்டு கஷ்டப்படுவது, ஒரு பொய்யினை சொல்லிவிட்டு விடுதலை பெறுவதைவிட மேலானது போன்ற உன்னதமான கருத்துக்களை சாஅதி குலிஸ்தான், போஸ்தான் ஆகிய நூல்களில் பதிவு செய்திருக்கிறார். மேற்கண்ட இரு புத்தகங்களின் தாத்பரியங்களை அழகு தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் நூல் ஆசிரியர்.
மகான் ஷைகு சாஅதி - ஆர்.பி.எம். கனி; பக் 184; ரூ. 100; நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை; 044-2834 3385.
நன்றி := தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment