பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, September 13, 2014

காஷ்மீருக்குவிரைந்து உதவ இதுவே தருணம்!வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு – காஷ்மீரில், குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். அந்த மாநிலமே பேரழிவைச் சந்தித்துள்ளது. குழந்தைகள், பெண்கள், ஆடவர் என ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, இருப்பிடங்களைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களது எதிர்காலமே சூனியமாகிவிட்டது. நமது நினைவுக்கு தெரிந்தவரை, அந்த மாநிலம் இதுபோன்ற கடுந்துயருக்கு இதற்குமுன்பு இலக்கானதில்லை. கண்ணீர் வெள்ளத்தில் கலங்கி நிற்கிறது காஷ்மீர்!
தேசியப் பேரிடர் எனப் பிரதமர் அறிவித்துள்ள நிலையில், சக குடிமக்களின் துயரத்தைப் போக்க வேண்டியது இந்தியர் அனைவரின் கடமை ஆகும். இந்தப் பணியில் நீங்கள் எளிதில் பங்கேற்கும் வகையில், “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் சார்பில் ரூ.2.50 லட்சத்தை தொடக்க நிதியாக வழங்கி, “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் காஷ்மீர் நிவாரண நிதி’யைத் தொடங்கியுள்ளோம். இதில் கீழ்க்காணும் 3 வழிமுறைகளில் ஒன்றின் மூலம் உங்கள் பங்களிப்பை வழங்கலாம்.
  • THE NEW INDIAN EXPRESS KASHMIR RELIEF FUND‘ என்ற பெயரில், நிதிக்கான காசோலைகளை, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஏதாவதொரு பதிப்பு மைய அலுவலகத்தில் வழங்கலாம்.
  • ரொக்கப் பணமாக வழங்க விரும்புவோர், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஏதாவதொரு அலுவலகத்தில் வழங்கி, அதற்கான ரசீதை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம்.
  • ஆன்லைன் மூலம் நிதியளிக்க விரும்புபவர்கள், “THE NEW INDIAN EXPRESS KASHMIR RELIEF FUND‘ என்ற பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள நடப்புக் கணக்கு எண்.6260119197-இல் நேரடியாகச் செலுத்தலாம்.
வங்கிக்கான  SWIFT-CODE:IDIBINBBPAD.      /   IFSC CODE:IDIB000P001.
ஆன்லைனில் பணம் செலுத்தியவர்கள்,அதுதொடர்பான விவரங்களை,kashmirrelieffund@newindianexpress.com அனுப்பலாம்.
நிதியளித்த அனைவரது பெயர்களும், நாளேட்டில் வெளியிடப்படும். இந்த நிவாரணத் தொகை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் துயரைப் போக்குவதற்கான பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் ஒப்படைக்கப்படும்.
காஷ்மீர், துயரத்தில் வாடுகிறது.அதற்கு உதவ வேண்டியது நமது கடமை.
மனோஜ் குமார் சொந்தாலியா,
தலைவர் & நிர்வாக இயக்குநர்
 இதுவே தருணம்!
நன்றி : தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment