பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Friday, September 26, 2014

மும்முனையமாக மாற்ற ஆய்வு



.

சென்னை, செப் 26: ராயபுரம் ரெயில் நிலையத்தை 3-வது முனையமாக மாற்ற மத்திய ரெயில்வே அமைச்சர் சதானந்த கவுடா இன்று காலை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு விரைவில் அதன் பணிகளுக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
.
ராயபுரம் ரெயில் நிலையத்தை 3-வது முனையமாக மாற்றப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று காலை 6.30 மணிக்கு ராயபுரம் ரெயல்நிலையத்துக்கு மத்திய ரெயில்வே அமைச்சர் சதானந்த கவுடா ஆய்வு மேற்கொள்ள வந்தார்.

அவருடன் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் வடசென்னை எம்பி டி.ஜி.வெங்கடேஷ்பாபு, மேயர் சைதை துரைசாமி, தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை செந்தரராஜன் உள்ளிட்டடோர் பங்கேற்றனர். பின்னர் ரெயில் நிலைய அதிகாரிகளுடன்  மத்திய அமைச்சர்  சுமார் 1 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் :மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோளுக்கு இணங்க, ராயபுரம் ரெயில் நிலையத்தை 3-வது முனையமாக மாற்ற திட்டம் மேற்கொள்ளப்பட்டது.  நான் அமைச்சர் பதவி ஏற்றுக் கொண்ட பிறகு முதல் முறையாக சென்னை வந்துள்ளேன்.

மேலும் சென்னை ரெயில் நிலையத்தை 3-வது முனையமாக மாற்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விரைவில் இதன் பணிகள்டஆரம்பமாகும். மேலும் இது குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்பும் நடத்தப்படும். இதற்கான நிலம் கையப்படுத்தும் வேலைக்காக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க திட்டமிட்டுளோம்.

மேலும் முதல்வரின் ஆலோசனையின் பேரில் பணிகள் நிறைவேற்றப்படுவதற்கான நிலங்கள் கையகப்படுத்தும் போது , மாற்று இடம் கொடுக்க  முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றும் விரைவில்  பணிகள் துவங்கப்படும்.

இதற்கான நடிவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பேசினார்


நன்றி : மாலைச் சுடர்

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment