பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Friday, September 26, 2014

இன்று முதல் வாபஸ்


புதுடெல்லி, செப்.26:  இந்தியாவின் உறுதியான நிலையை தொடர்ந்தும், அந்நாட்டுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்தும் லடாக் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவம் இன்று முதல் விலக்கிக் கொள்ளப்பட்டு வருகிறது. 

இது இந்தியாவுக்கு கிடைத்த மகத்தான சாதனை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
.
சீன அதிபர் அண்மையில் இந்தியா வந்த போது சீன ராணுவத்தை சேர்ந்த 1000 வீரர்கள் காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உள்ள ஷýமர் பகுதியில் ஊடுருவினர். இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவமும் அங்கு குவிக்கப் பட்டது. இரு நாடுகளின் ராணுவமும் எதிர் எதிரே அணிவகுத்து நின்ற நிலையால் பதட்டம் ஏற்பட்டது. கடந்த காலங்களைப்போல் இல்லாமல் பிரதமரின் உறுதியான உத்தரவை தொடர்ந்து இந்திய ராணுவம் உறுதியோடு சீன ராணுவத்தை எதிர்த்தது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், நியூ யார்க் நகரில் இந்திய பத்திரிகையாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

இந்தியா-சீனா எல்லையில் உள்ள லடாக்கின் சுமார் பகுதியில் நிலவி வரும் பதற்ற நிலை தொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி-யுடன் பேசியது என்ன? என்பது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் விவரித்த சுஷ்மா சுவராஜ் கூறியதா வது:-

சீன அதிபரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்திய வருகை, நல்ல பலனையளித்திருந்த நிலையில், அவரது பயணத்தின்போது எல்லையில் நிகழ்ந்த சம்பவமானது, அந்தப் பலனின் மீது ஒரு நிழலைப் படியச் செய்துவிட்டது.

இந்தியா-சீனா இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மூலம் எல்லையில் நிலவிவந்த பதற்றநிலை தீர்க்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். எல்லைப்பகுதியில் இருந்து இரு நாடுகளும் படைகளை விலக்கிக் கொள்வதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இது மகத்தான சாதனை என்று அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் துரதிருஷ்டமாக ஏற்பட்ட நிலை மாறத் தொடங்கி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீன ராணுவம் இன்று முதல் தனது படைகளை விலக்கிக்கொள்ள ஆரம்பித்துள்ளது. 30-ம் தேதிக்குள் முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்படும்.

அதேபோல இந்திய ராணுவமும் தனது நிலைக்கு திரும்பும் என்றார்.


நன்றி :- மாலைச் சுடர்

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment