பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Friday, September 26, 2014

பத்திரிகையாளர் க.கமலநாதன் காலமானார்

பத்திரிகையாளர் க.கமலநாதன் (48) சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார்.
மயிலாப்பூர், லோகநாதன் காலனியில் வசித்து வந்த கமலநாதன் உடல் நலக்குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலமானார்.
மூத்த பத்திரிகையாளர் சோ.கருணாநிதியின் மூத்த மகனான கமலநாதனுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக பத்திரிகையாளராகப் பணியாற்றி வந்த கமலநாதன், அதிர்ஷ்டம் பத்திரிகையில் சினிமா நிருபராகவும் தினபூமி நாளிதழில் தலைமை நிருபராகவும் பணியாற்றினார்.
இவரது இறுதிச் சடங்கு சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. தொடர்புக்கு: 86819 68515.
முதல்வர் இரங்கல்: மறைந்த கமலநாதனின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த கமலநாதனின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று முதல்வர் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

நன்றி :- தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment