பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, September 27, 2014

சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு 3 மணிக்கு வெளியாகிறது?



ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பரப்பன அஹ்ரகார கோர்ட் வளாகத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதற்காக இன்று காலை 8.30 மணியளவில் சென்னையில் இருந்து ஜெயலலிதா புறப்பட்டு சென்றார். தனி நிதிமன்ற நீதிபதி டி.ஹுன்கா இந்த தீர்ப்பை வழங்குகிறார்.

தீர்ப்பை அறிய  பரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,.தொண்டர்கள் குவிந்துள்ளனர். முதலில் தீர்ப்பு 1 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது.  இந்த நிலையில், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு 3 மணிக்குவெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. 

இதனிடையே, நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த ஜெயலலிதா அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார்., 2 நிமிடங்கள் சந்தித்து பேசிய அவர்  மீண்டும் நீதிமன்றத்துக்குள் சென்றதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

நன்றி :- தினத்தந்தி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment