பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, September 8, 2014

நான் ஏன் பிறந்தேன்? - எம்.ஜி.ஆர்.


ஆனந்தவிகடனில் எம்.ஜி.ஆர். எழுதிய தொடரை நூலாக்கி, அரிய படங்களையும் சேர்த்து இரு தொகுதிகளாக வெளியிட்டிருப்பது சிறப்பு. இத்தொடர் எழுதுவது ஏன் என்பதை எம்.ஜி.ஆர். விளக்குவதிலிருந்தே விறுவிறுப்பு தொடங்குகிறது.

தனக்கு உதவிய குடியிருந்த வீட்டின் உரிமையாளர் ஏ.வி.ராமன் போன்றோரை அவர் விவரிப்பதைப் படிக்கும்போது அட... இப்படியும் நல்ல மனிதர்கள் இருந்துள்ளார்களே என்ற வியப்பே ஏற்படுகிறது. இதைப்போல மனிதர்கள் பலரை நூலெங்கும் காண முடிகிறது.
"திருடாதே' படத்தில் தன்னை முன்னிலைப்படுத்தி திட்டமிடப்பட்ட விஷயங்கள் அனைத்துமே தனக்கு எதிராக மாறியதையும், அச் சூழலில் தான் நடந்துகொண்ட விதத்தையும் எம்.ஜி.ஆர். விவரித்திருப்பது வாழ்க்கைப் பாதையில் போராடும் அனைவருக்கும் பாடம்.
திரைப்படம், அரசியல் என அவர் எதிர்கொண்ட மனிதர்கள், அவர்களால் ஏற்பட்ட பாதிப்பு, உதவி, அவமானம், புகழ், பொருள், தன்னிடமிருந்த செருக்கு, விரக்தி, எதிர்ப்பு, அன்பு, பாசம், மோசம், சோதனை, அதை முறியடித்து பெற்ற சாதனை என வாழ்வின் அத்தனை கோணங்களையும் மிக எளிய முறையில் யாருக்கும் புரியும் வகையில் எழுதியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
மொத்தத்தில் 134 தலைப்புகளில் எம்.ஜி.ஆர். விவரித்திருக்கும் சம்பவங்கள், கருத்துகள் அனைத்தும் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக்கூடாது என்பதை மிகச்சிறப்பாக விளக்கியிருக்கும் அற்புதமான நூல்.

First Published : 31 August 2014 11:40 PM IST
நான் ஏன் பிறந்தேன்? - எம்.ஜி.ஆர்.; பக்.1488 (இரு பாகங்கள்); ரூ.500; கண்ண தாசன் பதிப்பகம், சென்னை-17; )044- 2433 2682.

நன்றி : தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment