பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Friday, September 5, 2014

வெளிக்கரு - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - கோயில் கட்டிடக் கலையியல்


வெளிக்கரு

தமிழ் இளைஞர்களின் கலைப்படிப்பும் குலைத் துடிப்பும்

ஆசிரியர்

பெருந்தச்சன்

தென்னன் மெய்ம்மன்

வெளியீடு

மாநாகன் பதிப்பகம்

1/170 , வடக்கு நான்காவது தெரு, 

கல்லல், சிவகங்கை மாவட்டம்

பொருளடக்கம்

1.. முகப்பு 

1.1 திரு நினைவு, 

1.2 வழித்தடம், 

1.3 முன்னோர் வணக்கம்,

1.4 அறிமுக உரை , 

1.5 வரை படங்கள், 

1.6 சான்றுரை, 

1.7 நூல் முயற்சியும் வேண்டுகோளும், 

1.8 வாழ்த்துரை, 

1.9 அணிந்துரை ,

 1. 10 முறையீடு , 

1. 11நன்றியுரை

2. முன்றில்

 2.1தமிழர் மரபில் கட்டடக் கலைஞ்சர்களின் கொள்கை நிலைப்பாடு - மாயப் பறவைப் பார்வை

3.. முற்றம்

3.1.மையத்தின் முதல் வினை, 

3.2 வெளிப் புள்ளீயே கலைகளின் தேடல், 

3.3 கறையான் புற்றும் கட்டடக் கலைகளின் கோட்பாடுகளும் ,

3. 4 .மையத் தூண் , 

3. 5. வெளிக் கரு, 

3.6 மாச் சுழியம் ‘தெந்நா”, 

3.7 வேர்ப் பொருள், 

3. 8 மையம், திசை, அளவு கோல் புதிய வரையறைகள் ஓர் அறிமுகம்

4.சுற்றுக் கட்டு

4. 1. தமிழர் மரபுக் கட்டடக் கலையின் சிறப்புக் கூறுகள்

4.2  தமிழ் மண்ணில் மரபுக் கலைப் பயிற்சிகள்

4.3 வடிவப் பருக்கை

4. 4 தற்காலக் கட்டடக் கலைஞ்சர்களுடன் உறவும் உராய்சும்

4.5 திருப்பணித்துறை ஒன்று தேவை

4. 6 அரசுத் தச்சனைப் பார்

4.7 சுருக்கு எல்லை வரைக

4.8 உச்சம் உண்டு ! ஆயினும் நீ என் ஆசான் !

5. காவல்

5.1. கட்டுவது சட்ட மன்றமா ?

5.2 பட்டி பல்கப் பல்க ! 

      பால் பானை பொங்கப் பொங்க !;

5.3 தென்புலக் காவல் !

5.6. அழகார்ந்த செந்தமிழே

5.7 கோயில் கட்டடக் கலைப் படிப்பு

5. 6 தமிழ்த் திறம் சிறக்கும்

6.பெருங்கேள்வி

6.1 தேசியப் பாதுகாப்புச் சட்டமும், மாநிலத் தனித்தன்மைக்கு அச்சுறுத்தலும்

6.2 சரிவுக்கு எதிர்ப் பாய்ச்சல்

6.3 ஒப்போலைக் குடிசை 

அரிய சொற்கள்

1.பெருந்தச்சன்

‘பெருந்தச்சன்’ என்ற சொல் தமிழர் மரபில் மதிக்கப்படுகிற ஒரு சொல் ஆகும். எக்காட்ட்டூரு கோன் பெருந்தச்சன் என்ற பெயர் பிள்ளையார்பட்டி குடைவரையில் பொறிக்கப்பட்டுள்ளது. கேவாத பெருந்தச்சன் என்ற பெயர் மாமல்லபுரம் அருகில் உள்ள வீரப்பன் குதிரைத் தொட்டி என்ற இயற்கைப் பாறை விளிம்பில் தரையோடு தரையாகக்  கிழக்குக் கடற்சாலை ஓரமாகக் கேட்பாரற்றுக் கிடக்கிறது. 

குஞ்சர மல்லன் ஆன ராஜராஜப் பெருந்தச்சன் என்ற பெயர் தஞ்சைப் பெரிய புற மதிலின் வடமேற்குப் பகுதியில் உள்ள நீண்ட கல்வெட்டின் ஊடே இடம் பெற்றுள்ளது.

தச்சன் என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் பெரு வழக்குப் பெற்ரிருந்தமைக்கு ஏராளமான இருந்தும் பெருந்தச்சன் என்ற சொல்லுக்கு அரிய பதிவுகள் இருந்தும் தமிழர் வாழும் பெரு நிலப்பரப்பில் ‘ஸ்தபதி” என்ற சொல் எங்ஙனம் பரப்பப் பெற்றது என்பது கடுத்து நோக்கத்தக்கது.

2.தாய்ச் சுவர்ப் புறவாய் நூல்.

சுமைதாங்கும் புறச்சுவரை தாய்ச்சுவர் என்று அழைப்பது வழக்கு. சுமை  தாங்காத மதலைச் சுவர் மதில் சுவர் ஆகும். தாய்ச் சுவர்ப் புறவாய் நூல் என்பது கால்புறவாய் நூல் என்று அழைக்கப்படும். தமிழர் மரபில் பெட்டிப்பு போன்ற கட்டட வடிவங்க்கள் இல்லை.மாறாக சுவர் ஒழுங்குக்கு வெளியில் விளையாடும் வரி வருக்கைகள் உண்டு, அவற்றைப் புற அகலமாகக் கொள்வது இல்லை.கலர்ப்புற ஒழுங்கை மட்டுமே அளவாகக் கொண்டு விரிக்கவும் மடக்கவும் பங்கிடவும் ப்யன்படுத்திக் கொண்டு புறவெளிப்பாடுகளைக் களத்தி என்றும், நாவடை என்றுமளந்து நிறுத்தும் நுட்பமேதமிழ்க் கட்டடக்கலையினை விளங்கிக் கொள்ள நாம் அறிந்துகொள்லும்ம் முதல் தொழில் நுட்பமாகும்.

3. மேய்ச்சற் பெருவெளி  .,

ஆடு மாடுகள் பார்வைக்கு மேய்ச்சல் பரப்பு தென்படுவது போல நமது துய்ப்புக் களமாகத் தோன்றும் பரந்த வெட்டவெளி.

4. முதிர் வசைவு 

பாவலர் ஏறு பெருஞ்சித்திரனாரின் சொல்லாக்கம் கனிச் சாற்று வரிகளில் மூத்த உணர்வின் முதிர்வசைவால் உள்ளணுக்கள் யாத்த வரிகளில் வரியிசையே பாட்டு என்று எழுதுகிறார். முதிர்வசைவின் பொள்ளி நகர்வே கலைவடிவங்களின் புற வளிம்பு.

முழுமையான ஒன்று அசைகிறபோது அதன் உச்சி அசைவது இல்லை. வடிவம் நிலை தடுமாறுவது இல்லை. இயல்பான இயக்கத்தின் இணக்கமான வஅர்மாற்றம் ஒன்று நிகழ்வதையே முதிர்வசைவு என்று தெளீயலாம்..

5.ஆய்ச்சல்

நொடித்தல், தடுமாறல், தரைப் பிடிப்பு இல்லாமல் ஏற்றி நிற்றல் போன்றவையே ஆய்ச்சல் எனப்படும். ஒரு சுமையின் ஆய்ச்சல் அடை கட்டப்படவில்லை என்றால்  அது நகராது; நகர்த்த முடியாது.  

6. தன்னைத் தளமாக்கி

தளமும் விளிம்பும் தானாகவே என்பதான கருத்தாக்கம்.நிழலை, வடுவைக் குறிப்பது ஆகும். எது அடித்தளமாக இறுதி செய்யப் படுகிறதோ அது விரிந்த விளிம்பு உடையதாகவும் இருக்கிறது என்பது கருதுகோள்.

 7. நீலத் திருமயன்

மயன் என்ற சொல் தமிழர் மரபில் ஒரு முன்னோடியின் பெயர்.அவன் ஒருவனே கூட ஒரு மரபை விதித்துக் கொடுத்திருப்பான் என்று கருத இடம் உள்ளது. இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இராவணனின் மாமனான மயனும், சிலம்பு குறிப்பிடும் மயனும்,  மெக்ஸிகோ மயனும், மயமதம் என்ற நூலின் ஆசிரியன் மயனும் வெவ்வேறு காலங்களின் புனைவுகலே. மயனை விசுவகருமன் என்று திரித்துக் கூறி கட்டிக் காத்தவனே காட்டியும் கொடுத்தான் என்று கூறுவாறும் உளர்.

8. பட்டப் பகலில் பாய் விரித்து

வெள்ளந்தியாகத் தொடங்குகிற ஏறு பொழுது நண்பகலாகி செவ்வந்தியாகி இறங்கு பொழுதாகிற செயலைக் குறீயீடாகப் பாகுபடுத்துகிற சொல்லாக்கம். முதற்பாடலில் தளமும் விளிம்புமாகக் கற்பிக்கப்பட்ட அடித்தள வடுவே இங்கு விரித்த பாயாகக் காட்டப்படுகிறது.

9. இட்ட சுடுகல் களம் பரப்பி

வார்த்த செங்கல் குறிப்பிட்ட முறையில் அடுக்கிக் கட்டப்படுவது போல பரப்பு திட்டமிடுதலைக் குறிக்கும் சொல்லாக்கம்.

10. கட்டக் கடையில் கால் நட்டி

கட்டடங்களின் மூலைகள் துளைகளின் பகுதிகளாகவே கருதப்படும். துளைகளை உள்ளீஈடாகக்  கொண்டுதான் தூண்கள் நாட்டப்படுவது உண்டு.

11. நட்ட நடுவில் நாண் ஏற்றி 

நடுவில் நாண் ஏற்றத்தான் முடியும். தூண் ஏற்ற முடியாது, 

12. தட்டத் தகடு தளம் நிறைய

அடிப்பரப்பு பருவ வெடுத்து கூர்ப்பாகி மணி முகமடைத்த பிறகு அடுத்த அடித்தளம் விரந்து உருவாகிவிடும்.

13.வட்ட வறுமையில் புடைப்பீந்த

வாட்டும் வறுமையுற்று வாழ்வின் புடைப்புப் பெறும் அருட் செல்வநிலையைக் குறிப்பதாகும்.

14.வீங்கீய திண்ணை 

கால்புறவாய் ஒழுங்கில் இருந்து நீண்டு நிழல்தரும் கூரைப்பகுதி.

15. நீங்கிய கொடுங்கை

கால் ஒழுங்கில் இருந்து நீண்டு நிழல்தரும் கூரைப்பகுதி.

16. ஓடு கருக்கு

தொடர்ச்சியாக வீசி வரையப்படும் கொடி போன்ற வடிவே ஓடுகருக்கு ஆகும்.  ஒவ்வொரு பொருத்தும் இருபுற வீச்சுக்குத் தொடக்கக் களமாக அமையும்.

17. கோட்டுக் களிற்றை 

பாவலர் ஏறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாற்ரு வரி, பழந்தமிழ் இலக்கியங்களின் மதிப்பு மிக்க தூய்மைப் பண்புள்ள 26,000 மூல வரிகளையும் வயப்படுத்தி தமிழினத்தின் அழகியல் முன்னோடிஒயாக நிமிர்ந்தெழுந்த  ஏறு பெருஞ்சித்திரனார். அவரது படைப்புகளைப் படித்துவிட்டு கழக இலக்கியங்களைப் படிப்பவர்கள் பெருஞ்சித்திரன் எவ்வளவு கால இடைவெளிகட்கு இடையில் கால் பெருவிரல் ஊன்றிப் பாவி நடையிடுகிறார் என்பதனை விளங்கிக் கொள்வர்.

”கள்விலையாட்டி மறுப்புப் பொறா மறவன் கைவில் ஏந்திப் புள்ளும் வ்ழி தொடரப் புல்லார் நிரை கருதிப் போங்காலை” என்ற சிலப்பதிகார வேட்டுவ வரிகளைப் படிப்போர் “கோட்டுக் களிற்றை முகத்தடக்கி” என்ற பாடலைச் சேர்த்துப் படிக்கவே நெகிழ்ந்து போவர்.

18.புரண்டி 

புறம்படி என்ற காவல் விளிம்பு , வேலு நாச்சியாரின் சிவகங்கையைத் தலைமை இடமாகக் கொண்டு நரிக்குடியில் பிறந்த இரண்டு குடியானவர் ஏனாதிகளாகி - மன்னர்களாகி அரசாண்ட காலம். சில சிற்றூர்கள் சிதறல்களாக தமிழ்க் குடிகளில் வரலாற்றுப் பதிவுளைத் தாங்கியுள்ளன. அவற்றுள் ஒன்று புரண்டி எனும் அங்குடிச் சிற்றூர்.

19. ஏனாதிக் கோட்டை

சேனாதிபதி என்ற வடசொல்லின் தமிழ்த் திரிபாக ஏனாதி வழங்கப்பட்டிருக்கலாம். வைகைக் கரையில் உள்ள ஏனாதிக் கோட்டை எனும் ஊரைப் பிரிந்து காட்டு வழிஒயே பதுங்கி நடந்து ஆடுகளை ஓட்டிக் கொண்டு  மறுபுறம் வந்து தங்கியதாகச் செவிவழிச் செய்தி.ஏனாதிக் கோட்டையை நீங்கும்போது குலக் கோயிலில் இருந்து பிடிமண் அள்ளி வருகையில் காலத் தாவாக வந்தபூசாரியைக் கொன்று விட்டு ஓடி வந்ததாகவும், முரடர்களாஹவே சில காலம் வாழ்ந்து கள்ளத் தோணிகளாக கொழும்பு சென்று 1950-களுக்கு முன்பாகவே ஒழித்துக் கொண்டு வந்து மூன்று தலைமுறைக கழிந்துவிட்ட குடிகளே புரண்டி சேர்வைக்காரர்கள். நேற்று வரையிலும் புரண்டியார் என்றே அழைக்கப்பட்டவர்கள். வந்த இடத்தில் பிடிமண் கோயில் எடுப்பித்தவர்கள். அது பிரம்மன் கோயிலாகிவிட்டது.

1976-ஆம் ஆண்டில் ஒரு நாள் கல்லல் ஊரைச் சேர்ந்த நகரத்தார் ஒருவர் மாமல்லபுரத்துக்கு வந்து சிற்பக் கலைப் பயிற்சி மையத்தின் வாசலில் மகிழுந்தில் இருந்துகொண்டு ஒரு கதவைத் மட்டும் திறந்து கொண்டு புரண்டியார் மகன் படிக்கிறானாமே கூப்பிடுங்கள் அவனை என்று ஊழியரைஒப் பணித்ததும் அவர் எனது வகுப்பறைக்குள் வந்து அப்படியே திருப்பிச் சொல்லியதும் மாணவர்கள் உட்பட அனைவரும் சிரித்ததும், நான் மட்டும் வெளியில் வந்து காரில் இருந்து இறங்காத உங்களை நான் வந்து பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டுத் திரும்பியதாகவும் நினைவு

20. கம்பன் அடிப்பொடி சா.கனேசனார்.. 

விடுதலைப் போராட்ட வீரர்; காரைக்குடியில் தமிழ்த்தாய்க் கோயில் அமைத்துக் கொண்டும், கம்பன் கழகம் அமைத்துக் கொண்டும், கம்பன் கற்பகம் என்ற மழலைப் பள்ளி நடத்திக் கொண்டும், மேல் சட்டைஒ அணியாத வெற்றுடலோடு தவமுனியாக வாழ்ந்த நகரத்தார் குடிப் பேரறிஞர்.

21.திருவாளர் கணபதியார் :

எனது தந்தையார் சித்திர மண்டபம் அமைத்துக் கொடுத்தவர்..காந்தி மண்டபம் அமைத்துத் தந்தவர். அவரது பெயருக்குப் பின்னே ஆசாரி என்றே போட்டுக் கொள்வார். அவரை ஸ்தபதி என்று போட்டுக் கொள்ளச் சொன்னவர் கம்பன் அடிப் பொடி சா.கனேசனார்ட் தான். என்று 1968 உலகத் தமிழ் நாட்டு மலரான கையேடு ர்னும் பதிப்பில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டவர் திரு.கணபதி.

தமிழ்க்குடியில் பிறந்த மூத்த ஆச்சாரியர்களை அழைத்துப் போற்றி அவர்தம் பட்டறிவைப் பதிவு செய்து தந்திருப்பாரேயானால் தமிழ் உலகம் அவரை உவந்து ஏத்தும். ஆனால் அவர் எல்லா அரசு வாய்ப்புக்களையும் ப்யன்படுத்தியும்கூட அடுத்த தலைமுறை தலைநிமிர. ஏதும் செய்தாரில்லை! ஆங்கில ஆய்வு நூல்களையும் தேவநாகரிப் பதிப்புகளையும் பெரிதாய் நம்பி தவறான கருத்துக்களைப் பரப்பிவிட்டு ஒரு தலைமுறை துன்பப்படும்படி செய்துவிட்டார்.

வாஸ்து, ஸ்தபதி, பிரதிஸ்டை, ஆயாதி, நயோன் மீலனம்,சாதி, ஆகமம் அதற்காக வடமொழி என கோடாங்கித்னமான பாசாங்குகளையெல்லாம் வலிந்து பரப்பியவர்.

22. மாமல்லபுரம் சிற்பக் கலைப் பயிற்சி மையம்

1957-இல் சிற்பக் கலைப் பயிற்சி மையம் தொழில் துறையில் ( INDUSTRIES DEPARTMENT ) தொடங்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் சான்றிதழ் படிப்பு நடத்தப் பட்டது. 1978 - இல் தமிழ்நாடு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைப் பயிற்சி மையம் ( TAMILNADU INSTITUE OF ARCHITECTURE AND SCULPTURE ) 
என தொழில் நுட்பக் கல்வித்துறையின் கீழ் வளர்ந்தது. 2 + 3 பட்டயப் படிப்புக்கள் ( DIPLOMO - STATE BOARD OF TECHNICALEDUCATION ) நடத்தப்பட்டது. 1982 முதல் அரசினர் கட்டடக்கலை மட்டும் சிற்பக்கல்லூரி
( GOVT. COLLEGE OF ARCHITECTURE AND SCULPTURE ) எனப் பெயர் மாற்றம் செய்யப் செய்யப்பட்டு சென்னைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்டது. B.Sc., TEMPLE  ARCHITECTURE என்ற பட்டப் படிப்பும்,
 B.Sc., SCULPTURE என்ற பட்டப் படிப்பும் நடத்தப்பட்டன.

1991-இல் தொழில் நுட்பக் கல்வித்துறையிடமிருந்து கலை பண்பாட்டுத்துறைக்கு மாற்றப்பட்டது. தற்போது B>Tech TRADITAIONAL ARCHITECTURE  என்ற நான்கு ஆண்டு பட்டப் படிப்பும் B.F.A. நுண்கலைப் பட்டப் படிப்பும் நடத்தப்படுகின்றன.

23. நடுப்பொறுப்பு

நடுப்பொறுப்பு என்பது சுமை தாங்குவது அல்ல; சுமைதாங்கும் அமைப்பு முறையைக் காப்பது,

24. தொடர்பு உடையோர் தோள்

தமிழர் கொற்ற மரபு, வேற்றினக் குற்ற மரபுகளோடு உடன்பட மறுக்கும். யாரும் வற்புறுத்த வேண்டாம்.

எல்லாம் தெரிந்த எல்லாளர் வரிசையில் தமிழ்க் கலைஞ்சர் எவரும் எழ வேண்டாம். உச்சி முகட்டுக்கான மைய வெளியை தமிழுக்கு விட்டு விலகி கட்டளைக்கல் அமைத்துத் தூண்களாக நில்லுங்கள்.

ஒரு துறையிலும் ஊன்றாமலும் பிற துறைகளை ஒவ்வாமலும் முக்காடு இட்டே மாறாட்டுவது சிற்றினக் கயமை.

தொங்கு நூல் கொடி தொட்டுத் தொப்புள் கொடி ஈறாக. ஒருமுறை தச்சு விடும் உயிர்மை எடுப்பது செறிவுடைய வகைப்படுத்தப்பட்ட ஒற்றை வெளி வடிவு.

நுண்ணிதிற் கயிறிட்ட நூலறி புலவர் தெள்ளிதின் விளங்கிக் கொண்ட தோற்றம் அறியும் நுட்பமே தமிழ்க் க்ட்டடக் கலைஞ்சர்கள் மீண்டும் தேடும் கற்றை வெளிக்கரு.

அந்த முயற்சியில் எடுத்த கரு எடை கூடும் வேலையில் தொடர்புடையோர் தோள் தருக!

நாங்கள் தமிழர்கள் என்று முன்வரும் முதல்நிலை அரிமாக்கள் அணி வகுக்க ! நாங்களும் தமிழர்களே என ஒட்ட வரும் இரண்டாம் நிலையினர் ஒரு அடி தள்லி வருக. முந்திடின் மூளியாவீர். என்பதும் அறிக.

25. தொடர்ப்பாடு

துறவு

 மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்
 உற்றார்க்கு உடம்பும் மிகை - திருக்குறள். - 345 .

உறுப்பு நலன் அழிதல்

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து. - திருக்குறள் - 1238

26. தமிழக அரசு முத்திரைக் கோபுரம்

சென்னையில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரியின் மேனாள் முதல்வர் திரு. கிருட்டினராவ் என்பவர் வடிவமைத்ததுவே தமிழக அரசின் கோபுர முத்திரை. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்தைப் போல் இருக்க வேண்டும் என்று கருதி அதுபோல வடதொய்வு எனப்படும் பக்கவாட்டுக் கரவு கொண்டதாக அமைத்திருக்கிறார். அதில் படிமைகள் இடம் பெறாமையினால் அதனைத் திருவில்லிபுத்த்தூர் கோபுரம் என்று திருத்திக் கூறியவர் மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கல்லூரியின் மேனாள் முதல்வர் திரு கணபதியார்.

27.அன்னை ஒருத்தி,

அன்னை ஒருத்தி மறத்தியன்றோ நமை ஆர்க்கவள் பெற்ரெடுத்தாள் ? -கனிச்சாறு.

28.வரைபடங்கள்

இருவேறு நிலைத் தொடக்கம் விடை தேடும் வீச்சு

29. ஒய்யாரத்தூண்

நெளிந்தும் நிலைமாறாப் பெண் விஷயம்

30. வடிவப் பருக்கை

வடிவங்களின் அழகார்ந்த இனக் கட்டுமானக் கூறு.

31. கோமுகை

நீர் விழும் புறத் துளைத் தூம்பு

32. திண்ணை

தரைக்கு மேல் சுவர் ஒழுங்குக்கு வெளியில் புடைத்து நிற்கும்.

33.சுவர் 

சுவன்று எழும் தீ நாக்கு போன்றது

34. உத்தரம்

இரு புறங்களிலும் சுமையைப் பகிர்ந்துதரும் கிடைமட்டம்

35. கன்னக்கூடு

மூலைத் துளைக் கூடு

36. வேதிகை

சுற்று வேலி

37. எழுதகம்

சுவருக்கு மேலும் சுவலும் சுற்று உறுப்பு

38. புறத்தி

நெற்றிக்கு எதிச்சொல் புறத்தி எனத் தொழிலாளர்கள் வழங்குகின்றனர்

39. தற்காலக் கட்டக் கலைஞர்கள்

சட்டவிளக்கம் பெற்ர எந்தச் சொல்லும் தற்காலக் கட்டடக் கலைஞர் என்று யாரையும் இதுவரை சுட்டிக் காட்டவில்லை.

40. வேள்விக் குழியில் வேற்றுவாய் காட்டும் கயவர்

இக்கால இளைஞர்கள் பலர் வேதக் கட்டடக் கலைஞர் என்று விளம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

41. வாஸ்து

அண்டப் புளுகு. பச்சை மோசடி.

42. புதுக்கி

பொதுப்பித்து என்ற பொருளில் கையாளப்படும்.

43.களத்தி

சுவர் ஒழுங்கிலிருந்தும் வெளிப்புறப்பாடூடைய வரி வருக்கைகளின் நீட்சி

44. நாவடை

களத்தியின் அற்றம் குறிக்கும் குத்துறுப்பு எல்லை

45. கையுறுவி

கைவடிவில் ஆன ஒரு இடைத் தாங்கல் உறுப்பு.

46. கரிப்பு,

தரைப்படத்தில் அடங்கிய கட்டடப் பகுதியின் அடக்க அளவு

47,ஏறுசாலை

கன்னக் கூடுகளுக்கு இடையில் அமையும் முகசாலையில் உயரமாக ஏற்றி அமைக்கப் படுகிறது.

48.தூக்கோடு

தூக்கு ஓடு அல்லது  உதடு எனப்படும். பண்டிகையின்கீழ் விளிம்பு.

49. மூங்கையர்

ஊமையர்

50. தாயைத் தெரிவு செய்யும் பிள்ளைப்பாடு

கலைகள் தமக்குரிய புரவலரைத் தேர்வு செய்து கொள்ளும் உரிமை.

51. நோயர் ஊர்தி அரசியல்

சாதி மத முரண்பாடுககெளல்லாம் அப்படி அப்படியே இருக்கட்டும். நாங்கள் சங்கு ஊதிக்கொண்டே நுழந்து நுழைந்து செல்வோம் என்று அறிவுரை கூறும் கலைஞரின் அரசியல் கோட்பாடு.,

குறிப்பு: 

தொடர் விளக்கங்கள் பெருந்தச்சன் திங்கள் திதழில் வெளியாகும்.


Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment