பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, September 8, 2014

நெட்வொர்க் தொழில்நுட்பம் - மு.சிவலிங்கம்





இன்று இணையம் இல்லாமல் எந்தப் பணியும் நடவாது என்ற நிலை. இணையத்தைப் பிணைக்கும் பிணையம் அதன் ஆணி வேர். அடிநாதம். பிணையம் என்ற நெட்வொர்க்கிங் இல்லாமல் இணையம் சாத்தியமில்லை என்பதை, இந்த நூலைப் படிக்கும்போது உணரலாம். இந்த நூல் பிணையத்தைப் பற்றிய முன்னோட்டத்துடன் தொடங்குகிறது. பிணையத்தின் பல்வேறு நிலைகளையும் பல துறைகளில் அதன் பயன்பாட்டையும் அதனைப் பராமரித்துப் பாதுகாக்கும் மேலாண்மையையும் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைக்கிறது. 9 அத்யாயங்களில் நெட்வொர்க் தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களையும் விளக்கியுள்ளார் நூலாசிரியர். இன்று நாம் அறிவியல் தமிழை வளர்த்தெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். நெட்வொர்க் என்பதற்கு பிணையம் என்ற கலைச் சொல்லாட்சியுடன் அறிவியல் தமிழைப் புகுத்த முனையும் இந்நூலில், ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் சற்றே அயர்ச்சியைத் தந்தாலும், நெட்வொர்க்கின் தன்மைகளை நன்றாகப் புரிந்து கொள்ள தமிழ் விளக்கம் எளிமையாக அமைந்துள்ளது சிறப்பு. பயன்பாட்டு அடுக்கு (அப்ளிகேஷன் லேயர்), போக்குவரத்து அடுக்கு (ட்ரான்ஸ்போர்ட் லேயர்), பிணைய அடுக்கு (நெட்வொர்க் லேயர்), தரவுத் தொடுப்பு அடுக்கு (டேடா லிங்க் லேயர்), பருநிலை அடுக்கு (பிஸிகல் லேயர்), பல்லூடகப் பிணையங்கள் (மல்டி மீடியா நெட்வர்க்ஸ்), பிணையப் பாதுகாப்பு (நெட்வொர்க் செக்யூரிடி) எனத் தேவையான கலைச்சொற்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. நூலாசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல், நெட்வொர்க் தொழில்நுட்பம் பற்றிப் புரிந்து கொள்ள இந்த நூலை மட்டும் படித்தால் போதும்.

நெட்வொர்க் தொழில்நுட்பம்
By மு.சிவலிங்கம்
First Published : 31 August 2014 11:41 PM IST
நெட்வொர்க் தொழில்நுட்பம் - மு.சிவலிங்கம்; பக்.960; ரூ.550; பாரதி பகத் பதிப்பகம், கே-2, ராஜேந்திரா குடியிருப்பு, 11, பாபு ராஜேந்திரப் பிரசாத் முதல் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33.

நன்றி : தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment