பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, September 7, 2014

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான சம்பந்தர், நடராஜர் சிலைகளைத் தேடும் போலீஸார்


ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான சம்பந்தர், நடராஜர் சிலைகளை போலீஸார் தேடி வருகின்றனர். அந்தச் சிலைகள் குறித்து எவரேனும் தகவல் அளித்தால் ரூ. 25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று தமிழக காவல்துறையின் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தப் பிரிவு வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள கோயில் ஒன்றிலிருந்து திருடப்பட்ட நடராஜர் சிலையும், சம்பந்தர் சிலையும் வெளிநாட்டில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருப்பதாகவும், அந்த சிலை இங்குள்ள சிலை கடத்தல் கும்பலிடம் இருந்து பெருந்தொகைக்கு வாங்கப்பட்டிருப்பதாகவும் நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது.
இதில், நடராஜர் சிலை 900 ஆண்டு பழமையானது, சம்பந்தர் சிலை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இரு சிலைகளும் உலோகத்தினால் ஆனது.
இந்த இரு சிலைகள் திருட்டு தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், போலீஸாருக்கு இதுவரை தகவல் அளிக்கவில்லை.
எனவே சிலை குறித்து தகவல் தெரிந்தோர், காவல் துறை துணைத் தலைவர், சிலை திருட்டு தடுப்பு சி.ஐ.டி. பிரிவு, சி -48, 3 ஆவது தளம், தமிழ்நாடு வீட்டு வசதி வளாகம், 2 ஆவது அவென்யூ, அண்ணா நகர், சென்னை-40 என்ற முகவரிக்கு தகவல் அளிக்கலாம்.
மேலும் 96000 43442, 98405 84729 ஆகிய செல்போன் எண்களுக்கோ அல்லது 044-2622 0332 என்ற தொலைபேசி எண்ணுக்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் விவரங்கள் பாதுகாக்கப்படும்.
தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நன்றி : தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment