பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, September 8, 2014

கபிலர் - ந.மு.வேங்கடசாமி நாட்டார்


குறிஞ்சித்திணை பாடுவதில் தலைசிறந்தவர் கபிலர். அதனால் இவர், "குறிஞ்சிக் கபிலர்' என்றே போற்றப்படுகிறார். கபிலரை பற்றிப் பலவாறாக ஆய்ந்து எழுதப்பட்டுள்ள இந்நூலில், குறிஞ்சிப் பாட்டு ஆராய்ச்சி மிகவும் விரிவாகவே எழுதப்பட்டுள்ளது. கபிலரது வாழ்க்கை வரலாறு, பழைய பாடல்களின் உதவியோடு தொடர்புபடுத்தி எழுதப்பட்டுள்ளது. மேலும் நிறைய உவமைகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. கபிலரின் பெயர்க்காரணம், பிறந்த இடம், குலம், சமயம், காலம், பெருமை, கபிலரைப் பாடியோர், கபிலரால் பாடப்பட்டோர், மற்றைய அகப் பகுதிகள், புறப்பொருட் பகுதியும் பிறவும் என ஒன்றுவிடாமல் நா.மு.வேங்கடசாமி நாட்டார் பதிவு செய்திருக்கிறார். பிற்சேர்க்கையாக வே.ரெட்டியாரின் "கபிலர்' ஆராய்ச்சியும் இணைக்கப்பட்டுள்ளது கபிலர் பற்றிய மேல் ஆய்வுக்குப் பெரிதும் உதவும்.

நன்றி : தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment